29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
oilface
அழகு குறிப்புகள்

முகத்தில் எண்ணெய் வடிதலை நிறுத்த இதை செய்யுங்கள்!….

எப்போவுமே முகம் முழுக்க பருக்களா இருக்கா..? பருக்கள் உங்க முகத்தையே கெடுக்குதா..? இனி அந்த கவலையை ஒட்டு மொத்தமா ஒழித்து கட்ட ஒரு எளிய வழி இருக்குங்க. அது என்னனு நினைக்குறீங்களா..? ஒரு அற்புத பழத்தை வைத்தே நாம் எளிதில் முக பிரச்சினைகள் அனைத்துமே சரி செய்து விடலாம்.

குறிப்பாக முகத்தில் உள்ள பருக்களை முழுவதுமாக சரி செய்து விடலாம். அதற்கு ஒரே இரு பழம் மட்டும் போதும்க. அது தான் முலாம் பழம். உங்களின் முக பிரச்சினைகள் அனைத்தையும் எளிமையாக சரி செய்ய இந்த பழம் நன்கு உதவும். வாங்க, முலாம் பழத்தின் நச்சுனு 5 டிப்ஸ்களை பார்ப்போம்.

oilface

இனிமையான பழம்..!

பலருக்கு இந்த முலாம் பழம் ஜுஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த பழத்தை அப்படியே சாப்பிட்டாலோ அல்லது ஜுஸ் செய்து சாப்பிட்டாலோ மிக சுவையாக இருக்கும். இதில் ஏராளமான பயன்கள் உள்ளது. உடல் ஆரோக்கியம் முதல் முக பிரச்சினைகள் வரை அனைத்தையும் இது சரி செய்து விடும்.

அழுக்குகளை நீக்க

முகத்தில் சேர்ந்துள்ள தூசுகள் மற்றும் அழுக்குகளை நீக்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையானவை… தேன் 1 ஸ்பூன் முலாம் பழம் ஜுஸ் 2 ஸ்பூன் மஞ்சள் அரை ஸ்பூன்

செய்முறை :-

முதலில் முலாம் பழத்தை சாறு போன்று அரிது கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் மற்றும் மஞ்சள் சேர்த்து முகத்தில் தடவவும். 15 நிமிடம் கழித்து முகத்தை சாதாரண நீரில் கழுவவும். இப்படி செய்து வந்தால் முகத்தில் வெண்மை பெறும்.

எண்ணெய் வடிதலை நிறுத்த

முகத்தில் எண்ணெய் அதிகமாக வடிந்தால், இந்த முலாம் டிப்ஸை வைத்து சரி செய்து விடலாம். தேவையானவை :- முலாம் பழம் ஜுஸ் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் கடலை மாவு 1 ஸ்பூன்

செய்முறை :-

கடலை மாவு மற்றும் எலுமிச்சையை நன்றாக கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் முலாம் பழ சாற்றை கலந்து முகத்தில் பூசி கொள்ளவும். 20 நிமிடத்திற்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரில் கழுவலாம். இவ்வாறு செய்து வந்தால் எண்ணெய் வடிதல் நின்று, பருக்களும் வராதாம்.

முகம் மினுமினுக்க

முகத்தை மினுமினுப்பாக வைத்து கொள்ள இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வரலாம். தேவையானவை :- பால் பவ்டர் 1 ஸ்பூன் முலாம் சாறு 2 ஸ்பூன்

செய்முறை :-

பால் பவ்டரை முலாம் சாறுடன் கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை முகத்தில் ஃபேஸ் பேக் போல போட்டு கொள்ளவும். 15 நிமிடம் சென்று முகத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த குறிப்பு உங்கள் முகத்தை பளபளவென மின்னும் சருமத்தை தரும்.

இப்படியும் செய்யலாம்..!

முலாம் பழத்தை சாப்பிட்டாலும் நமது உடலுக்கும் முக அழகிற்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் முலாம் பழத்தை அப்படியேவும் முகத்தில் தடவி மசாஜ் செய்து, முகத்தை கழுவினால் முகம் அழகு பெறும்.

Related posts

உடல் சூட்டை தடுக்கும் அற்புத வழிகள்…!

nathan

பருக்களுக்கு தீர்வை தரும் எளிய வழிகள்!…

sangika

சரும அலர்ஜியை போக்க வழிகள்

nathan

பருவால் உண்டான வடு மறைய ஃபேஸ் பேக்

nathan

நேபாள விமான விபத்தின் கடைசி நிமிடங்கள்! Video!

nathan

உடலில் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள சில டிப்ஸ்…நீங்களும் முயற்சி செய்யுங்கள்

nathan

நாம் சாப்பிடும் உணவு மூலமாகவே அழகை அதிகப்படுத்தி காட்டலாம். …..

sangika

மகளிருக்கான இலையுதிர் கால தோல் பராமரிப்பு குறிப்புகள்

nathan

பளிச்சென்ற முகத்திற்கு

nathan