24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
119
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்புமுகப்பரு

அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்ய இத படிங்க!…

இன்றைய நவீன உலகில் நாம் பார்க்கின்ற விளம்பரத்தில் காட்டும் எண்ணற்ற கிரீம்களையும், ஷாம்பூக்களையும் வாங்கி அடுக்கி வைத்து கொள்கின்றோம். புதிது புதிதாக வருகின்ற ப்ராண்ட்களையும் நாம் விட்டு வைப்பதில்லை. இதன் விளைவு, முடி உதிர்வு மற்றும் முக அழகு பாழாகுதல்.

இப்படியே பல நாட்கள் சென்றால் மொத்த முடியும் கொட்டி விட செய்யும். அதே போன்று முகத்தில் நாம் எதிர்பாராத விதமான பல பாதிப்புகளும் வர தொடங்கும்.

இந்த எல்லா பிரச்சினைகளில் இருந்தும் உங்களை காப்பற்ற ஒரே ஒரு பழம் போதும். அதுதான் அத்தி பழம்.

119

எப்படி அத்திப்பழத்தை வைத்து எல்லா முக பிரச்சினைகளையும் சரி செய்வது என்பதை இனி அறிந்து கொள்வோம்.

அற்புதம் நிறைந்த அத்தி..!

பல பழங்களை நாம் சாப்பிட்டாலும், அத்தி பழத்தை சாப்பிடுவது போன்ற ஆரோக்கியம் எதிலும் கிடைக்காது.

இதற்கென்று எப்போதும் தனித்தன்மை இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில், இதில் அந்த அளவிற்கு ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் நிறைந்துள்ளதாம்.

நீங்கள் அத்தியை அபிசியே சாப்பிட்டாலும் சரி, இல்லை முகத்தில் அல்லது தலையில் பயன்படுத்தினாலும் சரி நன்மைகள் ஏராளம்.

பருக்களை போக்குவதற்கு

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும். இதனை வாரத்திற்கு 3 முறை செய்து வந்தாலே போதும், பருக்கள் மறைந்து விடும்.

தேவையானவை :- அத்தி பழம் 1 தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் அத்திப்பழத்தை அரைத்து கொள்ள வேண்டும். பிறகு அரைத்த அத்திப்பழ கூழுடன் தேனை கலந்து முகத்தில் தடவி கொள்ளவும்.

20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் இதனை கழுவி கொள்ளலாம்.

அத்திப்பழத்தின் அற்புத குணம் உங்கள் முகத்தை பருக்கள் இல்லாமல் மாற்றும்.

அழுக்குகளை நீக்க

முகத்தில் சேர்ந்துள்ள அழுக்குகளை நீக்குவதற்கு ஒரு எளிய வழி உள்ளது. இதற்கு தேவையானவை… அத்திப்பழம் 1 சர்க்கரை 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :-

அத்திப்பழத்தை அரைத்து கொண்டு அவற்றுடன் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு சர்க்கரையை பொடியாக அரைத்து கொண்டு, இவற்றுடன் சேர்த்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து கழுவினால் முகத்தின் அழுக்குகள் நீங்கி விடும்.

முக பொலிவிற்கு

அத்திபழத்தை கொண்டு எப்படி முக பொலிவை பெறுவது என்பதை இந்த குறிப்பில் தெரிந்து கொள்வோம். அதற்கு தேவையானவை.. அத்திப்பழம் 1 யோகர்ட் 2 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன்

செய்முறை :-

முதலில் அத்திப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு யோகர்ட் மற்றும் தேனை ஒன்றாக கலக்கி கொள்ளவும்.

இந்த கலவையை அத்திப்பழத்துடன் சேர்த்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவலாம்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் அத்தியில் உள்ள வைட்டமின் சி முகத்தை மினுமினுப்பாக்கும்.

முடி வளர்ச்சிக்கு

முடி உதிர்வு, முடி உடைதல், வறண்ட தலை ஆகிய பிரச்சினைக்கு தீர்வை அத்தி பழம் தருகிறது. இதற்கு பெரியதாக எதுவும் செய்ய தேவையில்லை.

மாறாக தினமும் 2 அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தாலே போதும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அல்லது அத்திப்பழ எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தாலும் நல்ல பலன் கிடைக்குமாம்.

இது எப்படி சாத்தியம்..?

அத்தி பழத்தை கொண்டு நமது உடலின் பல் வகையான பாதிப்புகளையும் நோய்களையும் நம்மால் சரி செய்ய முடியும். இதற்கு முழு காரணமும் அத்தியில் உள்ள சத்துக்கள் தான்.

அத்திப்பழத்தில் வைட்டமின் எ, சி, கே, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், இரும்புசத்து, நீர்சத்து அதிகம் நிறைந்துள்ளது தான் இவற்றின் சக்திக்கு காரணம்.

Related posts

முகப்பரு மற்றும் கரும்புள்ளி பிரச்சனைக்கு ‘குட்-பை’ சொல்லணுமா?இதை முயன்று பாருங்கள்

nathan

எல்லாவகை சருமத்திற்கும் ஏற்றதாக ஸ்க்ரப் செய்யலாம் முயன்று பாருங்கள்….

nathan

வறட்சியான சருமம் உள்ளவர்கள் தினமும் செய்யக்கூடாத விஷயங்கள்!

nathan

வேனிட்டி  பாக்ஸ்: ஃபவுண்டேஷன்

nathan

பிளச்சிங் செய்வதால் சருமத்துக்கு ஏற்படும் பாதிப்புகள்

nathan

முகப் பூச்சுகள் சிறிய குறிப்பு

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

உங்களுக்கான தீர்வு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை இயற்கை முறையில் நீக்க???

nathan

அரங்கேறிய துயரம்! அண்ணனை நம்பி தோழியை அழைத்துச் சென்ற தங்கை!

nathan