22.4 C
Chennai
Saturday, Dec 13, 2025
What is pimples SECVPF
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்புமுகப்பரு

ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் முகப்பரு…..

காரணங்கள்:

1. எண்ணெய்ச் சுரப்பி (மெழுகு சுரப்பி) களில் ஏற்படும் அடைப்பு, சுரப்பி பெரிதாதல், எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, இறந்த தோல் செல்கள், சூழ்நிலையால் அசுத்தங்கள்,

2. நுண்கிருமி தாக்கம் : “புரோப்யோளி பாக்டீரியம் ஆக்னே” இதன் தாக்கம் காரணமாக பருக்களில் சுழற்சி ஏற்பட்டு, சிவந்து, சீழ்பிடிக்க வகை செய்கிறது. மேலும் இதனால் பருக்கள், முகத்தில் கரும்புள்ளி போன்றவை ஏற்படுகிறது.

3. காரணிகள்:

1. மரபு வழி (குடும்ப வழி)

2. ஹார்மோன் மாற்றம்,

3. மாதவிடாய் சுழற்சி,

4. தோல் சுழற்சி,5. மன அழுத்தம்,

6. சில வகை மருந்துகள்,

7. இரசாயன சேர்மங்கள்,

8. உணவு பழக்க முறை அதிக சர்க்கரை உணவுகள், அதிகப்படியான கொழுப்பு சுத்திகரிக்கப்பட்ட உணவு பொருட்கள்,

9. பால் பொருட்கள்,

10. புகை பிடித்தல்,

11. கர்ப்ப காலம்,

12. சார்பு நிலை நோய்கள், உடல் பருமன், கருப்பை நீர்க்கட்டி, நாளமில்லா சுரப்பி நோய்கள்

சிகிச்சை முறைகள் : சரியான நேரத்தில் தகுந்த சிகிச்சை எடுக்காவிடில் முகத்தில் கரும்புள்ளிகள் ஆழமாக தழும்புகள் ஏற்பட்டு விகாரமான தோற்றத்தை உண்டு பண்ணக் கூடியது. எந்தவொரு சிகிச்சையும் பலனளிக்க குறைந்த பட்சம் 2, 3 மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும். மேலும் பருக்கள் மீண்டும் வராமலிருக்க தொடர் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பருக்களை கிள்ள கூடாது. தேவைக்கு அதிகமாக முகத்தில் கீரிம்  போடக்கூடாது.  அதிக இனிப்பு, கொழுப்பு உள்ள தின்பண்டங்களை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவ கூடாது. தரமான சோப் கொண்டு இரண்டு முறை முகம் கழுவலாம். சிகிச்சை முறைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மாற்றவோ, நிறுத்தவோ கூடாது.

Related posts

கால்களை அழகாக்க இத செய்யுங்கள்!…

sangika

சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவும் சில இயற்கை வழிகள்

nathan

கண்டிப்பா இத பண்ணுங்க.! சருமம் அதிகமா வியர்க்குதா?

nathan

குளிர்காலத்தில் உதட்டை எப்படி பராமரிக்கணும் தெரியுமா?

nathan

கருவளையங்களை போக்க சில டிப்ஸ்

nathan

பட்டான அழகிய சருமத்தை பெறுவது மிகவும் கடினமான காரியம் அல்ல!..

sangika

முகம் மற்றும் உடல் சத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்!…

sangika

முகப்பருவை விரைவில் மாயமாக மறையச் செய்வது எப்படி?

nathan

காய்ச்சலை தவிர்ப்பதற்கான 10 வீட்டு சிகிச்சைகள்!!! சூப்பரா பலன் தரும்!!

nathan