23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

அழகை மெருகூட்ட ரோஸ் வாட்டர் யூஸ் பண்ணுங்க..

s-img-2015-02-05-1423110425-9-rosewaterஅழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்வோம். அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர். உங்கள் வீட்டில் ரோஸ் வாட்டர் இருந்தால், அவற்றை அன்றாடம் பயன்படுத்தியே உங்கள் அழகை ஆரோக்கியமான முறையில் அதிகரிக்கலாம். ஏனெனில் ரோஸ் வாட்டருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. அதிலும் ரோஸ் வாட்டர் சருமத்தின் அழகை அதிகரிக்க மட்டுமின்றி, முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. ஆகவே அழகை அதிகரிக்க கண்ட கண்ட பொருட்களைப் பயன்படுத்துவதை விட்டு, எளிய பொருட்களைக் கொண்டு எப்படி அதிகரிப்பது என்று யோசிக்க ஆரம்பியுங்கள். சரி, இப்போது அழகை அதிகரிக்க ரோஸ் வாட்டரை எப்படி பயன்படுத்தலாம் என்று பார்ப்போம். வெளியே சென்று வீட்டிற்கு வந்தவுடன் ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, முகம் மற்றும் கழுத்தை துடைத்து எடுங்கள். இதனால் சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, முகம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும். மேலும்

ரோஸ் வாட்டரைக் கொண்டு ஒரு நாளைக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் முகத்தை சுத்தப்படுத்தலாம். ரோஸ் வாட்டரில் சிறிது சூடத்தைப் போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும். இல்லாவிட்டால், ரோஸ் வாட்டரில் புதினா சாற்றை கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால் பருக்கள் நீங்கும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், சந்தனப் பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, முகத்தில் தடவி மாஸ்க் போட்டு, பின் 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தின் அழகைக் கெடுக்கும் அசிங்கமான பருக்களைப் போக்கலாம். முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி மாஸ்க் போட்டால், பருக்கள் நீங்குவதுடன், சருமத்தின் நிறமும் அதிகரிக்கும். ரோஸ் வாட்டருடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் மாஸ்க் போட்டு, 1 மணிநேரம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி செய்தால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்களால் வந்த தழும்புகள் போன்றவை நீங்கும். முகம் சோர்ந்து காணப்பட்டால், அப்போது ரோஸ் வாட்டர் கொண்டு முகத்தை துடைத்து எடுங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும். ரோஸ் வாட்டருடன், தக்காளி சாறு சேர்த்து கலந்து, அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், வெயிலினால் கருமையடைந்த சருமம் மீண்டும் பொலிவோடு மாறும். வேண்டுமானால் வாழைப்பழத்தை மசித்து, அதில் சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் மாஸ்க் போட்டாலும், வெயிலினால் ஏற்பட்ட சரும கருமை நீங்கும். உங்கள் உதடு ரோஜாப்பூ போன்று மென்மையாகவும், பிங்க் நிறத்திலும் இருக்க வேண்டுமெனில், தினமும் ரோஸ் வாட்டரைக் கொண்டு உதட்டை துடைத்து எடுங்கள். இதனால் உதட்டில் உள்ள கருமை போய்விடும். நீங்கள் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுகிறீர்களா? அப்படியெனில் வெந்தயத்தை அரைத்து அதில் ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் அலசினால், பொடுகுத் தொல்லை நீங்குவதுடன், முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும். ஷாம்பு போட்டு தலையை அலசியப் பின்னர், ரோஸ் வாட்டர் பயன்படுத்தி தலையை மசாஜ் செய்தாலோ அல்லது ஷாம்புவுடன் ரோஸ் வாட்டரை சேர்த்துக் கொண்டாலோ, முடி பட்டுப் போன்று பொலிவாக காணப்படும். வேண்டுமெனில் ரோஸ் வாட்டரை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து பின் அலசினால், முடி அழகாக மின்னும். கண்கள் பொலிவிழந்து கருவளையங்களுடன் காணப்படுகிறதா? அப்படியெனில் காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து, அதனை கண்களின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைத்து வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், கருவளையங்கள் நீங்கி, கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும். சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொண்டு, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதோடு, சுருக்கங்கள் வருவதும் தடுக்கப்படும். நல்ல வெள்ளையான சருமம் வேண்டுமா, அப்படியெனில் கடலை மாவு அல்லது முல்தானி மெட்டி அல்லது சந்தனப் பொடி, இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

Related posts

முட்டைகோஸ் பேஷியல்

nathan

பாத எரிச்சல் ஏன் ஏற்படுகிறது… அதன் வழி நம் உடல் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன?

nathan

கண்ணழகி நடிகையை விவாகரத்து செய்யும் விஜய்பட வில்லன்..

nathan

மருக்கள் மறைய முகம் பொழிவு பெற

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ‘பேஷியல்’

nathan

தனுஷை வெளுத்து வாங்கியுள்ள நீதிபதி- ரோல்ஸ் ராய்ஸ் வழக்கு

nathan

கழுத்தைச் சுற்றி கொஞ்சம் புளி தடவினா காணாமல் போகும் கருமையான படலம்..!!தெரிஞ்சிக்கங்க…

nathan

டாட்டூ: ஆபத்தை சுமந்து வரும் அழகு

nathan

உதடுகள் சிவப்பழகை பெற இதை செய்யுங்கள்!…

sangika