27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
p46a
அழகு குறிப்புகள்

தாய்ப்பால் நன்றாகச் சுரக்க மிளகை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்தர்களின் வாக்கு. இதில்,மிளகு, வால் மிளகு’ என இரு வகைகள் உள்ளன. நம் அன்றாடச் சமையலில் முக்கியப் பங்கு வகிக்கும் மிளகின் மருத்துவ குணங்கள் குறித்து பார்ப்போம்.

*திரிகடுகு சூரணத்தில் சுக்கு, திப்பிலியுடன் மிளகு சேர்க்கப்படும். இது நெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கும்.

*பசும்பாலுடன் 10 பூண்டுப் பற்களைச் சேர்த்துக் கொதிக்க வைத்து மிளகுத்தூள், மஞ்சள்தூள், பனங்கற்கண்டு சேர்த்துக் கடைந்து குடித்தால் நெஞ்சுச்சளி விலகும்.

p46a

*மிளகைப் பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் இருமல் நிற்கும். 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகு, நீர் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடித்தால் கோழைக்கட்டு நீங்கும்.

*10 மிளகை எண்ணெய் ஊற்றாத வாணலியில் போட்டு வறுக்க வேண்டும். சூடு ஆறியதும், ஒரு டம்ளர் நீர்விட்டுக் கொதிக்கவைத்து வடிகட்ட வேண்டும். அதைக் காலை, மாலை, இரவு என அருந்தி வந்தால் காய்ச்சல் குணமாகும்.

*சுக்குடன் மிளகு சேர்த்துப் பொடியாக்கி, கருப்பட்டி கலந்து சாப்பிட்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும்.

*பல்வலி, ஈறுவலி, சொத்தைப்பல் உள்ளிட்ட பல் நோய்களுக்கு மிளகுடன் கல் உப்பு சேர்த்துப் பொடியாக்கி, பல் துலக்கினால் நிவாரணம் கிடைக்கும்.

*ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து முகப் பருக்களின் மீது பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் அவை உலர்ந்து உதிர்ந்துவிடும்.

Related posts

இதை தவிர்த்தாலே எளிதாக உடல் எடையை குறைத்து விடலாம்!…

sangika

இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் என்ன நடக்கும்?

nathan

கருமையை போக்கி, பொலிவை பெற இதோ டிப்ஸ்!!

nathan

கொதிக்க வைத்த நீரில் ஆவி பிடித்தாலே போதும், முகத்தில் உள்ள பருக்கள் காணாமல் போகும்.

nathan

என்ன ​கொடுமை இது? கண்ணாடி முன் படு கிளாமர் உடையில் கஸ்தூரி எடுத்த செல்பி.

nathan

இரண்டே நாளில் முகத்தில் உள்ள கரும் தழும்புகளை போக்க ஜாதிக்காய்…

sangika

விஜயின் அளவில்லாத பாசம்!– எதிர்பாராத தங்கை மரணம்

nathan

பட்டான அழகிய சருமத்தை பெறுவது மிகவும் கடினமான காரியம் அல்ல!..

sangika

நம்ப முடியலையே…அச்சு அசலாக நயன்தாரா போலவே மாறிய அனிகா…

nathan