26.2 C
Chennai
Sunday, Nov 24, 2024
milk
அழகு குறிப்புகள்

இதிலுள்ள நோய் எதிர்ப்புத் தன்மை உடல்நலக் குறைபாடுகளை நீக்கும்…

1.தேனும் லவங்கப்பட்டையும்

காலை வேளையில் எழுந்த உடன் பால் கலந்த டீ, காபி சாப்பிடுவதற்கு பதிலாக சூடான நீரில் லவங்கபட்டையை தூளாக்கி அதனுடன் தேன் கலந்து பருகி வர தொண்டைக்கு இதமாக இருக்கும்.

குளிர்காலத்தில் லவங்கபட்டையை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதனுடன் இஞ்சியையும் சேர்த்து கொள்வதன்மூலம் சளி தொந்தரவில் இருந்து விடுபடலாம். இலவங்கப்பட்டை இலவங்கம், மிளகு மற்றும் தேன் ஆகியவற்றை நீரில் கலந்து கொதிக்க வைக்க வேண்டும்.

இதை வடிகட்டி அருந்தினால் தொண்டை வலி குறையும். சளித்தொல்லை அதிகமாகாமல் தடுக்கலாம்.

2.ஏலக்காய் சீரகம் பொடி

ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்து காலையும், மாலையும் சாப்பிட்டு வர சளி தொந்தரவுகள் கட்டுப்படும்.

ஏலக்காயை பொடி செய்து சுடுநீரில் கலந்து டீயாக தயாரித்து குடிக்கலாம். இது குளிர்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்கும்.

இஞ்சியை இடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடிக்க மார்பு சளி தீரும்.

3.ஜாதிக்காய், சுக்கு

ஜாதிக்காய்க்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ஆற்றல் உண்டு. சூடான பாலில் சிறிதளவு தேன் சேர்த்து அதனுடன் ஜாதிக்காயையும், ஏலக்காயையும் பொடித்து போட்டு பருகலாம்.

இது குளிர்கால நோய்களை தடுக்கும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்து பருகலாம்.

4.பால் மஞ்சள்தூள் பனங்கல்கண்டு

பாட்டி அடிக்கடி சொல்லும் வைத்தியமே பாலுடன் மஞ்சள்தூள் கலந்து சாப்பிடுவதுதான். பொதுவாகவே, குளிர்காலத்தில் மஞ்சள் தூளை பாலில் கலந்து கூடவே பனங்கல்கண்டு கலந்து சாப்பிட்டு வர பல நோய் தொற்றுகள் வராமல் காக்கலாம்.

மிளகை நன்றாக இடித்து தூள் ஆக்கி அதனை தேனில் கலந்து மூன்று முறை சாப்பிட்டு வர இரண்டு நாளில் சளி மாயமாகும்.

milk

5.தூதுவளை ரசம், சின்ன வெங்காயம்

மழைக் காலத்திலும், பனிக்காலத்திலும் பகல் வேளையில் தூதுவளை ரசம் வைத்துச் சாப்பிட்டால் ஜலதோஷம் பிடிக்காது.

சின்ன வெங்காயம் சளியை முறிக்கும். சின்ன வெங்காயத்தை சிறியதாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி மிளகு தூள் கலந்து சாப்பிட்டால் சளி கரையும்.

6.புகை மருந்து

புகை இதயத்திற்கு பகை, ஆனால் இந்த புகை சளிக்கு பகை. அதிகமாக சளி பிடித்து, தலை கனத்துக் கொண்டிருந்தால் ஆவாரை வேரை நெருப்பில் சுட்டு, வெளிப்படும் புகையை சுவாசிக்க வேண்டும்.

இதன் மூலம் அதிகமாக சளி வெளியேறுவதோடு பூரண குணம் கிடைக்கும். இதே போல மஞ்சளையும் சுட்டு அதன் புகையை சுவாசிக்கலாம்.

7.மூக்கடைப்பு சரியாக ஓமம்

மூக்கடைப்பு தொல்லை இருந்தால் ஓம விதைகளை துணி ஒன்றில் முடிச்சு போன்று கட்டி, நேரடியாக மூக்கில் வைத்து அதன் மணத்தை இழுத்து சுவாசிக்க வேண்டும்.

மூக்கில் ஏற்படும் அடைப்பினை இது சரி செய்யும். சளி, தொண்டை வலி, காய்ச்சல் இவற்றிற்கு சீரகம் நல்ல மருந்தாகும். இதிலுள்ள நோய் எதிர்ப்புத் தன்மை உடல்நலக் குறைபாடுகளை நீக்கும்.

8.உடல் நலத்தை காக்கும் விரதம்

நம்முடைய முன்னோர்கள் குளிர்காலமான கார்த்திகை, மார்கழி மாதங்களில் அதிக அளவில் விரதம் கடைபிடித்தனர். வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை விழா நாட்களில் பட்டினி இருந்து மறுநாள் சாப்பிடுவார்கள். இதனால் நோய் பாதிப்பு அதிகமாகும்.

குளிர்காலத்தில் சளி பிடிப்பதற்கான அறிகுறிகள் தெரிந்தால் ஒருநாள் முழுவதும் எதுவும் உண்ணாமல் பட்டினி இருக்கலாம். அப்போது உடலிலுள்ள அனைத்து நச்சுத்தன்மை கொண்ட பொருள்களும் வெளியேறும். சளி தொந்தரவு இருக்கும் நாட்களில் எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிடாமல் வேக வைத்த காய்கறி உணவுகளை மட்டுமே சாப்பிடலாம். மூலிகை சூப் அருந்தலாம்.

9.சூடான உணவுகள்

எந்த உணவையும் சூடாக சாப்பிடுவது தொண்டைக்கும் இதமாக இருக்கும். ஜலதோஷம் பிடித்த நேரங்களில் செரிக்க சிரமமான உணவுகளை தவிர்க்க வேண்டும். எண்ணெய் மற்றும் வாசனை பொருள்கள் கலந்த உணவு, பால் சார்ந்த உணவுகளை தவிர்ப்பது நலம்.

வீட்டு மருத்துவத்திற்கு சளி தொந்தரவு கட்டுப்படும். அதற்கும் கட்டுப்படாவிட்டால் மருத்துவரிடம் செல்வதைத்தவிர வேறு வழியில்லை.

Related posts

நகங்கள் அழகாக எளிய வீட்டுக் குறிப்பு!….

sangika

பழங்கள் அழகும் தரும்

nathan

குளிர் காலத்தில் சருமம் வறண்டு போகாமல் இருக்க..

nathan

சருமம் மற்றும் கூந்தலுக்கு ரோஸ் வாட்டர் செய்யும் நன்மைகள்….

sangika

உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற உங்களின் அழகையும் உடல் ஆரோக்கியத்தையும் இரு மடங்காக மாற்ற தினமும் இத செய்யுங்கள்!…

sangika

நடிகை கஜோலுக்கு இவ்வளவு பெரிய மகளா..

nathan

மெலிந்து போன நடிகர்… கண் கலங்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மோகன் லால்!

nathan

இந்த 5 ராசிக்கு சுக்கிர திசையால் அடிக்கப்போகும் யோகம் என்ன?

nathan

இது மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கும் ஒரு பிரச்சினை

sangika