28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
Peach Face Packs2
அழகு குறிப்புகள்சரும பராமரிப்புமுகப் பராமரிப்பு

பீச் பழம் எவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கும்?…

உங்களுக்கு சில நேரங்களில் பீச் பழத்தின் நன்மைகள் பற்றி தெரிந்திருக்கலாம். இதில் உடலிற்கு தேவையான கனியுப்புக்கள் மற்றும் விட்டமின்கள் அதிகளவில் காணப்படும். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துவதுடன், சமிபாட்டை சீராக்குகின்றது.

கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிக்கச் செய்து சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது.

இதில் அதிகளவான விட்டமின் ஏ இருப்பதனால் சரும ஆரோக்கியத்தையும் அதன் நிறத்தையும் பேணுகின்றது. மேலும் இதில் காணப்படும் விட்டமின் சி அண்டிஒக்ஸிடனாக சிறப்பாகச் செயற்படுவதனால் தோல் சுருக்கத்தை நீக்கி, சருமத்தின் கட்டமைப்பை பாதுகாப்பதுடன் சூரியக் கதிர்களின் பாதிப்பிலிருந்து தீர்வையும் தரும்.

பீச் பழம் எவ்வாறு சருமத்தைப் பாதுகாக்கும்?

Peach Face Packs2

1. பொலிவான சருமத்திற்கு:
பீச் பழத்தில் உள்ள விட்டமின்கள் சருமத்தினை புத்துணர்ச்சி பெறச் செய்து இயற்கை பொலிவை தக்க வைத்திருக்க உதவும்.

தேவையானவை:
• 1 பீச் பழம்.
• 1 கப் நீர்.

பயன்படுத்தும் முறை:
பீச் பழத்தை தோலுடன் சிறு துண்டுகளாக வெட்டி நீருடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதனை சருமத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

2. பளபளப்பான சருமத்திற்கு:
இதில் உள்ள அண்டிஒக்ஸிடன் சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது. மேலும் இதில் காணப்படும் டானிக் அமிலம் சருமத்தினை மிருதுவாக்கும்.

தேவையானவை:
• 1 பீச் பழ தோல்.
• 1 தேக்கரண்டி தேன்.

பயன்படுத்தும் முறை:
பீச் பழத்தின் தோலை பிளண்டரில் அரைத்து அந்தப் பசையுடன் தேனைக் கலந்து கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வது சிறந்தது.

3. சருமப் பருக்களிற்கு:
பீச் பழத்தில் உள்ள மற்றொரு சிறப்பம்சம் பருக்களைக் குணப்படுத்துவதுடன், கரும்புள்ளிகள், தளும்புகளையும் நீக்கி விடுகின்றது.

தேவையானவை:
• 1 பீச் பழம்.
• 1 தேக்கரண்டி தேன்.
• 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு.

பயன்படுத்தும் முறை:
பீச் பழத்தை வெட்டி சாற்றை எடுத்துக் கொள்ளவும். அதில் தேன், எலுமிச்சைச் சாறு சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

4. உலர்ந்த சருமத்திற்கு:
பீச் பழத்தில் உள்ள சத்துக்கள் சருமத்திற்கு ஈரப்பதத்தை இயற்கையாகவே வழங்கி, வறட்சியடைவதை தடுக்கும்.

தேவையானவை:
• ½ பீச் பழம்.
• 1 தேக்கரண்டி ஓட்ஸ்.
• 1 தேக்கரண்டி தேன்.
• 1 தேக்கரண்டி முட்டை மஞ்சள் கரு.

பயன்படுத்தும் முறை:
பீச் பழத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும். ஓட்ஸை மாவாக அரைத்து அதில் கலந்து கொள்ளவும். அத்துடன் தேன், முட்டை மஞ்சள் கரு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். இதனை சருமத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். இதனை வாரத்திற்கு இரு தடவைகள் செய்வதனால் விரைவான தீர்வைப் பெறலாம்.

Related posts

இந்த பொருட்களை அடிக்கடி யூஸ் பண்ணுங்க… முகப்பரு அதிகமா வருமா?

nathan

5 நிமிடத்தில் இந்த இரண்டு பொருட்களும் அக்குளில் உள்ள முடியை நீக்கும் என தெரியுமா?

nathan

மூக்கும் முழியுமாக ஜொலிக்க,

nathan

முகத்தில் எண்ணெய் வழியுதா? அதைத் தடுக்க இதோ சில வழிகள்!!!

nathan

மூட்டுவலிக்கு முக்கிய பயன்தரும் நொச்சி இலை

nathan

இயற்கை அழகு குறிப்புகள்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மெஹந்தி சடங்கின் போது ஸ்டைலாக தோன்றுவது எப்படி?

nathan

உங்க மேனி தகதகனு மின்ன நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள்

nathan

மனைவி தன்னை ஏமாற்றியதாக பேசினாரா நடிகர் தனுஷ் !

nathan