26.9 C
Chennai
Sunday, Nov 24, 2024
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தை பளபளப்பாக்கும் திராட்சை பழ ஜூஸ்

bty(25)திராட்சை பழம் நல்லவகை மது தயாரிப்பதற்கு மட்டும் அல்லாமல் உடலுக்கும் நல்ல மருத்துவ குணங்களும் உண்டு. இப்பழத்தில் உள்ள  ரெஸ்வெராட்ரால் அல்லைமர் நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இவை உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக்  அமிலத்தையும் நீக்க உதவுகின்றது.

முகத்தை சுத்தப்படுத்தும்

வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதமுள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில்  ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள்  சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது.

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பு

ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ள இப்பழச் சாற்றின் மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் கூடிய சரும பாதிப்புகள் மற்றும் வெப்பத்தினால் வரும்  கட்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். திராட்சை சாறு இயற்கையாகவே சருமப் பிரச்னைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில்  காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.

ஒளிரும் சருமம்

இந்த சாறை அருந்தும் போது இரத்தத்தை சுத்தம் செய்து, அதில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. இந்த பழச்சாற்றில்  அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. தினசரி ஒரு கப் சுத்தமான திராட்சை ரசத்தை அருந்தும் போது சருமம் ஒளிரும் வண்ணம் அமைகின்றது.நல்ல இரத்தம் உற்பத்தியினாலும் அதன் சீரான ஓட்டத்தினாலும் ஒளிரும் சருமம் கிடைக்கின்றாது. இது மிக ஆரோக்கியமானதாகும்.

ஈரப்பத மூட்டுதல்

திராட்சையின் நற்குணங்களை காட்டிலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இவை நமது சருமம் முழுவதும்  பாதுகாக்க உதவுகின்றது. ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.  இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும்.

கண்களுக்கு நல்லது

கண்களில் கருவளையங்களை கொண்டவர்கள் பலர் உண்டு. அது மிகவும் அசிங்கமாக இருக்கும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே  தடவினால் போதும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

வறண்ட சருமத்தை சீர் செய்கிறது

ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் முட்டையின் வெள்ளை கருவை கலந்து முகத்தில் போட்டு 10 நிமிடங்கள் கழித்தப்  பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் வரண்டு விடமால் இருக்கும். இதை தொடர்ந்து செய்து வந்தால் முகம் எப்போதும்  புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

Related posts

90ஸ் கனவுக்கன்னி நடிகை ஹீரா.. தற்போது எப்படி இருக்கிறார்

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

கன்னத்தை பளபளப்பாக்கும் அழகு குறிப்புகள் -பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

வீட்டிலேயே லிப் பாம் தயாரிப்பது எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

sangika

முகம் பளபளக்க சீரகத் தண்ணீர்!…தெரிந்துகொள்வோமா?

nathan

சூப்பர் டிப்ஸ்.. முக அழகிற்கு…

nathan

அழகுபராமரிப்பிற்கும் உதவும் துளசி!…

sangika

முகத்தில் இருக்கும் கருமையான படலத்தைப் போக்க சில டிப்ஸ்…

nathan

இந்த பேக்கை முகத்தில் போடும்போது முகத்துக்கு நல்ல பொலிவை கொடுக்கும்.

nathan