30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
face care1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது!…

கொலஸ்ட்ரால்- நம்மல கொஞ்சம் பயமுறுத்த கூடிய ஒன்றுதான். பலருக்கு எதை பார்த்தாலும் அதுல கொலஸ்ட்ரால் இருக்குமோனு ஒருவித பயமும் தயக்கமும் எப்போதும் இருக்கத்தான் செய்யும். கொலஸ்ட்ரால் கொஞ்சம் மோசமான ஒன்றுதான். இருப்பினும் இதை மிக எளிதில் குறைத்து விடலாம். பொதுவாக வயிற்றில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைக்க தான் பாடாய்படுவார்கள்.

ஆனால், எப்படியோ இதை குறைத்தும் விடலாம். தொடை, வயிறு, கை, போன்ற பகுதியில் இருக்க கூடிய கொலஸ்ட்ராலை நம்மால் குறைக்க இயலும். இதுவே முகத்தில் இருந்தால் அவ்வளவு தான். எப்படி நமது முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைப்பது என்பதற்கான தீர்வே இந்த பதிவு. வாங்க, எப்படினு தெரிஞ்சிக்கலாம்.

face care1

எப்படி சேர்கிறது..?

உடலில் சேர கூடிய கொலெஸ்ட்ராலில் இரு வகைகள் உண்டு. ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் இன்னொன்று கெட்ட கொலஸ்ட்ரால். இதில் இரண்டாவது வகை நமது உடலுக்கு ஆபத்தை தர கூடியது. இவை முகத்தில் சேர்ந்தால் குறைப்பது கொஞ்சம் கடினம். சரி இதை எப்படி வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் சரி செய்வது என்பதை இப்போது பார்ப்போம்.

ஆப்பிள் சிடர் வினிகர்

உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க பல வழிகளில் இதுவும் ஒன்று. நீங்கள் ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சேர்த்து குடித்து வந்தால் எளிதாக இந்த பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம். இந்த வைத்தியம் முகத்தில் கண் பகுதியில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை வெளியேற்றி விடும்.

பூண்டு

பல வகையான மூலிகை தன்மை நிறைந்த உணவு பொருட்களில் முதன்மையானது இந்த பூண்டு. நீங்கள் இதனை உங்களின் முக பிரச்சினைக்கும் பயன்படுத்தலாம். பூண்டை அரைத்து கொழுப்புகள் உள்ள பகுதியில் தடவி வந்தால் கொலஸ்ட்ரால் குறைந்து விடும்.

வெங்காய வைத்தியம்

பொதுவாக வெங்காயத்தின் பயன்கள் எண்ணில் அடங்காதவை. உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை குறைக்க இந்த வெங்காயம் பெரிதும் உதவும். இதனை இப்படி பயன்படுத்தினால் எளிதாக முகத்தில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ரால் குறைத்து விடும். தேவையானவை… உப்பு ஒரு சிட்டிகை வெங்காய சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-

வெங்காயத்தை அரைத்து கொண்டு, அதன் சாற்றுடன் உப்பை சேர்த்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி இரவு நேரத்தில் இரவு முழுவதும் காய விட்டு மறுநாள் காலையில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கொலஸ்ட்ரால் குறைந்து விடும்.

இந்த விதை போதுமே..!

இரவு முழுவதும் வெந்தயத்தை நீரில் ஊற வைத்து கொள்ளவும். அடுத்து இந்த நீரை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். மேலும், இந்த நீரை கொண்டு முகத்தில் தடவி மசாஜூம் செய்யலாம். இது நல்ல பலனை உங்களுக்கு தரும்.

டீ பேக்

கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய வேறொரு எளிய வழி இது. டீ பேக்கை எடுத்து முகத்தில் கண் பகுதியில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் எளிதாக கொலஸ்ட்ரால் குறைந்து விடும். மேலும், முகத்தில் உள்ள தூசுகளும் நீங்கி விடும்.

வாழைப்பழ தோல்

வாழைப்பழ தோலில் ஏராளமான அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இதனை முகத்தில் தேய்த்தால் விரைவிலே கொலஸ்ட்ராலை முக பகுதியில் இருந்து குறைத்து விடலாம். அல்லது ஆமணக்கு எண்ணெய்யையும் நாம் முக பகுதியில் தடவி கொலஸ்ட்ராலை குறைக்க முடியும்.

 

Related posts

முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

சரும நிறத்தை அதிகரிக்கும் புளி

nathan

பெண்களே சீக்கிரம் வெள்ளையாக வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

இதோ உங்களுக்காக டிப்ஸ்.! கண்கருவளையம்ஆயுர்வேத_வழிகள்

nathan

நீங்களே பாருங்க.! மகன் ராணுவ வீரனாக வந்த போது மீன் விற்கும் தாய் செய்த செயலைப் பாருங்க…

nathan

கருப்பழகை மாற்றும் சிகப்பழகு வேண்டுமா?

nathan

இதோ சில டிப்ஸ்… முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா?

nathan

சருமத்திற்கு பூசணி தரும் அழகு!இதை முயன்று பாருங்கள்

nathan