சருமத்தை சுத்தமாகப் பேணுவதற்கு பலவகையான கிளன்சர்களை பயனப்டுத்தி வருகின்றனர். தினமும் குறைந்தது இரண்டு தடவைகளாவது பயன்படுத்துவதனால் அழுக்குகள், இறந்த கலங்கள் நீங்கி சருமம் புத்துணர்ச்சி பெறுவதுடன் மிருதுவாகவும் காணப்படும்.
ஆனால் கடைகளில் கிடைக்கும் அநேகமான கிளன்சர்கள் முழுமையாக இராசாயணப் பதார்த்தங்களால் உருவாக்கப்பட்டதுடன், இவற்றை பயன்படுத்துவதனால் சருமத்தின் இயற்கையான எண்ணெய்த் தன்மை நீங்கி உலர்வடைகின்றது.
ஆனால் வீட்டிலேயே கற்றாளையைப் பயன்படுத்தி கிளன்சர்களை தயாரிக்க முடிவதுடன் இவற்றினால் பக்டீரியாத் தொற்றுக்கள் இருந்தும் பாதுகாப்பு கிடைப்பதுடன் சருமத்தின் பொலிவையும் பேண முடியும்.
கற்றாளையை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது?
1.கற்றாளைச் சாறும் றோஸ் வாட்டரும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு மேசைக்கரண்டி கற்றாளைச் சாற்றுடன் இரண்டு தேக்கரண்டி றோஸ் வாட்டர் பயன்படுத்தி முகத்தினை சுத்தம் செய்து நீரினால் கழுவவும்.
நன்மை:
இதனைப் பயன்படுத்துவதனால் சருமம் ஒரே மாதிரியான நிறத் தோற்றத்தைத் தருகிறது.
2.கற்றாளைச் சாறும் இளநீரும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி கற்றாளைச் சாற்றுடன் ஒரு மேசைக்கரண்டி இளநீர் சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரத்தின் பின் நீரினால் கழுவவும்.
நன்மை:
இது சருமத்தை பளபளப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் பேணும்.
3.கற்றாளைச் சாறும் தக்காளியும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு தக்காளியின் உட்பகுதியுடன் 3 தேக்கரண்டி கற்றாளைச் சாற்றைச் சேர்த்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் ஸ்கிறப் செய்து சில நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும். பின்னர் சருமத்திற்கு மொய்ஸ்டரைசர் பயன்படுத்தலாம்.
நன்மை:
இது இயற்கையான் கிளன்சராக பயன்படுவதனால் அழுக்குகளை நீக்கி பளபளப்பைத் தரும்.
4.கற்றாளைச் சாறும் வெள்ளரிக்காயும்.
பயன்படுத்தும் முறை:
ஒரு தேக்கரண்டி வெள்ளரிக்காய் நீருடன் 3 தேக்கரண்டி உடன் எடுக்கப்பட்ட கற்றாளைச் சாற்றைச் சேர்த்து முகத்தில் சில நிமிடங்கல் ஸ்கிறப் செய்து நீரினால் கழுவவும்.
நன்மை:
இது சரும வடுக்களை நீக்கி சிறந்த சருமத்தைப் ஒஎற்றுத் தரும்.
5.கற்றாளைச் சாறும் ஓட்ஸும்
பயன்படுத்தும் முறை:
½ தேக்கரண்டி ஓட்ஸுடன் 3 தேக்கரண்டி கற்றாளைச் சாற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். அதனை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகலில் ஸ்கிறப் செய்து சில நிமிடங்களில் நீரினால் கழுவி டோனரையும் பயன்படுத்தலாம்.
நன்மை:
ஒரு வாரத்திற்கு 2 அல்லது 4 தடவைகல் செய்வதனால் சருமம் மெனமையாகவும் மிருதுவாகவும் மாறும்.
6.கற்றாளைச் சாறும் பாலும்
பயன்படுத்தும் முறை:
இரண்டு தேக்கரண்டி கரண்டி கற்றாளைச்சாற்றுடன் ஒரு தேக்கரண்டி பாலைச் சேர்த்து நன்ராகக் கலந்து கொள்ளவும். இதனை சருமத்தில் தடவி மசாஜ் செய்து சில நிமிடங்களின் பின் நீரினால் கழுவிக் கொள்ளவும்.
நன்மை:
முகத்தின் அழுக்குகளை நீக்குவதன் மூலம் சருமத்தை பொலிவுறச் செய்யும்.
7.கற்றாளைச் சாறும் கிறீன் டீயும்
பயன்படுத்தும் முறை:
இரண்டு தேக்கரண்டி சீனியற்ற கிறீன் டீயுடன் ஒரு தேக்கரண்டி கற்றாளைச் சாற்றைச் சேர்த்துக் கொள்ளவும். இதனை ஈரலிப்பாக உள்ள முகத்தில் தேய்த்து சில நிமிடங்கலின் பின் நீரினால் கழுவவும். பின்னர் மெய்ஸ்டரைசரை பயன்படுத்தலாம்.
நன்மை:
இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் ஊட்டச்சத்தினையும் வழங்கும்.