25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
Men face scrub tips
அழகு குறிப்புகள்ஆண்களுக்கு

ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை…..

ஆண்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமில்லை என்று பல ஆண்கள் நினைக்கிறார்கள். இப்படி நினைப்பது மிக பெரிய தவறு. பெண்களை விட ஆண்கள் அழகின் மீது அதிகமாக கவனம் செலுத்துவதில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை.

அவர்கள் தான் வெயில், மழை, தூசியிலும் செல்வார்கள். ஆனால் அவங்க அழகின் மீது அக்கறை காட்டமாட்டார்கள். ஆண்கள் ஆடைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் முகத்துக்கு கொடுப்பதில்லை. ஆண்களும் அழகுக்கு நேரம் ஓதுக்கி உடலை பாதுகாத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

ஆனால் வீட்டிலேயே இயற்கையான பொருள்களைக் கொண்டு முகத்தைப் பராமரித்தால், எந்த பக்க விளைவுகளும் இல்லாத இயற்கையான அழகைப் பெற முடியும்.

Men face scrub tips

பொதுவாக ஆண்கள் வேலைநிமித்தமாக அதிகமாக வெயிலில் சுற்றிதிரிவார்கள். வீட்டுக்கு வந்தவுடன் முகத்தை நன்றாக குளிர்ந்த நீரில் அலசவும். இன்னும் கொஞ்சம் நேரமிருந்தால் ஐஸ் கட்டியினை ஒரு துணியில் போட்டு முகத்தில் ஓத்தடம் கொடுக்கவும். இதனால் முகம் தெளிவடையும்.

சில ஆண்களுக்கு முகம் உலர்ந்து சொரசொரப்பாக இருக்கும். அவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை (மூக்கை மூடிக்கொள்ளவும்) எடுத்து அதில் பாலாடையும், பன்னீரையும் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவிடவும். பிறகு இளஞ்சூடான வெந்நீரில் அலசினால் சில நாட்களில் தோல் மிருதுவாக மாறி பளபளப்பாக மாறிவிடும். இது மாதம் 2 முறை செய்யவும்.

தினமும் பசும்பாலில் ஏடு எடுத்து முகம் முழுவதும் நன்கு அழுத்தி தேய்த்து ஊற வைக்கவும்.பின்பு வெதுவெதுப்பான நீரில் அலசவும். முகத்தின் கரும்புள்ளிகள் மாற சிறிது எலுமிச்சை சாறுடன் தயிரை சமமாக கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் அலசவும். கருபுள்ளிகள் மாயமாக மறைந்துவிடும்

Related posts

உங்களுக்கு தெரியுமா அஜித் மீது ரசிகர்கள் அதிக அன்பு வைக்க காரணம் இந்த 5 விஷயம் தான்.!

nathan

நகங்களைப் பராமரித்து அழகைக் கூட்டிக் கொள்ள இவற்றை செய்யுங்கள்!…

sangika

சரும சுருக்கத்தை போக்கும் டைட்னிங் பேஷியல்

nathan

தழும்புகள், தீக்காயத்தழும்புகள் மறைய சுலபமான வழிகள்

nathan

எந்த உணவுடன் எதனை சேர்த்து சாப்பிடக்கூடாது

nathan

வெளிவந்த தகவல் ! விபத்தில் சிக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

nathan

சருமம் சுருக்கங்களின்றி வயதானாலும் ஆரோக்கியமான சருமத்தை தக்க வைக்க உதவுகிறது விளக்கெண்ணெய்..

nathan

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

nathan

பிரபுதேவாவுடன் சுற்றும் இந்த பெண் யார், வெளிவந்த ரகசியம்!

nathan