பெண்களே! உங்களுக்கு அழகான காதுகள் வேண்டுமா? அழகில் கவனம் செலுத்தும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தவற விடுகின்றனர். சில பெண்கள் சிலர் பார்க்க மிகவும் அழகாக இருப்பார்கள். ஆனால், காது மட்டும் தனியாகக் கருத்துப்போய் இருக்கும். முகத்துக்குக் காட்டும் அக்கறை யைக் காதுக்கு காட்டாமல் இருப்பதுதான் இதற்குக் காரணம். இதனால் காதுப் பகுதி தடித்து, நிறமும் கருத்து விடுகிறது.
அதிக எடையுள்ள தோடுகள், பெரியபெரிய மாட்டல்களை அணிவதால், காதுத் துளை பெரிதாகி, காது தொங்க ஆரம்பித்து விடும். சிலருக்குக் காது அறுந்துக்கூடப் போகநேரிடும். இதனை எளிதாக சரி செய்துகொள்ள முடியும். மரத்துப்போக மருந்து கொடுத்து, பெரிதாக உள்ள துளைகளில் லேசாகக் கீறிவிட்டு தைத்து விடுவார்கள். சில நாட்களில் துளைகள் மூடி விடும்.
ஒரு சிலருக்கு சில உலோகங்களினால் ஒவ்வாமை ஏற்படக் கூடும். புண்கள் ஏற்பட லாம். அவற்றைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒரு முறை தலைக்குக் குளிக்கும் போதாவது தோடுகளைக் கழற்றி சோப்பு நீரில் பிரெஷ் கொண்டு சுத்தம் செய்து அணியலாம். தரமான பட்ஸை ஏதேனும் ஓர் எண்ணெயில் தோய்த்துக்கொண்டு, காது ஓரங்களைச் சுத்தம் செய்யலாம்.