23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
62
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

நம்முடைய மூக்கை சிறியதாகவும் கூர்மையாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

பெரும்பாலான பெண்களுக்கு தங்களுடைய மூக்குப் பிடிக்காமல் தான் போகும். அதனாலேயே நிறைய பேர் தங்களுடைய மூக்கை அமுக்கிக் கொண்டும் தடவிக் கொண்டும் இருப்பார்கள்.

இதற்குக் காரணம் நம்மில் பெரும்பாலோருடைய மூக்கு கொஞ்சம் புடைப்பாக இருப்பதே ஆகும். இப்படி ஆவதற்கு மிக முக்கிய காரணமே நாம் குழந்தையாக இருக்கும்போது மூக்கை கவனிக்காமல் விட்டுவிடுவது தான்.

குழந்தை குளியல்

நம்முடைய மூக்கு நம் முகத்தில் பெரியதாகவும் புடைப்பாகவும் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் குழந்தையாக இருக்கின்ற பொழுது, குழந்தையை குளிக்க வைக்கி பொழுது, சரியாக மூக்குப் பகுதியை சரிவர மசாஜ் செய்து குளிக்க வைக்காமல் போனதுதான்.

மூக்கு மசாஜ்

குழந்தையில் பொதுவாக நம்முடைய சருமமும் தோலும் மிக மிக மெலிதாகவும் மென்மையாகவும் இருக்கும். அந்த சமயங்களில் நாம் எப்படி தோலை அமுக்கி மசாஜ் செய்கிறோமோ அது அப்படியே படிய ஆரம்பித்துவிடும்.

கொழுப்பு காரணமா?

நிறைய பெண்கள் தங்களுடைய மூக்கு புடைப்பாக இருப்பதை விரும்புவதில்லை. இதற்குக் காரணம் கொழுப்புகள் தான் மூக்கில் சேர்நு்து மூக்கை புடைப்பாக்குகிறது என்றும் அதுதான் தங்களுடைய அழகைக் கெடுக்கிறது என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

62

நடிகைகள் சர்ஜரி

அப்படி மூக்குதான் அழகைக் கெடுக்கிறது என்று நம்பும் பெண்களால் தான், நாம் நன்கு கவனித்தால் தெரியும். பெரும்பாலான நடிகைகள் தங்களுடைய புடைப்பான மூக்கை கூர்மையாக மாற்றிக் கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்கிறார்கள்.

நடிகைகள் மிக அதிக விலையுயர்ந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்கிறார்கள். ஆனால் எல்லோரும் இதுபோன்ற விலையுயர்ந்த அறுவை சிகிச்சையை செய்து கொள்ள முடியாது.

அதனால் மிக எளிமையான செலவே இல்லாமல் உங்களுடைய மூக்கை மிக கூர்மையாக மாற்றிக் கொள்வது எப்படி?, புடைப்பாக இருக்கும் மூக்கை எப்படி சிறியதாக்கிக் கொள்வது என்பது பற்றி பார்ப்போம்.

டூத் பேஸ்ட்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? பெரிதாக புடைப்பாக இருக்கிற நம்முடைய மூக்கை செலவே இல்லாமல் நம்முடைய வீட்டில் இருக்கின்ற சாதாரண டூத்பேஸ்ட்டைக் கொண்டே சிறியதாகவும் கூர்மையாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வீட்டு தீர்வு முறைகள்

நமக்கு ற்படுகின்ற அழகு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த எல்லா வகையான பிரச்சினைகளுக்குமே நம்முடைய வீட்டுக்குள்ளேயே, ஏதேனும் பொருள்களின் வடிவிலோ அல்லது உணவின் வடிவிலோ தீர்வுகள் கட்டாயம் இருக்கும். அதை நாம் தான் புரிந்து வைத்திருக்க வேண்டும்.

அப்படி நம்முடைய வீட்டில் உள்ள நாம் தினமும் பயன்படுத்துகிற டூத் பேஸ்ட்டை வைத்துக் கொண்டு எப்படி கூர்மையாக்கலாம் என்று பார்க்கலாம். நம்பிக்கையோடு இதை முயற்சி செய்யுங்கள். கட்டாயமாக உங்களுக்கு எப்படி வேண்டுமோ அப்படிப்பட்ட ஒரு அழகான மூக்கைப் பெற முடியும்.

தேவையான பொருள்கள்

டூத் பேஸ்ட் ( ஏதாவது ஒன்று) – 1 டீஸ்பூன்

இஞ்சி பவுடர் – 1 டீஸ்பூன்

ஆப்பிள் சீடர் வினிகர் – 1 டீஸ்பூன்

எப்படி பயன்படுத்துவது?

மேலே குறிப்பிட்ட மூன்று பொருள்களையும் ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, நன்றாகப் பேஸ்ட் போல கலந்து கொள்ள வேண்டும். ஃபேஷியல் பிரஷ்ஷை எடுத்து அதில் இந்த பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவுங்கள்.

இதை அப்படியே முப்பது நிமிடங்கள் வரை அப்படியே உலர விட்டுவிடுங்கள். குளிர்ந்த நீரால் மூக்கை நன்கு கழுவிவிட வேண்டும். இன்னும் கொஞ்சம் கூடுதலாக மூக்கை பளிச்சென்று ஆக்க வேண்டுமென்றால், ஒரு காட்டன் பஞ்சை சிறிது ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து மூக்கில் உள்ள பேஸ்ட்டை துடைத்து எடுத்துவிட்டும் அதன்பின் குளிர்ந்த நீரால் கழுவவோ ஐஸ் கட்டி மசாஜோ செய்யலாம்.

உங்களுக்குப் பிடித்த ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்றால், இதை தினமும் தொடர்ந்து செய்து வாருங்கள். தொடர்ந்து செய்து வந்தால் பத்தே நாட்களில் நீங்கள் எதிர்பார்த்த பலனைப் பெற முடியும்.

அலர்ஜி

இதில் நாம் இஞ்சி பவுடரைச் சேர்ப்பதால் சிலருக்கு மூக்கில் அலர்ஜி இருப்பது போல் இருக்கும். சருமத்தின் மேல் லேசாக வெந்ததுபோல் இருக்கும்.

அதற்காக பயப்படத் தேவையில்லை. குளிர்ந்த நீராலோ அல்லது ஐஸ் கட்டியாலோ மசாஜ் செய்து கொண்டாலே போதும். விரைவில் சரியாகிவிடும்.

Related posts

யோகர்ட் உங்கள் சருமத்திற்கும், கூந்தலுக்கும் மெருகூட்டும்.

nathan

பளிச் முகத்திற்கு பலவித பேக்குகள்

nathan

பெண்களே! இதோ உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்க உதவும் ஃபேஸ் மாஸ்க்குகள்!

nathan

வெளிவந்த தகவல் ! பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து இவரும் வெளியேற போகிறாரா ?

nathan

ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை…..

sangika

ரோசாசியா என்றால் என்ன?

sangika

இதோ எளிய நிவாரணம்..முகப்பருவை நீக்கவும், சரும மேன்மைக்கும் உதவும் கொத்தமல்லி

nathan

வீட்டிலேயே தயாரிக்கும் இந்த ஷாம்பூ வாரத்தில் பலமுறை பயன்படுத்தினாலும் கூந்தலுக்கு எந்த ஒரு எதிர்வினையையும் உண்டாக்குவதில்லை….

sangika

மங்காத அழகுக்கு கஸ்தூரி மஞ்சள்! ~ பெட்டகம்

nathan