அடர்த்தியான ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்காக இயற்கை முறைகளை தேடி அலைபவர்களில் நீங்களும் ஒருவரா? பல இயற்கை முறைகளையும், கடைகளில் கிடைக்கும் இரசாயணப் பதார்த்தங்களையும் பயன்படுத்தி முடி வளர்ச்சி அடையவில்லையா?
இதர்கெல்லாம் என்ன தான் தீர்வு? முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இனின் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறதா? அதற்கான பதில் உங்களுக்கு கிடைத்து விட்டது. அது வேறொன்றும் இல்லை ரெட் வைன் தான்.
ரெட் வைன் என்று சொன்னாலே போதையைத் தரும் பான வகையாக மட்டுமே பயன்படுத்தலாம் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். இதில் உள்ள புரோட்டின் முடி உடைந்து போவதில் இருந்து பாதுகாத்து அதனுடைய கட்டமைப்பை மீட்டுத் தரும். அது மட்டுமல்லாது தினமும் பாதி கிளாஸ் வைன் குடிப்பதனால் அது உடலில் இரத்த ஒட்டத்தை அதிகப்படுத்தும். இதனால் தலைக்குத் தேவையான இரத்தம் கிடைப்பதனால் முடிகளின் வளர்ச்சி அதிகரிக்கச் செய்யும்.
இரத்த ஓட்டம் அதிகரிப்பதனால் இரத்த நரம்புகளை வலிமையடையச் செய்வதுடன் பொடுகு, கடி, வேறு பல தொல்லைகளை குறைத்தி விடும்.
முடியின் பாதுகாப்பிற்கு ரெட் வைனைப் பயன்படுத்தும் சில முறைகள்.
1. ரெட் வைனும் முட்டையும்.
தேவையானவை:
• ½ கப் ரெட் வைன்.
• 1 முட்டை.
• இ தேக்கரண்டி அவகோடா எண்ணெய்.
•
பயன்படுத்தும் முறை:
ரெட் வைனுடன் முட்டையை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அதில் 1 தேக்கரண்டி அவகோடா எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளவும். இதனை முடியின் வேர் பகுதியில் இருந்து நுனி வரை தடவிக் கொள்ளவும். பின்பு சவர் கப் அணிந்து 30 நிமிடங்களின் பின் சம்போ, கண்டிஸ்னர் பயன்படுத்திக் குளிக்கவும்.
2. ரெட் வைனும் தேனும்.
தேவையானவை:
• ½ கப் வைன்
• 1 தேக்கரண்டி தேன்.
• 1 முட்டை மஞ்சள் கரு.
• 1 வாழைப்பழம்.
•
பயன்படுத்தும் முறை:
இவற்றை பிளண்டரில் போட்டு பசையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அந்த பசையை முடியின் வேர்ப் பகுதிகளில் இருந்து நுனி வரை நன்றாக தேய்த்துக் கொள்ளவும் 2 மணி நேரங்களின் பின் எப்போதும் பயன்படுத்தும் சம்போ மற்றும் கண்டிஸ்னர் பயன்படுத்திக் குளிக்கவும். வாரத்தில் ஒரு தடவையாவது இதனை செய்வது முடி வளர்ச்சிக்கு சிறப்பானது.
3. ரெட் வைனும் ஆப்பிள் சிடர் விநாகிரியும்.
தேவையானவை:
• ¼ கப் ஆப்பிள் சிடர் விநாகிரி.
• 1 கப் வைன்.
பயன்படுத்தும் முறை:
ஆப்பில் சிடர் விநாகிரியைக் கலந்த ரெட் வைனை இரவு முழுவதும் வைத்து காலையில் குளிக்கும் போது சம்போ, கண்டிஸ்னர் பயன்படுத்திய பின்பு தலையில் தடவி மசாஜ் செய்து கொள்ளவும். 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.
4. ரெட் வைன் சம்போ
தேவையானவை:
• ஒரு கப் வைன்.
• ஒரு கப் சம்போ.
•
பயன்படுத்தும் முறை:
ரெட் வைனை ஒரு பாத்திரத்தில் 15 நிமிடங்களாவது கொதிக்க வைத்து, அதனை குளிர வைக்க வேண்டும். அதில் சம்போவை கலந்து கொள்ளவும். நீங்கள் எப்போதெல்லாம் குளிக்கிறீர்களோ அப்போது இதனை பயன்படுத்துவது சிறந்தது.
5. ரெட் வைனும் ஸ்ட்ரோபரி ஹெயார் மாஸ்க்.
தேவையானவை:
• ஒரு கப் வைன்.
• 2-3 பழுத்த ஸ்டோரோபரி.
•
பயன்படுத்தும் முறை:
பழுத்த பழங்களை மசித்து ரெட் வைனில் சேர்த்து பசையாக தயாரித்துக் கொள்ளவும். இதனை தலையில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்களின் பின் எப்போதும் பயன்படுத்தி கழுவுவதனால் முடிகளை பாதுகாக்க முடியும். வாரத்திற்கு ஒரு தடவை இவ்வாறு செய்வது போதுமானது.
UV கதிர்களின் பாதிப்பிலிருந்து முடியைப் பாதுகாத்தல்.
ரெட் வைனை எத்தனை தடவைகள் பயன்படுத்தும் என்பதை பொறுத்து, முடியை சூரியக் கதிர்களின் அழுத்தத்தில் இருந்தும், UV கதிர்களின் பாதிப்பிலிருந்தும் முடியை இலகுவாகப் பயன்படுத்தலாம்.