28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
control diabetes
அழகு குறிப்புகள்

மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை…எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

கணையத்தை பலப்படுத்தும் உணவுகள்

காலங்காலமாகச் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெந்தயத்தை தமிழ் மருத்துவம் பரிந்துரைத்து வருகிறது. இப்போது, அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் வெந்தயம் கணையத்தைப் பலப்படுத்தி, சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என நிருபிக்கப்பட்டுள்ளது.

வெந்தயம் போன்று, நெல்லிக்காய், ஆவாரம் பூ, வல்லாரைக் கீரையும் கணையத்தைப் பலப்படுத்தக் கூடியவையே.

150 மி.லி நீரில், 100 கிராம் அன்று பூத்த, ஆவாரம் பூவைப் போட்டு, மூடிவைத்து நீர் 100 மி.லி-யாக சுண்டும் வரை கொதிக்கவைக்க வேண்டும்.

control diabetes

ஐந்து நெல்லிக்காய்களை விதை நீக்கி, 50 மி.லி கிடைக்கும் வகையில் சிறிது நீர் விட்டு, சாறு எடுக்க வேண்டும்.

நெல்லிச் சாற்றையும், ஆவாரம் பூ டிகாக்‌ஷனையும் தலா 50 மி.லி கலந்து, சிறிது தேன் கலந்து பருக வேண்டும்.

இது, கணையத்தைச் சரிசெய்து இன்சுலின் சுரப்பைச் சீராக்கும். இந்தக் கஷாயத்தை தினமும் வெறும் வயிற்றில் பருகிவர, இன்சுலின் சுரப்பு சீராகும்.

ஆவாரம் பூவில் கேசைன் (Casein) என்ற ரசாயனம், சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும். இந்த ரசாயனம் புத்தம்புதிய ஆவாரம் பூவில்தான் இருக்கும்.

மேலும், ஆவாரம்பூ மலச்சிக்கலைத் தீர்க்கும். சிறுநீரகச் செயல்பாட்டை மேம்படுத்தும். ஆவாரம்பூவைத் தேநீரில் போட்டுக் குடித்துவந்தால், சருமம் பளிச்சிடும்.

நெல்லிக்காயில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைவாக உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்.

பார்வைக் குறைபாடு, கை, கால் நடுக்கம், வீக்கம், சிறுநீரகப் பிரச்னையைச் சரிசெய்யும்.

இந்தக் கஷாயத்தைத் தினமும் எடுத்துக்கொண்டால், சில நாட்களுக்குப் பிறகு சர்க்கரையைக் கட்டுப்படுத்த மாத்திரை, ஊசி எதுவும் தேவை இல்லை.

Related posts

வெளிவந்த தகவல் ! நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து வெளியேறினாரா நடிகர் செந்தில்

nathan

யுவன் ஷங்கர் ராஜாவா இது.. மனைவி வெளியிட்ட போட்டோ

nathan

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

nathan

ரசிகர்களின் சீண்டல் ! இளையராஜாவின் மகனை மதம் மாற்றிவிட்டீர்களே? யுவனின் மனைவி பதிலடி!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…சீன பெண்களை போல அழகில் மின்ன வேண்டுமா? இந்த ஒரு உணவு பொருள் போதும்….!

nathan

கரும்புள்ளிகள், மச்சங்கள், கரும்படலங்கள் – வித்தியாசம் தெரியுமா?

nathan

கை முட்டிகளில் உள்ள கருமை நிறம் மறைய பின்பற்ற வேண்டியவை

nathan

இதை நீங்களே பாருங்க.! உலகிலேயே இதுதான் மிகச்சிறிய ஓட்டலாம்.. சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

nathan

நம்ப முடியலையே… குக் வித் கோமாளி தீபா அக்காவா இது?

nathan