22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
Apple Juice1
அழகு குறிப்புகள்

இரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஜூஸ் உதவுகிறது!…

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் வயறு வலி, தசை பிடிப்பு, உடல் வலு குறைவது, போன்ற சிறு, சிறு கோளாறுகளில் இருந்தும் கல்லீரல் செயற்திறன் குறைபாடு, செரிமான கோளாறுகள், மலமிளக்க பிரச்சனைகள் என பெரிய, பெரிய பிரச்சனைகள் வரை உண்டாகும்.

அதிகமாக எண்ணெய் பயன்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், சரியான உடல் வேலை இல்லாமல் இருப்பது போன்றவை தான் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணியாக இருக்கிறது.

உங்களுக்கும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்றால், அதை எளிதாக குறைக்க, கரைக்க் இந்த ஜூஸை குடியுங்கள்.

Apple Juice1

தேவையான பொருட்கள்!

ஆப்பிள் – 1
பீச் – 1
பேரிக்காய் – 1
வைட்டமின் சத்துக்கள்!
உடலில் அதிகம் கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்க உதவும் இந்த ஆப்பிள், பீச், பேரிக்காய் ஜூஸை குடித்து வந்தால், உடலுக்கு கிடைக்கும் விராமின் சத்துக்கள்,வைட்டமின் A, B, B1, B2, C, E மற்றும் K.

செய்முறை!

ஆப்பிள், பீச் மற்றும் பேரிக்காய் பழங்களை சுத்தமாக கழுவி எடுத்துக் கொள்ளுங்கள்.
பீச், பேரிக்காய் மற்றும் ஆப்பிளில் இருக்கும் விதைகளை நீக்கிவிடுங்கள்.
விதை நீக்கப்பட்ட பழங்களை சின்ன சின்னதாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய பழங்களை ஒன்றாக சேர்த்து ஜூஸரில் போட்டு அரைக்கவும்.

நன்மைகள்!

ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
உடலில் கொலஸ்ட்ரால் அதிகம் சேர்க்காமல் தடுக்க உதவுகிறது.
சரும செல்களின் வயதாகும் தன்மையை குறைத்து, இளமையாக தோற்றமளிக்க செய்கிறது.


இந்த ஜூஸை குடிப்பதால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகரிக்கும். இதனால், நோய் எதிர்ப்பு திறன் சீராகும்.

இதயம், பற்களின் வலிமையை ஊக்குவிக்கும்.
இரத்தத்தை சுத்திகரிக்க இந்த ஜூஸ் உதவுகிறது.
செரிமானத்தை சீராக்கி, மலமிளக்க பிரச்சனை உண்டாகாமல் பாதுகாக்கிறது.


கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

குறிப்பு!

தேவைப்பட்டால் சிறிய துண்டு இஞ்சியை இந்த ஜூஸுடன் சேர்த்துக் கொள்ளலாம். இதுவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவி புரியும்.

Related posts

இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் – Best Beauty Secrets of Indian Women

nathan

த்ரெட்டிங் செய்யவதால் ஏற்படும் அபாயம் பெண்களே கவணம்!!

nathan

வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே!

nathan

சூட்டை கிளப்பி விடும் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சீரியல் நடிகை!

nathan

அழகு குறிப்புகள்:சுருக்கமே இல்லாமல்…

nathan

இப்படித்தான் பயன்படுத்தணும்! மீசை முடி வளர்ச்சியை குறைக்க..

nathan

நீங்கள் கவர்ச்சியாக இருக்க உடுக்க வேண்டிய உடுப்புகள் ,tamil beauty tips

nathan

ரம் ஃபுரூட் கேக் ரெசிபி

nathan

கழுத்தில் கருவளையம்

nathan