முகப்பருக்கள் வந்து விட்டது என்றாலேயே பெண்கள் முகம் சுழித்து விடுவார்கள். இது முகத்தின் சருமத்தை பாதிப்பது மட்டுமல்லாது முகத்தின் அழகுக்கும் பங்கம் விளைவித்து விடும்.
இந்த முகப்பருக்கள் வர பல காரணங்கள் உள்ளன. எனினும் இது ஆளுக்காள் வேறுபடக் கூடும். முகப்பருக்களை அகற்றவென பல்வேறு ட்ரீட்மன்ட்கள் மற்றும் விலை கூடிய பேஷpயல்கள் என்பன உள்ளன.
அவற்றை நாடியே இப்போதுள்ள இளம் பெண்கள் செல்கின்றனர். எனினும், சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தேஇந்த முகப்பரு பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
அது எப்படி என்பது குறித்து இப்போது பார்ப்போம்.
01. பேக்கிங் சோடா
பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து பசை போல் ஆக்கிக் கொள்ளுங்கள். பின்னர் இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்னர் அவற்றை முகப்பருக்கள் உள்ள இடத்தில் பூச வேண்டும். குறித்த கலவை காயும் வரை இவ்வாறு வைத்திருந்து பின்னர் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் உள்ள முகப்பருக்கள் நாளடைவில் குறைவடைவதை அவதானிக்கலாம். அத்துடன் இந்தக் கலவை முகத்தின் பி.எச் பிரமானத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
02. இஞ்சி
இஞ்சிச் சாறை எடுத்து அதனை முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகப்பருக்கள் மறைந்து விடும். இஞ்சியில் உள்ள அழற்சியை எதிர்த்து செயற்படக் கூடிய தன்மையே இதற்கு முக்கிய காரணம் ஆகும். அத்துடன் முகத்தில் உள்ள தளும்புகளும் இல்லாமல் போகும்.
03. கருஞ்சீரகம்
கறுஞ்சீரகத்தில் பங்கஸை எதிர்க்கும் சக்தி உள்ளதோடு அவற்றில் விட்டமின்-சியும் உள்ளது. அது மட்டுமின்றி இந்த கருஞ்சீரகத்தில் அதிகளவில் காணப்படும் சிங்க், பக்டீரியாவுக்கு எதிராக செயற்பட்டு முகப்பருக்களை விரட்டியடிக்கின்றது. கருஞ்சீரகம் சிறிதளவை எடுத்து அதனுடன் தேன் சிறிதளவை கலந்து அந்தக் கலவையை முகப்பருக்கள் உள்ள இடத்தில் பூச வேண்டும். பின்னர் 25 நிமிடங்கள் கழித்து அதனை கழுவி விட வேண்டும். இதிலுள்ள தேனானது முகம் வறண்டு போகாது பாதுகாக்கும்.
04. இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டைத் தூள் மற்றும் தேன் சிறிதளவை கலந்து அதனை மாஸ்க் போன்று உபயோகிக்க வேண்டும். பின்னர் அதனை 15 தொடக்கம் 20 நிமிடங்கள் கழிந்து கழுவி விட வேண்டும். இலவங்கப்பட்டைத தூள் மூலம் முகத்தில் இரத்த ஓட்டம் சீராக்கப்படுகின்றது.
05. மிஞ்சி
மஞ்சி இலைகள் சிறிதளவு மற்றும் சிறிதளவு தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து பசை போல் ஆக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் அந்தக் கலவையுடன் சிறிதளவு முல்தானிமட்டி கலந்து கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் மாஸ்க் போல் பூசி 20 நிமிடங்கள் வைத்திருந்து பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். மிஞ்சி இலையானது முகத்தில் உள்ள பருக்களை இல்லாதொழிப்பதோடு முல்தானிமட்டியானது முகத்தில் மேலதிகமாக உள்ள எண்ணெயை உறிஞ்செடுக்கின்றது.