24.7 C
Chennai
Saturday, Dec 13, 2025
cerry1
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்!…

செக்க சிவந்த பழம் மட்டுமில்லாமல் சாப்பிடுவதற்கு அதிக சுவையும் கொண்ட பழம் இந்த செர்ரி. இதில் ஆரோக்கிய குறிப்புகள் ஒரு புறம் இருக்க, இதனால் ஏற்படும் இளமைக்கான பயன்கள் ஏராளம்.செர்ரியை வைத்து பலவித அற்புதங்களை மிக எளிதாக நம்மால் செய்ய முடியும். அதுவும் உங்களின் வயதை கூட குறைக்க முடியும்.

அதோடு முகத்தில் உள்ள எல்லாவித பிரச்சினைகளையும் இந்த செர்ரி பழம் தீர்த்து வைக்குமாம்.

இந்த சின்ன பழம் இவ்வளவு நன்மைகளை கொண்டுள்ளதா..?

cerry1

சிறுசு..ஆனா, பெருசு..!

இந்த செர்ரி பழம் பார்ப்பதற்கு தான் மிக சிறிதாக இருக்கிறது. ஆனால், இதனால் ஏற்படுகின்ற பலன்கள் ஏராளம். இதற்கெல்லாம் காரணம் இதிலுள்ள ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் தான்.

குறிப்பாக வைட்டமின் எ, சி, பாஸ்பரஸ், மெக்னீசியம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை தான் காரணம்.

பருக்களை ஒழிக்க

முகத்தை கெடுக்கும் பருக்கள் மற்றும் முகத்தில் சேர்ந்துள்ள கிருமிகள் போன்றவற்றை நீக்க இந்த குறிப்பு பயன்படும்.

தேவையானவை…

தேன் 1 ஸ்பூன்

செர்ரி பழம் 5

முட்டை வெள்ளை கரு 1

எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-

செர்ரி பழம் பழத்தை கொட்டை நீக்கிய பின்னர் தேன் மற்றும் முட்டை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும். பின் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசவும்.

இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் பருக்கள் மறைந்து, முகம் வெண்மையாக மாறும்.

சுருக்கங்கள் மறைய

முகத்தில் உள்ள சுருக்கங்களை மறைய வைக்க இந்த 2 பழம் நன்கு உதவும். இவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தான் இதன் தன்மைக்கு முக்கிய காரணமாகும்.

தேவையானவை..

5 செரி

4 ஸ்ட்ராவ்பெர்ரி

செய்முறை :-

செர்ரி பழம் மற்றும் ஸ்ட்ராவ்பெர்ரி ஆகியவற்றை ஒன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

இவ்வாறு செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகத்தில் உள்ள சுருக்கங்கள் எல்லாம் காணாமல் போய் விடும்.

இளமையான சருமத்திற்கு

முகம் நீண்ட நாட்கள் இளமையாக இருக்க இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.

இதற்கு தேவையானவை…

யோகர்ட் 2 ஸ்பூன்

செர்ரி பழம் 5

செய்முறை :-

முதலில் செர்ரி பழத்தின் கொட்டையை நீக்கி விட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து யோகர்ட் சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும்.

இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு பத்து வயது குறைந்தது போன்று இருக்கும்.

வெண்மையான முகத்திற்கு

முகம் வெண்மையாக மாற மிக எளிமையான குறிப்பு இதுவே.

இதற்கு தேவையானவை…

மஞ்சள் 1 ஸ்பூன்

தேன் 1 ஸ்பூன்

செர்ரி பழம் 6

செய்முறை :-

செர்ரி பழத்தை நன்றாக அரைத்து கொண்டு, அதனுடன் தேன் சேர்க்கவும். பின்னர் சிறிது மஞ்சள் சேர்த்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவவும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவான வெண்மை பெறும்.

Related posts

சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு சருமத்தைப் பராமரித்து வந்தாலே சரும அழகை மேம்படுத்தலாம்.

nathan

உங்களுக்கு தெரியுமா வாஸ்துப்படி சில செய்யக்கூடாத செயல்கள் என்ன….?

nathan

அழகை உடனே அதிகரித்து காட்ட வேண்டுமா, beauty tips in tamil

nathan

பால் போன்ற நிறம் கொண்ட சருமம் வேண்டுமா?

nathan

டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்! பாரம்பரியம் VS பார்லர் ! ஹெல்த் ஸ்பெஷல்!!

nathan

குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க அச்சப்படுகிறவர்களுக்கு ஆரோக்கியமான குளியல் சித்தமருத்துவ முறைப்படி!…

sangika

காலையில் எழுந்ததும் எதனை கொண்டு பல துலக்குகுறீர்கள்!…

sangika

விஜய் மற்றும் தோனியின் திடீர் சந்திப்பு! ரசிகர்கள் செய்த காரியம்

nathan

சரும வறட்சியை போக்கும் பீர் ஃபேஷியல்

nathan