23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
e58a42aaaf522e2ab8f62983c29f7725
அலங்காரம்ஃபேஷன்அழகு குறிப்புகள்கால்கள் பராமரிப்பு

இதை ஆரோக்கியத்துக்குரியதாகவும் தேர்வு செய்வது அவசியம்…….

ஆடை, ஆபரண மோகம் மட்டுமல்ல; விதவிதமான செருப்புகள், ஷூக்கள் மீதான ஆசையும் பெண்களுக்கு அதிகரித்துவிட்டது. எந்த பொருளையும் ஒன்றுக்கு பத்து முறைக்கு அலசி ஆராய்ந்து வாங்கும் குணம் பெண்களுக்கு இயற்கையாகவே இருப்பதால், அவர்களின் எண்ணங்களுக்கும், கனவுகளின் வண்ணங்களுக்கும் ஏற்ப விதவிதமான டிசைன்களில் செருப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன.

எனக்கு தெரிந்த ஒரு பெண் சற்று உடல் எடை அதிகமாக கொண்டவர். இப்போதெல்லாம், டி.வி. நிகழ்ச்சிகளில் அடிக்கடி வந்துபோகும் மாடல்கள் ஒய்யாரமாக அணிந்துவரும் ஹீல்ஸ் செருப்பை தானும் அணிந்து அழகு பார்க்க வேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை.

e58a42aaaf522e2ab8f62983c29f7725

அந்த மாடல் செருப்பு தனக்கு ஒத்து வருமா? என்ற சந்தேகத்துடன், பெரிய ஷோரும்களுக்குச் சென்று தேடிபிடித்து அதை வாங்கி வந்துவிட்டார். அவரது கால் சைசுக்கு தகுந்தாற்போல் பெரிய அளவிலேயே ஹீல்சை தேர்வு செய்திருந்தார்.

எதற்கும் ஹீல்சை பார்ட்டிகளுக்கு அணிந்து போவதற்குமுன், வீட்டில் அதை போட்டுக்கொண்டு கொஞ்சம் டிரெய்லர் பார்ப்போமே… என்ற எண்ணத்தில், அதை அணிந்து கொண்டு அங்கும் இங்கும் நடக்க முயற்சித்தார்.

ஆனால், முதல் அடியே பலமாக விழும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கஷ்டப்பட்டு காலை ஹீல்சுக்குள் விட்டவர், இரண்டு அடி எடுத்து வைப்பதற்குள் தொபுக்கடீர்னு கீழே விழுந்து அடி வாங்கிக்கொண்டதுதான் மிச்சம்.

பொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.

எந்த பொருளாக இருந்தாலும் அதற்கு ஆரம்பம் ஒன்று இருக்கும். இந்த செருப்புக்கு என்றும் வரலாறு உண்டு.

சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, நாகரீக வளர்ச்சியை எட்டாத மனிதர்கள் செருப்பு அணிந்து காடுகளில் அலைந்து திரிந்துள்ளனர். அமெரிக்காவில் போர்ட்ராக்கேவ் என்ற பகுதியில் வாழ்ந்த ஆதிவாசிகள்தான் உலகில் முதன் முதலில் செருப்பை அணிந்துகொண்ட பெருமைக்கு உரியவர்கள்.

இவர்கள் தாவரம் மற்றும் மரங்களின் இலை-தழைகளை மொத்தமாக கோர்த்து, அதை செருப்பு போன்று அணிந்துள்ளனர். அதன்பிறகுதான், பூமியின் பிற பகுதிகளில் வாழ்ந்த மனிதர்கள் செருப்பின் அவசியத்தை உணர்ந்து, அதை உருவாக்கி பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

காலபோக்கில் இலை-தழைகளுக்கு பதிலாக மரம், விலங்குகளின் எலும்புகள் போன்றவற்றை பயன்படுத்தியும் செருப்புகள் உருவாக்கிக்கொண்டார்கள். சில நுறு ஆண்டுகளுக்கு முன்புதான் நாகரீக செருப்புகள் உருவாக்கபட்டு, பயன்பாட்டுக்கு வந்தன.

செருப்பு அணியும்போது, அதற்கு பொருத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.
Km09
பெண்களின் விருப்பங்களுக்கு ஏற்ப இன்றைய புட்வேர் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதுவரை, ஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.

இன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.

எம்ராய்டரி வேலைகள் காணப்படும் செருப்புகளை உருவாக்குவதற்கு என்றே தனி டிசைனர்கள் உள்ளனர். இவர்களின் கை வண்ணத்தில் பல புதிய மாடல்களில், புதிய டிசைன்களில் எம்ராய்டரி வொர்க் செருப்புகள், ஹீல்ஸ்கள் தயாராகி விற்பனைக்கு வருகின்றன.

இன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அணிகின்றனர். நடிகைகளின் கால்களை அலங்கரிக்கும் இந்த அழகு செருப்புகள் தங்கள் கால்களையும் அலங்கரித்தால் எப்படி இருக்கும்? என்று எணும் இன்றைய புதுமை விரும்பி பெண்கள், அந்த குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள்.

இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள்.

இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக்காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக்அப் ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ… என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன.

இந்த செருப்பு வகைகளுடன் மேரி ஜேன் என்ற செருப்பும் இன்றைய புட்வேர் மார்க்கெட்டில் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த செருப்பை வடிவமைத்து உருவாக்கியவர் அமெரிக்க பெண்ணான மேரி ஜேன். அவரது பெயரிலேயே அவர் உருவாக்கிய செருப்பு அழைக்கபடுகிறது. ப்யூர் லெதரால் உருவாக்கப்படும் இந்த செருப்பு, அதை அணிந்து கொள்ளும் பெண்களின் கால்களை கடிக்காது. மாறாக, மென்மையை கொடுக்கிறது.ஹீல்ஸ் வகை செருப்புகள் பெண்களுக்கு பல வழிகளிலும் உதவி புரிகின்றன. குட்டையான பெண்கள் அதை அணிந்துகொண்டால் உயரமான பெண்ணாகி விடுகிறார்கள்.

இந்த ஹீல்ஸ் வகை செருப்பை அணிந்து கொண்டால் முட்டு வலி ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். பொருத்தமான ஹீல்சை தேர்வு செய்து அணிந்தால் இந்த பயம் தேவையில்லை. புதிதாக ஹீல்சை அணியும்போது வலி இருக்கலாம். நாளடைவில் அது சரியாகிவிடும். புதிதாய் எந்த செருப்பு வாங்கி அணிந்துகொண்டாலும் கடிக்கும்தானே…?

ஹீல்சில் பிளாட் மற்றும் பாயின்ட்டட் மாடல்கள் இன்று நிறைய கிடைக்கின்றன. 40 முதல் 50 கிலோ உடல் எடை கொண்ட பெண்கள் மாத்திரமே பாயின்ட்டட் மாடல் ஹீல்சை அணிந்துகொள்ளலாம். மற்றவர்கள் அணிந்தால் சிரமமாக இருக்கும். நடக்கும்போது கால் இடறி விழுந்துவிடக்கூடும். அதேநேரம், பிளாட் மாடல் ஹீல்ஸ்களை எந்த வயதினரும், எவ்வளவு உடல் எடை கொண்டவர்களும் அணிந்து கொள்ளலாம்.

மேலும், ஹீல்ஸ் அணியும்போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். அந்த விஷயங்கள் : ஹீல்சை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் ஓடக்கூடாது. வேகமாகவும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். மழைக்காலங்களில் ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட வேண்டும். அந்த நேரங்களில் ஹீல்ஸ் அசவுகரியத்தையே ஏற்படுத்தும். இந்த வகை செருப்புகளை தனியாக ஒரு பாக்ஸில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்ற செருப்புகளுடன் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், ஹீல்ஸ் பொலிவை இழந்துவிடும். அதன் ஆயுளும் குறைந்துவிடும். ஹீல்சின் பளபளப்பு குறைவதாகத் தெரிந்தால், அவ்வப்போது பாலீஷ் போட்டுக்கொள்ள வேண்டும். பாயின்ட்டட் ஹீல்ஸ் தேர்வு செய்யும்போது, அதில் உள்ள ஹீல்சின் உயரம் 2 முதல் 4 இஞ்ச் வரை மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்வது (நடந்து செல்வதற்கும், உடல் நலத்திற்கும்) நல்லது.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி ஒர்க் செருப்புகள் உள்ளன. இவற்றை மிகச்சிலரே விரும்பி அணிகின்றனர்.
Km10
பாலிவுட் ஹீரோக்களான சல்மான்கான், ஷாருக்கான் ஆகியோர், தங்களைவிட உயரமான தீபிகா படுகோனே, சுஷ்மிதாசென், ஐஸ்வர்யாராய் போன்றோருடன் நடிக்கும்போது பிளாட் மாடல் ஹீல்ஸ் அணிந்து கொள்கின்றனர்.

Related posts

ஒரு குறைபாடற்ற தோலுக்கு மஞ்சளினால் ஏற்படும் 7 நன்மைகள்

nathan

உங்களுக்கு தெரியுமா ஃப்ரிட்ஜில் வைக்கக்கூடாத பொருட்கள் என்ன?

nathan

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

nathan

முகம் அழகா இருக்கா..? டல்லா இருக்கா?

nathan

இதோ ஈஸியான டிப்ஸ். முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென மாறவேண்டுமா?

nathan

நீங்களே பாருங்க.! மகன் ராணுவ வீரனாக வந்த போது மீன் விற்கும் தாய் செய்த செயலைப் பாருங்க…

nathan

அழகு குறிப்பு – வசீகரிக்கும் முகத்திற்கு ஆல்கஹால் ஃபேசியல்ஸ்!. !

nathan

கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்க!…

sangika

பரு தழும்புகள் முகத்தில் மறைய வேண்டுமா

nathan