26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
mulikai losan
கூந்தல் பராமரிப்பு

வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சில மூலிகை லோஷன்

கூந்தல் பராமரிப்பு என்பது தற்போது மிகவும் கடினமான காரியமாக உள்ளது. வேலை பளு மற்றும் நேரமின்மை காரணமாக கூந்தலில் பராமரிப்பு குறைந்து பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன.

கூந்தல் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமானது பொடுகு. உச்சந்தலை போதிய நீர்ச்சத்துடன் இல்லாமல் இருந்தால் அது வறண்டு, செதில் செதிலாக தோன்றும். இதனால் பொடுகு ஏற்படுகிறது.

பொடுகும் அரிப்பும்

உச்சந்தலையில் அழுக்கு படிவதால் கூட பொடுகு உண்டாகலாம். தலையில் பொடுகு இருப்பதால் அரிப்பு மற்றும் எரிச்சல் உண்டாகிறது. பூஞ்சை பாதிப்பு காரணமாக உண்டாகும் பொடுகைப் போக்க பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் கொண்ட பொருட்களை பயன்படுத்தலாம் இதன்மூலம் பொடுகு முற்றிலும் அழிக்கப்பட்டு மீண்டும் வராமல் தடுக்கப்படுகிறது. .

mulikai losan

வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சில மூலிகை லோஷன் பொடுகைப் போக்க சிறப்பாக செயல்படுகிறது. விலை குறைவான இந்த மூலப்பொருட்களைப் பயன்படுத்தி, எளிதான முறையில் வீட்டிலேயே பொடுகைப் போக்க உதவும் இந்த மருந்தைத் தயாரிக்கலாம். வாருங்கள் அதனைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.

ரோஸ்மேரி, வல்லாரை லோஷன்

பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பண்புகள் கொண்ட ரோஸ்மேரி, பொடுகு மற்றும் தலை வறட்சிக்கு காரணமான பூஞ்சையை போக்க உதவுகிறது. மேலும் இதில் ப்லேவனைடு, பினோலிக் அமிலம் போன்ற கூறுகள் உள்ளன. இதே போல், நீர்ப்ராமிக்கும் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. ஆகவே தொற்று மற்றும் சரும அழற்சியுடன் போராடி பொடுகைப் போக்க உதவும்.

தேவையான பொருட்கள்

1 ஸ்பூன் ரோஸ்மேரி

1 ஸ்பூன் நீர்ப்ராமி

2 கப் தண்ணீர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் ரோஸ்மேரி சேர்த்து 5 நிமிடங்கள் அப்படியே விடவும். 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து பின்பு அதில் நீர்ப்ராமி சேர்க்கவும். அந்த கலவை ஆறி, அறையின் வெப்ப நிலைக்கு வரும் வரை காத்திருக்கவும். பின்பு அந்த நீரை வடிகட்டி உங்கள் உச்சந்தலையில் அதனைத் தடவவும். இதனை அலச வேண்டாம்.

துளசி லோஷன்

துளசிக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் பக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட், உச்சந்தலையில் உள்ள பொடுகு மற்றும் அழற்சியைப் போக்க உதவுகின்றன. துளசியில் இரும்பு சத்து, வைட்டமின் கே மற்றும் பீட்டா கரோடின் போன்றவை உள்ளன.

தேவையான பொருட்கள்

4 கப் தண்ணீர்

துளசி

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் துளசி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். பிறகு அடுப்பை அணைத்து, அந்த நீரை ஆற விடவும். ஆறியவுடன் அந்த நீரை வடிகட்டி, ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி சேமித்து வைக்கவும். இரவு நேரத்தில் இந்த திரவத்தை தலையில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விடவும். பிறகு மறுநாள் காலை தலையை அலசவும். ஒவ்வொரு நாள் இரவும் இதனைத் தொடர்ந்து பின்பற்றி, வித்தியாசத்தை உணருங்கள்.

பார்சிலி லோஷன்

பார்சிலியில், வைட்டமின் ஏ, பி, சி , டி இரும்புச்சத்து, பொட்டாசியம் போன்றவை கொண்ட ஒரு மூலிகை. இது, பொடுகைப் போக்க உதவுவதுடன், கூந்தலை பளபளப்பாக மாற்றவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்

1/4 கப் பார்சிலி

4 கப் தண்ணீர்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். அதில் பார்சிலி இலைகளைப் போட்டு கொதிக்க விடவும். நன்கு கொதித்தவுடன், அடுப்பை அணைத்து அந்த கலவையை ஆற விடவும். இந்த நீரை உங்கள் தலையில் தடவி, மென்மையாக விரல் நுனி கொண்டு மசாஜ் செய்யவும்.

Related posts

அழகை கெடுக்கும் நரை முடி

nathan

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள சில வழிகள்!

nathan

தலை முடியின் பராமரிப்புகள்

nathan

வழக்கத்திற்கு மாறான செயல்களால் கூந்தல் உதிருமா

nathan

சோப்பு நுரைகளுக்கு பதிலாக உலர் ஷாம்புவை முயற்சிக்கவும்

nathan

ஹேர் டை உபயோகிப்பது ஆபத்தானதா?

nathan

முடி உதிர்தல், வழுக்கை போன்றவற்றிற்கு இந்த குறிப்புகள் நன்கு உதவுகின்றன!…

sangika

இதோ உங்களுக்காக..!! இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan

பொடுகைக் காலி பண்ண சில டிப்ஸ்..!

sangika