23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
dandurf 1
அழகு குறிப்புகள்

பொடுகை முழுமையாக போக்க! இத படிங்க…

இன்று நாம் பயன்படுத்துவதை போன்றே பல வருடங்களுக்கு முன்பும் எண்ணற்ற குறிப்புகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இது உடலில் ஏற்படும் நோய்களுக்கு மட்டுமில்லை, நமது முடி, முகம் போன்ற எல்லாவற்றிற்கும் சிறந்த தீர்வை தரும்.

இந்த பழங்கால முறைகள் உங்களின் முடியின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வை தருமாம்..!

dandurf 1

இன்று நாம் மண்டையை போட்டு குழப்பி கொள்ளும் முடி பிரச்சினைகளுக்கும் நம் முன்னோர்கள் பலவித தீர்வை கூறியுள்ளனர். என்னென்ன குறிப்புகள் அவர்கள் சொல்லி உள்ளனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பலரின் பிரச்சினை..!

ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இந்த முடி பிரச்சினை பெரும்பாடாக உள்ளது. முடி உதிர்தல், வெள்ளை முடி வளர்தல், பொடுகு போன்றவை மிக முக்கிய பிரச்சினையாக கருதப்படுகிறது. முடியின் பலவித பிரச்சினைக்ளுக்கு இயற்கை வழி முறைகளே சரியான தீர்வை தருமாம்.

இத முதல்ல ட்ரை பண்ணுங்க..!

மோசமான பாதிப்புக்குள்ளான உங்கள் முடியை எளிதில் நாம் குணப்படுத்தி விடலாம். அதற்கு இந்த முன்னோர்களின் முறையே போதும்.

இதற்கு தேவையானவை…
தேன் 2 ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் 1/4 கப்

செய்முறை :-

தேனையும் ஆலிவ் எண்ணெய்யையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை ஒரு பாத்திரத்தில் 3 முதல் 5 நிமிடம் மிதமான சூட்டில் சூடு செய்து ஆறிய பின்னர் தலைக்கு தடவவும். பிறகு 30 நிமிடம் கழித்து தலையை சிறிது சிகைக்காய் பயன்படுத்தி அலசவும். இந்த முறை பாதிப்படைந்த முடியை சரி செய்து விடும்.

பொடுகை முழுமையாக போக்க

நமது முன்னோர்கள் இந்த குறிப்பை தான் பயன்படுத்தி வந்தார்களாம். பொடுகை முழுமையாக போக்க தேவையானவை… தேங்காய் எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் யோகர்ட் 3 டேபிள்ஸ்பூன் கற்றாழை ஜெல் 4 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் கற்றாழை ஜெல்லை தனியாக எடுத்து கொள்ளவும். அடுத்து யோகர்ட் மற்றும் தேங்காய் எண்ணெய்யை இவற்றுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை தலையில் ஒவ்வொரு பக்கமாக பிரித்து பூசவும். 30 நிமிடம் கழித்து முடியை அலசவும். இதனை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இந்த முறை தெரியுமா..?

முடியின் பலவித பிரச்சினைகளை தீர்க்க இந்த பதிவு உங்களுக்கு பயன்படும்.

தேவையானவை…
வாழைப்பழம் 1

தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன்

ஒரு துண்டு கற்பூரம்

செய்முறை :-

முதலில் வாழைப்பழத்தை நன்கு அரைத்து கொள்ள வேண்டும். அடுத்து இவற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். இறுதியாக கற்பூரத்தை நுணுக்கி இதில் சேர்த்து தலையில் தடவவும். 20 நிமிடம் கழித்து தலையை சிகைக்காய் பயன்படுத்தி அலசவும். முடியில் உள்ள அழுக்குளை நீக்கி, நீண்ட அடர்த்தியான முடியை தருமாம்.

சிறந்த முறை

இந்த முறையை இன்றும் நம்மில் பலர் பயன்படுத்துகின்றோம். இதனை தயாரிக்க தேவையானவை…

முட்டை 1

தயிர் 2 ஸ்பூன்

செய்முறை :-

முட்டையை நன்கு அடித்து கொண்டு, தயிரை இதனுடன் சேர்த்து கொள்ளவும். இந்த கலவையை தலைக்கு தடவி மாஸ்ஜை மென்மையாக கொடுக்கவும். 20 நிமிடம் கழித்து சிகைக்காய் பயன்படுத்தி தலையை அலசினால் முடியின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விடும்.

Related posts

அனிதா சம்பத் கணவரை விவாகரத்து செய்வதாக ​வௌிவந்த செய்தி! அவரே வௌியிட்ட தகவல்!

nathan

தோல் வறண்டு போவது ஏன், அதை தவிர்ப்பது எப்படி?

nathan

மீசை போன்ற ரோமங்கள் உதிர

nathan

என்றும் இளமையுடன் வாழ என்ன செய்யலாம்?..!! இளம் வயதில் முதுமை?..

nathan

நமது கண்களைச் சுற்றி ஏன் கருவளையம் வருகிறது? அதை வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு எப்படி நீக்கி தீர்வு காண்பது

nathan

முகத்தில் பேசியல் செய்வது எப்படி

nathan

வயிறு சம்பந்தமான நோய்கள் குணமாக சூப்பர் டிப்ஸ்.

nathan

முகத்தை அழகாக மாற்றும் கோப்பி

nathan

யாழில் பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முயன்ற தாய்

nathan