26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
dandurf
அழகு குறிப்புகள்

தலைமுடி அரிப்பை போக்க வீட்டு வைத்தியம் செய்வோம்…

வெயில் காலமோ மழைக்காலமோ அல்லது குளிர்காலமோ எந்த காலமாக இருந்தாலும் நமக்கு இருக்கக்கூடிய மிக முக்கியமான தலைமுடி பிரச்சினை என்றால் அது தலைமுடியின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பு தான்.

ஆம். எல்லா பருவங்களிலும் இந்த பிரச்சினை நமக்கு இருக்கும்.

அது நமக்கு மிகவும் எரிச்சலைக் கொடுக்கும். அதிலும் வெளியிடங்களில் சென்றிருக்கும்போது, இதுபோல் தலையில் அரித்துக் கொண்டே இருந்தால் எப்படி அருவருப்பாக இருக்கும்.

குறிப்பாக இந்த பிரச்சினை பெண்களை விடவும் ஆண்களுக்கே அதிகம் இருக்கிறது.

dandurf

காரணம்

இந்த மாதிரியான தலைமுடி அரிப்பு என்பது எப்படி உண்டாகிறது என்பதே நம்மால் மிகச் சரியாகக் கணிக்க முடியாது.

ஏனென்றால் சிலருக்கு வேர்க்கால்களில் அதிகமாக எண்ணெய் சுரப்பதால் அரிப்பு உண்டாகும்.

சிலருக்கு பொடுகிளாலும் சிலருக்கு அழுக்கு சேர்வதாலும் ஏற்படும். அதில் ஒவ்வொருவருக்கும் இதனால் பெருங்குழப்பம் தான் உண்டாகும்.

என்ன பயன்படுத்தலாம்?

இந்த தலைமுடி அரிப்பைப் போக்குவதற்கு பெரும்பாலும் நமக்குத் தெரிந்த மிக முக்கியமான காரணம் பொடுகு தான்.

அதனால் அரிப்பு ஏற்பட்டாலே அதற்கு பொடுகைப் போக்கும் வழிமுறைகளை மட்டும் தான் கையாளுவோம்.

ஆனால் மற்ற காரணங்களால் ஏற்படுகின்ற அரிப்பைப் போக்க என்ன செய்வது என்பது நமக்குத் தெரியாது.

அதற்காக கண்ட ஷாம்புகளையும் வாங்கி அப்ளை செய்து இன்னும் கொஞ்சம் அதிகமாக்கிக் கொள்ளவே செய்வோம்.

வீட்டு சிகிச்சை

இந்த அரிப்பு ஏதாவது உங்களுடைய ஆரோக்கியம் மற்றும் உடல் நலக்குறைவினால் ஏற்பட்டதா அல்லது பேன் இருப்பதன் காரணமாகவா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

அப்படி இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தி சரிசெய்ய முயற்சி செய்யுங்கள்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் இயற்கையாகவே ஆன்டி மைக்ரோபியல் தன்மையும் ஆண்டி இன்ஃபிளமேட்டரி தன்மையும் அதிகமாகவே இருக்கிறது. இது தலைமுடி அரிப்புக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும்.

ஒரு பெரிய எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு சிறிய காட்டன் பந்தில் தொட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக தலைமுடியின் வேர்க்கால்களில் ஒத்தி எடுங்கள்.

10 முதல் 20 நிமிடங்கள் அப்படியே உலர விட்டுவிட்டு பின்ன்ர் குளிர்ந்த நீரால் அலசுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வாருங்கள். உங்களுடைய வேகாக மாற்றங்கள் ஏற்படுவது தெரிய ஆரம்பிக்கும்.

தலையில் ஏதேனும் சிறிய சிறிய புண்கள் இருந்தால் இந்த முறையைத் தவிர்ப்பது நல்லது.

தேங்காய் எண்ணெய்

பெரும்பாலும் தலைமுடியில் எல்லா சமயங்களிலும் உங்களுக்கு அரிப்பு இருந்ததென்றால் அதற்கு மிக முக்கிய காரணம் தலைமுடியின் வறட்சி தான்.

தலைக்குத் தேவையான ஈரப்பதத்தையும் மாய்ச்சரைஸரையும் கொடுத்தால் போதும், அந்த வகையில் தலைமுடிக்கு மிகச் சிறந்த மாய்ச்சரைஸராக இருப்பது தேங்காய் எண்ணெய் தான் முதல் இடம்.

சிறிதளவு தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். அதை லேசாக சூடுசெய்து, வேர்க்கால்களில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யுங்கள். சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்டு, பின்னர் சில மணிநேரங்கள் ஊறவிடுங்கள்.

பிறகு மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசினால் போதும்.

பேக்கிங் சோடா

இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் அளவுக்கு பேக்கிங் சோடாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல மாற்றிக் கொள்ள வேண்டும்.

இந்த பேஸ்ட்டை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, 10 முதல் 20 நிமிடங்கள் வரை சிறிது உலர விட்டுப் பின் அலசுங்கள்.

பேக்கிங் சோடாவில் உள்ள ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி ஃபங்கல் பண்புகள் தலைமுடி மற்றும் வேர்க்கால்களின் பிஎச் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

ஆனியன் ஜூஸ்

சில வெங்காயத்தை எடுத்துக் கொண்டு அதை பிளண்டரில் போட்டு பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த அளவு வேண்டுமோ அந்த அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை உங்களுடைய முடியின் வேர்க்கால்களில் காட்டன் பாலில் தொட்டு வேர்க்கால்களில் தேய்த்து 20 நிமிடங்கள் உலர விடுங்கள்.

பின்னர் தலையை அலசுங்கள். வெங்காயம் தலையில் தொற்றுக்கள் உண்டாாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

ஆப்பிள் சீடர் வினிகர்

நான்கு கப் தண்ணீரில் ஒரு கப் அளவுக்கு ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து கொள்ளுங்கள். இதை தலையில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி வேர்க்கால்களில் மசாஜ் செய்யுங்கள்.

இதில் மாலிக் அமிலம் இருக்கிறது. இந்த வினிகரில் உள்ள ஆண்டி பாக்டீரியல் மற்றும் ஆண்டி ஃபங்கல் தன்மை உங்கள் தலையின் வேர்க்கால்களில் ஏற்படும் அரிப்பைத் தடுக்கின்றன.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சென்ஸிட்டிவ் கண்களுக்கான மேக்கப் டிப்ஸ்!! | Tamil Beauty Tips

nathan

கற்றாளையை எவ்வாறு எல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா?

sangika

சூட்டை கிளப்பி விடும் பிகினி உடையில் பூனம் பஜ்வா -இதெல்லாம் ரெம்ப ஓவரம்மா…

nathan

முகப்பருக்கள் வர ஆரம்பித்தால், அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் முக அழகே பாழாகிவிடும்.

nathan

மிளிரும் சருமத்தினை பெற 3 அற்புதமான நீர் சிகிச்சை நன்மைகள்…

nathan

சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்ய…

sangika

சூப்பரான …வாழைக்காய் கோப்தா

nathan

:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க

nathan