25.9 C
Chennai
Sunday, Feb 23, 2025
5545
அழகு குறிப்புகள்

பல் வலியை போக்கும் வெங்காயம் எப்படி என்று தெரியனுமா? அப்ப உடனே இத படிங்க…

பற்களில் சிலசமயம் எல்லாருக்கும் தாங்க முடியாத வலியை ஏற்படுத்திவிடும். பற்களில் உண்டாகும் கிருமிகளாலும், பலவீனமான ஈறுகளினாலும் பல்வலி உண்டாகும்.

கீழ்கண்டமுறைகளிலேதாவது பயன்படுத்திப் பாருங்கள். இயற்கையான வைத்தியம். பாதுகாப்பானதும் கூட.

பூண்டு :

ஒரு பல் பூண்டை நசுக்கி வலி உள்ள இடத்தில் வைக்க பல்வலி படிப்படியாக குறையும். பூண்டில் அல்லிசின் என்ற நோயை எதிர்க்கும் ரசாயனப் பொருள் உள்ளதால் நல்ல பலன் கிடைக்கும்.

உப்பு:

ஒரு கப் வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக் கரைத்து, லேசான சூட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வாயில் ஊற்றி முழுவதும் கொப்பளித்து துப்பிவிடவும். இவ்வாறு தினமும் செய்து வர, பல்வலி மற்றும் வீக்கம் குறையும். மேலும் உப்பு நீரினால் கிருமிகளும் அழியும்.

5545

வெங்காயம் :

பச்சை வெங்காயத்தை கடித்து மென்று சாற்றை விழுங்க பல் வலி குறையும். பச்சை வெங்காயத்திலுள்ள காரத்தன்மையானது பல்லிலுள்ள கிருமிகளை அழிப்பது மட்டுமல்லாமல் பல் சொத்தையையும் தடுக்கும்.

நல்லெண்ணெய் :

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 15 நிமிடங்கள் கொப்பளிக்க வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும். அதனை துப்பி விடவும். இவ்வாறு சில நாட்கள் செய்ய வாயிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் விலகும்.

சூடம் :

சூடத்தை பல் வலி இருந்த இடத்தில் வைத்து கடித்தால், சிறிது நேரத்தில் பல் வலியானது நின்றுவிடும்.

துத்தி

துத்தி இலையையும் அதன் வேரையும் ஒன்றாக சேர்த்து கசாயம் செய்து வாய் கொப்பளித்து வர பல்வலி ,பல் கூச்சம் , பல் ஆட்டம் குணமாகும்

கோதுமைப்புல் சாறு :

கோதுமைப்புல் சாற்றினை அருந்தி வர பல் வலி விலகும். ஒரு சிறிய தொட்டியில் கோதுமைகளை ஆங்காங்கே பதித்து தண்ணீர் விட்டு வந்தால், ஓரிரு நாட்களில் அதிலிருந்து புல் முளைக்கும். அதனை எடுத்து சுத்தப்படுத்தி மைய அரைத்து சாறெடுத்து அருந்தலாம்.

கொய்யாப்பழ இலை :

புதிய இரண்டு இளம் இலைகளைப் பறித்து வாயில் போட்டு மென்று, அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்யலாம். இது சிறந்த கிருமி நாசினி.

இஞ்சி சாறு :

இஞ்சிச்சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல்வலி குறையும். சுக்கு பொடியை வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்தி விடவும். சுக்கு பல் வீக்கத்தில் ஏற்படும் கெட்ட நீரை உறிஞ்சி, பல் வலியை போக்கும்.

கிராம்பு :

இரண்டு கிராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால்,பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

Related posts

அக்குள் கருமையை நீக்கும் எளிய வைத்திய முறைகள்…!

nathan

நீங்களே பாருங்க.! தனுஷுடன் இரவு பார்ட்டியில் கும்மாளம் அடித்த மச்சினிச்சி!..

nathan

பெண்கள் இதை அக்குளில் தடவினால், கருமையும் வராது ஷேவ் பண்ண அவசியம் இருக்காது

nathan

இ.றுக்கமான உடை… ம.னைவியை கொன்ற க.ணவன் எழுதிய 11 பக்க கடிதம்!!

nathan

ஆரஞ்சு பழத்தை வைத்து சருமம், கூந்தலை பராமரிக்கும் முறைகளை பார்க்கலாம்.

nathan

முகப்பருக்களை ஒழிக்க காளான்!…

sangika

உருளைக்கிழங்கு சாறு கரும் புள்ளிகள் மற்றும் தோல் தொடர்பான பல பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.

nathan

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

விஜயின் அளவில்லாத பாசம்!– எதிர்பாராத தங்கை மரணம்

nathan