25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
pimple mark
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்புமுகப்பரு

வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம்…..

முகம் பார்ப்பதற்கு ஒரு சீராக இருந்தால் அழகாக இருக்கும். ஆனால் பருக்களும், கருப்பாக திட்டுத்திட்டாக இருத்தலும், கரும்புள்ளிகளும், முக அழகை முற்றிலுமாக கெடுத்து விடும். குறிப்பாக இந்த கருந்திட்டுகள் முக அழகை முழுமையாக கெடுக்கிறது.இதனை சரி செய்ய கண்ட கிரீம்களை நாம் முகத்தில் தடவ வேண்டியதில்லை. மாறாக ஒரு சில இயற்கை முறைகளை கடைபிடித்தாலே போதும். அதுவும் வீட்டிலிருந்த பொருட்களை வைத்தே நாம் இந்த கருமையான திட்டுகளை சரி செய்து விடலாம். எப்படி என்பதை இனி அறிந்து கொள்வோம்.
pimple mark
கருமையான திட்டுக்களா..? முகத்தின் அழகை இந்த கருந்திட்டுகள் கெடுகிறதா..? இது வருவதற்கு பல காரணிகள் உள்ளன. குறிப்பாக முகத்தில் கண்ட வேதி பொருட்களை தடவுதல், ஊட்டசத்து குறைபாடு, வெயிலில் அதிகமாக இருத்தல் போன்றவற்றால் ஏற்படுகிறது எனலாம். இதை சரி செய்ய வழிகள் இதோ…

உருளை கிழங்கு போதுமே..! முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கருமையான திட்டுகளை எளிதில் போக்குவதற்கு இந்த குறிப்பு உங்களுக்கு நன்கு உதவும். இதற்கு தேவையானவை… தேன் 1 ஸ்பூன் உருளைக்கிழங்கு சிறிது 1 எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் மஞ்சள் சிறிது பன்னீர் சிறு துளி

செய்முறை :- முதலில் உருளைக்கிழங்கை தோல் உரித்து அரைத்து கொள்ளவும். அடுத்து இதன் சாற்றை மட்டும் எடுத்து கொண்டு, இதனுடன் எலுமிச்சை சாறு, பன்னீர், மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலக்கி கொள்ளவும். இதனை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் கருந்திட்டுகள் நீங்கி முகம் பொலிவாக மாறி விடும்.

உடனடி நிவாரணம்… இந்த முறையை பயன்படுத்தினால் உடனடியாக இந்த கருந்திட்டுக்களை போக்கி விடலாம். வாரத்திற்கு ஒரு முறை இந்த குறிப்பை செய்து வரலாம். தேவையானவை :- பால் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் பாதாம் எண்ணெய் 1/2 ஸ்பூன்

செய்முறை :- முதலில் பாலுடன் தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். பிறகு பாதாம் எண்ணெய்யையும் கலந்து முகத்தில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு முகத்தை 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்து வந்தாலே உங்களின் முகம் வெண்மை பெறும்.

பழவகை முறை முகத்தில் பழங்களை தடவினால் எல்லா வித பதிப்புகளில் இருந்தும் தப்பித்து கொள்ளலாம். குறிப்பாக இந்த கருந்திட்டுக்களை குணப்படுத்த இந்த குறிப்பு உங்களுக்கு உதவும். தேவையானவை :- ஆரஞ்சு பழ சாறு 1 ஸ்பூன் தக்காளி சாறு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் யோகர்ட் 1 ஸ்பூன்

Related posts

நீங்களே பாருங்க.! சிறுமியின் முதல் விமான பயணம்:: அதே விமானத்தில் பைலட்டாக நின்ற தந்தை!

nathan

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இரவு தூங்குவதற்கு முன்னால் உங்க முகத்தை கழுவினால் என்ன அற்புதம் நடக்கும் தெரியுமா?

nathan

பணத்தை காந்தம் மாதிரி இழுக்கும் 5 ராசிக்காரங்க…

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கணவனுக்கு கோவில் கட்டி பூஜை செய்து வரும் மனைவி

nathan

சரும கருமையை நீக்க வீட்டிலேயே எலுமிச்சை ஃபேஷியல் செய்வது எப்படி?

nathan

இதை நீங்களே பாருங்க.! மகளின் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை கஜோல் !!

nathan

பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்க பூண்டை இவ்வாறு பயன்படுத்துங்கள்!…

nathan

அழகு குறிப்புகள்:மினுமினுப்பான கழுத்துக்கு….

nathan