29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
201707240321 haww
கூந்தல் பராமரிப்புதலைமுடி சிகிச்சைஹேர் கலரிங்

ஹேர் டையை உபயோகப்படுத்தும் முறை

ஹேர் டையை முதன்முதலில் அழகு நிலையங்களில் போடுவது நல்லது.  டை உபயோகிப்பவர்கள் கையில் கிளவுஸ் போட்டுக்கொண்டு பூசலாம். பிரஷ் உபயோகித்து டையை போட கூடாது. அப்படி போடும் போது டையை எடுத்து தட்டையாக போட கூடாது. பிரஷ் உபயோகப்படுத்துவதால் காற்று உள்ளே போகாது.

எவ்வளவுக்கெவ்வளவு காற்று முடியினுள் செல்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. பிரஷில் போடும்போது காற்று உள்ளே செல்லும்படி, முடியை அவ்வப்போது தூக்கி விட்டுக்கொண்டு போட வேண்டும். தலையை ஒட்டி அழுத்தமாக டை போடுவதை விட்டு இருபக்கமும் சீராகப் போட வேண்டும். சிலர் ஹேர் டையைப் போட்டுவிட்டு அதிக நேரம் வைத்திருப்பார்கள்.

சிலர் அப்படியே வெளியிலும் அலைவார்கள். சிலர் மறுநாளோ, அதற்கு மறுநாளோ தலைக்குக் குளிப்பார்கள். இது மிகவும் தவறான முறை. ஹேர் டை பாக்கெட்டுகளில் எவ்வளவு நேரம் ஊற வைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதோ அதன்படியே செய்ய வேண்டும்.

தலையை அலசும்போது தரமான ஷாம்புடன், கண்டிஷனரும் அவசியம் போட வேண்டும். கண்டிஷனர் உபயோகப்படுத்தவில்லையெனில் டை முடியைச் சொர சொரப்பாகி விடும். அடிக்கடித் தலைக்குக் குளித்தால் டை மறைந்து, முடி வெளுத்து விடும் என்பதற்காகச் சிலர் அடிக்கடி தலைக்குக் குளிக்க மாட்டார்கள்.

எண்ணெயும் வைக்க மாட்டார்கள். இது மிகவும் தவறானது. சரியான பராமரிப்பைத் தலைமுடிக்குக் கொடுக்கவில்லை எனில் முடி கொட்ட ஆரம்பிக்கும். எவ்வளவுக்கெவ்வளவு டை போடுவதைத் தள்ளி போடுகிறோமோ அல்லது தவிர்க்கிறோமோ அவ்வளவு நல்லது.

ஒன்றரை மாதத்துக்கு ஒரு முறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறைதான் ஹேர்டை உபயோகிக்க வேண்டும் அல்லது முக்கியமாக வெளியில் செல்லும் போது போடலாம். கண் புருவத்தின் மீது எக்காரணத்தைக் கொண்டும் டையைப் போடக் கூடாது.

ஹேர் டையை விரும்பாதவர்களும், இளம் வயதில் இருப்பவர்களும் ஹென்னா உபயோகித்து முடியின் வெள்ளை நிறத்தை மறைக்கலாம். ஆனால் ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடும். ஹென்னா எல்லா முடிக்கும் ஒத்து வராது. ஹென்னாவை அப்படியே போடுவது முடியை முரட்டுத்தன்மை உடையதாக ஆக்கிவிடும்.

முடியும் கொட்டும். குறிப்பாக பெண்களுக்கு முன் தலையில் உள்ள முடி கொட்டும். ஹென்னாவைப் போட விரும்புபவர்கள் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும்.

மருதாணியை அரைத்து நேரடியாகப் பூசுவதை விடுத்து, அதை வெயிலில் காய வைத்து, பொடியாக்கி, அத்துடன் கண்டிஷனர் கலந்து உபயோகிக்க வேண்டும். இயற்கையான முறையில் ஹென்னாவை எப்படி உபயோகப்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

ஒரு நபருக்குத் தேவையானவை:

ஹென்னா – 250 கிராம்
ஒரு முட்டை – வெள்ளை, மஞ்சள் கரு கலந்தது
ஆலிவ் ஆயில் – 2  ஸ்பூன்
காப்பி அல்லது டீ டிகாஷன் – 2 ஸ்பூன்
(சிவப்பு நிறத்தை விரும்புபவர்கள் டீ டிகாஷனையும், அடர்ந்த ப்ரவுன் நிறத்தை விரும்புபவர்கள் காப்பி டிகாஷனையும் கலந்துகொள்ள வேண்டும். இரண்டில் ஏதாவது ஒன்றை மட்டும் உபயோகப்படுத்தவும்.)
நெல்லிக்காய் பவுடர் – 50 கிராம்
தயிர் – 2  ஸ்பூன்

இவை அனைத்தையும் கலந்து இரும்புப் பாத்திரத்தில் முதல் நாளே ஊற வைக்க வேண்டும். மறுநாள் இந்தக் கலவையைத் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் முடி பளபளப்படையும். ஹென்னாவின் நேரடியான வீரியமும் குறையும்.
201707240321 haww

Related posts

ஷாம்புவுடன் உப்பு சேர்த்து குளித்தால், மிகப்பெரிய தலைமுடி பிரச்சனை நீங்கும் என தெரியுமா?

nathan

முடி வளர சித்த மருத்துவம்

nathan

தெரிஞ்சிக்கங்க…மழைக் காலத்தில் சருமத்தையும், கேசத்தையும் பாதுகாப்பது எப்படி?

nathan

முடி பராமரிப்புக்கும், பாதுகாப்புக்கும் சில டிப்ஸ்… !

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய், ஒரே மாதத்தில் தலைமுடி உதிர்வதை நிறுத்தும் தெரியுமா?

nathan

தேங்காய் எண்ணெயில் (Coconut Oil) வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் பொடுகுப் பிரச்சனை போயே போச்சு!

nathan

தலைமுடிக்கு நல்லெண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் பெறும் நன்மைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா இந்த எண்ணெய் தேய்ச்சா தலைமுடி கொட்டறது உடனே நின்னுடும்

nathan

வெள்ளை முடியால் தொல்லையா? இவற்றை பயன்படுத்தினாலே போதும்!

nathan