23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cv
அழகு குறிப்புகள்ஆண்களுக்குமுகப் பராமரிப்பு

இயற்கை பொருட்களை பயன்படுத்தினால் உங்களின் முகம் எப்போதும் இளமையாகவும் பொலிவுடனும் இருக்கும்…..

இன்று மேக்கப் போட்டு கொண்டு சருமத்தை கெடுப்பதிலே பாதி பேர் தனது நாட்களை கடத்துகின்றனர். பெருன்பாலும் இது பெண்களுக்கிடையே பரவி உள்ள பெரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. அதே போன்று சில ஆண்களும் இந்த மேக்கப் மீது மோகம் கொண்டுள்ளனர்.
ஆனால், மேக்கப் ஒருவரை அந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே அழகாக தோன்ற கூடிய போலி பிம்பத்தை தரும். இதற்கு மாறாக இயற்கை ரீதியான பொருட்களை நீங்கள் பயன்படுத்தினால் உங்களின் முகம் எப்போதும் இளமையாகவும் பொலிவுடனும் இருக்கும். மேக்கப் இல்லாமலே அழகு பெறுவது எப்படி என்பதை இனி பார்ப்போம்.

cv

எது அழகு..? பொதுவாகவே வெள்ளை தோல் உடைவார்கள் அழகானவர்களாக ஒரு கட்டமைப்பை நாம் இங்கு ஏற்படுத்தி உள்ளோம். ஆனால், இது முற்றிலும் தவறான கூற்று. அழகு என்பது நிறத்தில் எப்போதும் கிடையாது. கருப்பாகவும், சாதாரண நிறத்தில் இருந்தாலும் அவர்களுக்கென்று தனி அழகு எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும்.

வெதுப்பான எலுமிச்சை நீங்கள் மேக்கப் இல்லாமலே பன்மடங்கு அழகாக வேண்டுமா..? அதற்கு இந்த குறிப்பு நன்கு உதவும். தினமும் வெது வெதுப்பான நீரில் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வாருங்கள். அழுக்குகளை வெளியேற்றவும், சுத்தமான சருமத்தையும் உடலையும் இது தரும். குறிப்பாக முகம் பளபளப்பாக மாற இதனை கடைபிடியுங்கள்.

இளமையான சருமத்திற்கு நீண்ட நாட்கள் இளமையாக் இருக்க வேண்டுமென்றால் இந்த அழகு குறிப்பு நல்ல பலனை ஒரு வாரத்திலே தரு கூடும். அதற்கு தேவையானவை… பாதாம் 6 தேங்காய் பால் 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் பாதாமை ஒரு இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து கொள்ளவும். மறுநாள் அந்த பாதாமை தோல் உரித்து கொண்டு, தேங்காய் பாலை இதனுடன் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கும்.

கிரீன் டீ மேக்கப் இல்லாமல் அழகாக ஜொலிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு கிரீன் டீ தான் சிறந்த தீர்வாகும். கிரீன் டீ குடிப்பதால் பல வகையான நன்மைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக நீண்ட காலம் இளமையாக இருக்க கிரீன் டீ பெரிதும் உதவுகிறது. எனவே, காபி அல்ல்து சாதாரண டீயை ஒதுக்கி வைத்து விட்டு, கிரீன் டீயை தினமும் குடித்து வாருங்கள்.

தேனும் தக்காளியும் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி மினுமினுவென மின்ன வேண்டுமா..? அதற்கு இந்த குறிப்பே போதும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகம் விரைவிலே பொலிவு பெறும். தேவையானவை :- தக்காளி சாறு 2 டேபிள்ஸ்பூன் தேன் 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை :- தக்காளியை நன்கு அரைத்து கொண்டு அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றில் தேன் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் இதனை முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விடவும். மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் முகம் மினுமினுவென மின்னும்.

பருக்களை ஒழிக்க முகத்தில் உள்ள பருக்களை ஒழிக்க பப்பாளி விதையே போதும். பப்பாளி வைத்து செய்கின்ற இந்த குறிப்பு சிறந்த மருந்தாகும். தேவையானவை :- பப்பாளி விதை 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன்

செய்முறை :- பப்பாளி விதைகளை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இவற்றுடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து கொண்டு முகத்தில் உள்ள பருக்கள் இருக்கும் இடத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பருக்கள் மறைந்து போகும். அத்துடன் பப்பாளி விதையில் வைட்டமின் எ இருப்பதால் முகம் பொலிவும் பெறும்.

நீரே போதும்..! உடல் நலத்திற்கும் சருமத்தின் அழகிற்கும் நாம் தினமும் போதுமான அளவு நீர் குடித்தாலே போதும். நீர் தான் இந்த உலகின் முதல் ஆதாரம். அத்துடன் மற்ற அழகு குறிப்புகளை காட்டிலும் உங்களை அழகாக வைத்து கொள்ள தண்ணீர் சிறந்த தீர்வு.

Related posts

அரபிக் குத்து பாடகியா இது.. நீங்களே பாருங்க.!

nathan

சூப்பரான பைங்கன் பர்த்தா பஞ்சாபி சப்ஜி

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா?

nathan

இயற்கை வழியில் வெள்ளையாக வேண்டுமா? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க

nathan

குழந்தைகள் எப்போது நிம்மதியாக தூங்குவார்கள்

nathan

அவதானம்! முக சருமத்தில் ஏற்படக்கூடிய கோளவுரு பாக்டீரியா!

sangika

பெண்களே பளிச்சென்ற முகம் வேண்டுமா? அப்ப தினமும் ஆவி புடிங்க….

nathan

சுவையான உருளைக்கிழங்கு சட்னி

nathan

முகச்சுருக்கம் போக எளிய குறிப்புகள்

nathan