23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
boy beauty
அழகு குறிப்புகள்ஆண்களுக்கு

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

அழகு என்றால் பெண், பெண் என்றால் அழகு இந்த வாசகம் மனித இனத்திற்கு மட்டுமே பொருந்தும். விலங்கினங்களில் ஆண் விலங்கே அழகு. அதேபோல் பறவையினங்களில் ஆண் பறவையே அழகு இதுவே உண்மையும் கூட‌

ஆண்கள் அழகாக எளிய டிப்ஸ்…

கருப்பு நிறத் திட்டுக்கள் மறைய

ஆண்களுக்கு முழங்கை மூட்டுக்கள் எளிதில் கருமை அடைகின்றன.

இதனைத் தவிர்க்க தக்காளிச் சாறு, தயிர், தேன், கடலை மாவு ஆகிய நான்கையும் கலந்து பேஸ்ட்டாக்கி, வாரம் ஒருமுறை இரண்டு கைகள் முழுவதும் தடவி வந்தால் கருப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

boy beauty

கை,கால்களை பாதுகாக்க

கற்றாழை, உடல் குளுமைக்கும் தோல் பொலிவுக்கும் ஏற்றது.

வெயில் காலங்க ளில் கற்றாழையை ஏழு முறை கழுவி, கற்றாழை ஜெல் எடுத்து அதனுடன் பசு பால் சேர்த்து கை கால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிய பிறகு வெளியே போனால், சூரியக் கதிர்களில் இருந்து கை,கால்களை பாதுகாக்க முடியும்.

முகம் பொலிவடைய

அரை கப் பப்பாளி பழம், ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, ஒரு டீஸ்பூன் தேன் ஆகியவற்றை கலந்து முகத்துக்கு பேக் போட்டு 20 நிமிட ங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

அதன் பின்னர் மீண்டும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் கை, கால்களிலும் போட்டுக் கொள்ளலாம்.

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்க

உடலில் உள்ள நச்சுக்கள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறு கள் துணைபுரிகின்றன.

தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்தி வந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும்.

தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

தோல் பொலிவடைய

ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழு வதும் நறுமணம் வீசும், உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த

சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைக்க வேண்டும்.

பின்னர் நன்றாக ஆறிய பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும். உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

கறுப்பு நிறத் திட்டுக்கள் மறைய

முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுக்கள் மறைய, தினமும் முட்டையின் வெள்ளைக் கரு எடுத்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து முகம் கழுவினால், கறுப்பு நிறத் திட்டுக்கள் மறையும்.

முகம் புத்துணர்ச்சியாக இருக்க ஐஸ் கட்டிகளை கொண்டு முகத்தில் மசாஜ் செய்யலாம்.

வெயில் காலங்களில்

இறுக்கமான ஜீன்ஸ் தவிர்க்கவும். உள்ளாடைகள் பருத்தித் துணியால் இருப்பதே சிறந்தது.

உள்ளாடைகளை தினமும் துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும். ஆறு மாதங்களுக்கு மேல் ஒரே உள்ளாடையைப் பயன் படுத்தக் கூடாது.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கருத்தரித்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்!

nathan

கடலை மாவு ஃபேஷியல்!!! கருமை நிறத்தை போக்கும்

nathan

தெரிந்துகொள்வோமா? நல்லெண்ணெய் குளியல்

nathan

மாலத்தீவில் தங்கையுடன் பிறந்த நாள்! நீங்களே பாருங்க.!

nathan

:வெயிலால் சருமம் கருத்துப் போச்சா?

nathan

உடல் பருமனை குறைக்க உதவும் மாதுளை

nathan

கழுத்தில் உள்ள கருமையை நீக்க சில எளிய வழிகள்

nathan

ரெட் ஒயினின் அழகு நன்மைகள்!!

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika