27.6 C
Chennai
Tuesday, Jan 14, 2025
kalakkai
கூந்தல் பராமரிப்புஅலங்காரம்முகப் பராமரிப்பு

கலாக்காய்யின் நன்மைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்…..

ஒரு சிறிய கருப்பு மற்றும் பச்சை, சிவப்பு உருண்டை போல் இருக்கும் ஒரு பழம் உங்கள் சருமத்திற்கும் கூந்தலுக்கும் பல அற்புத நன்மைகளைத் தருகிறது. ஆம், அது கலாக்காய். கலாக்காய் என்பதை நாம் அனைவரும் கேள்விப்பட்டிருப்போம்.

இது தென் அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. அன்டி ஆக்சிடென்ட் நிறைந்த கலாக்காய் சருமத்தை தீங்கு விளைவிக்கும் கூறுகளிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின்கள், கனிமங்கள், ஆகியவை அதிகம் இருப்பதால் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பில் பல நன்மைகளைச் செய்கிறது. இதனை உட்கொள்வதாலும் உடலில் மற்றும் சருமத்தில் மாஸ்க் போல் பயன்படுத்துவதாலும் பல அற்புதங்கள் நிகழ்கின்றன. கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள் சிலவற்றை கீழே குறிப்பிட்டுள்ளோம்.

kalakkai

வயது முதிர்வைத் தடுக்கும் கலாக்காய் வைடமின் மற்றும் ஊட்டச்சத்துகளின் ஆதாரமாக விளங்குகிறது. சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் கூறுகளை அழிக்கும் தன்மை இருப்பதால் வயது முதிர்விற்கான அறிகுறிகளைத் தாமதப்படுத்துகிறது. அதனால் வயது முதிர்வைத் தடுக்கும் க்ரீம் மற்றும் சீரம் போன்றவற்றில் கலாக்காய் ஒரு முக்கிய மூலப்பொருளாக சேர்க்கப்படுகிறது. தொடர்ந்து கலாக்காய் சாப்பிடுவதால் அல்லது பயன்படுத்துவதால் பொலிவான சருமம் உறுதியாக கிடைக்கிறது.

சரும நிறமிழப்பு சரும நிறமிழப்பைக் குறைப்பது கலாக்காயின் முக்கிய பண்புகளுள் ஒன்றாகும். மேலும் கருந்திட்டுகளைப் போக்கி சருமத்தை வெண்மையாக்க உதவுகிறது

பருக்கள் மற்றும் கட்டிகள் பருக்கள், கட்டிகள், மற்றும் கொப்பளங்கள் சிகிச்சைக்கு கலாக்காய் பெருமளவில் பயன்படுகிறது. இதன் அழற்சி எதிர்ப்பு தன்மை காரணமாக பல்வேறு சரும பிரச்சனைகளையும் தீர்க்க இது உதவுகிறது.

தழும்புகளைப் போக்குகிறது பருக்கள் மற்றும் கட்டிகளை போக்குவதில் மட்டுமல்ல பல்வேறு சரும பாதிப்புகளையும் போக்க வல்லது இந்த கலாக்காய். பருக்கள் மற்றும் கட்டிகள் மூலமாக சருமத்தில் உண்டாகும் தழும்புகளை போக்கி களங்கமற்ற சருமம் உண்டாக்குவதில் நல்ல பலன் தருகிறது.

நீர்ச்சத்து மற்றும் புத்துணர்ச்சி சருமத்தை புத்துணர்ச்சி தந்து நீர்ச்சத்தோடு வைக்க உதவும் ஒரு பொருள் கலாக்காய். உங்கள் உடலில் மிகவும் உணர்ச்சி மிகுந்த பகுதி உங்கள் சருமம் என்பதால் எளிதில் எந்த ஒரு பிரச்சனையும் அதனை பாதிக்கலாம். அதனால் காலகட்டத்திற்கு ஏற்ப கிடைக்கும் பழங்கள் மூலம் அவற்றின் நன்மைகளை சருமத்திற்கு கொடுப்பது மிகவும் அவாசியம். இதற்கு கலாக்காய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

மென்மையான உதடு சருமத்தை மேம்படுத்த மட்டுமில்லாமல் அழகான உதடுகளைப் பெறவும் கலாக்காய் உதவுகிறது. கலாக்காயை தொடர்ந்து பயன்படுத்துவதால் உங்கள் உதடுகள் மிகவும் மிருதுவாக, மென்மையாக நீர்ச்சத்துடன், பிங்க் நிறத்தில் இருக்க முடிகிறது. கலாக்காயில் ஈரப்பதத்திற்கான தன்மைகள் இருப்பதால் அவை உதடுகளுக்கு நன்மையைச் செய்கின்றன. கலாக்காய் பயன்படுத்தி வீட்டிலேயே லிப் பாம் தயாரித்து உபயோகிக்கலாம். அல்லது கடையில் வாங்கியும் பயன்படுத்தலாம்.

கூந்தலுக்கு கலாக்காயின் நன்மைகள் கலாக்காய் உங்கள் சருமத்திற்கு மட்டும் நன்மை தருவதில்லை உங்கள் கூந்தலும் கலாக்காயால் பல நன்மைகளை அடைகின்றது. கலாக்காய் பயன்படுத்துவதால் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

கூந்தலின் வேர்க்கால் கலாக்காய் முடியின் வேர்க்கால்களை வலிமையாக்க உதவுகிறது. அதனால் கூந்தல் வலிமையுடன், ஆரோக்கியமாக, பளபளப்பாக, நீளமாக வளர்கிறது. கலாக்காயில் உள்ள ஊட்டச்சத்துகள் முடி உதிர்வு, முடி உடைவது போன்றவற்றைக் குறைக்கிறது , மேலும் நுனி முடி உடைவது மற்றும் கூந்தல் சேதமடைவது போன்றவற்றைத் தடுக்கிறது.

கூந்தல் வளர்ச்சி கலாக்காயில் புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் கூந்தல் வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள வைட்டமின்களான ஏ, பி காம்ப்ளெக்ஸ், சி, ஈ போன்றவை கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகின்றன. புரதம், ஊட்டச்சத்து, மற்றும் வைட்டமின்கள் இணைந்து முடி வளர்ச்சியை அதிகரிக்கின்றன.

உச்சந்தலை ஆரோக்கியம் கூந்தல் ஆரோக்கியமாகவும் வலிமையாகவும் இருப்பதற்கு உச்சந்தலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம். உச்சந்தலை ஆரோக்கியத்தை அதிகரிப்பதில் கலாக்காய் பெரும் பங்கு வகிக்கிறது. உச்சந்தலை ஆரோக்கியத்தை உள்ளிருந்து ஊக்கப்படுத்தி ஆரோக்கியமான முடியைத் தருகிறது. தொடர்ந்து கலாக்காயை பயன்படுத்தி வருவதால் முடியின் வேர்க்கால்கள் வலிமையடைந்து போதிய கவனம் மற்றும் பராமரிப்பு கிடைக்கப்பெறுகிறது.

Related posts

பளிச் சென்ற முகத்திற்கு..

nathan

உங்க முகத்தில் அசிங்கமாக மேடு பள்ளங்கள் உள்ளதா? அப்ப இத படியுங்க…………

nathan

தழும்புகளை மறைய வைக்க ‘விட்டமின் ஈ’ உதவுமா?அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

nathan

தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவை!..

sangika

உங்களுக்கு தெரியுமா முகப்பருக்களை வந்த இடம் தெரியாமல் விரட்டும் இயற்கை வைத்தியம்…!

nathan

விட்டமின் ஈ கேப்ஸ்யூலை எப்படி அழகிற்கு உபயோகிப்பது?

nathan

வீட்டிலேயே முகப்பொலிவை அதிகரிக்க செய்யும் வழிமுறைகள்!

nathan

எண்ணெய் வடியாத சருமம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? தீர்வுகள் இங்கே

nathan

ஒரு வாரத்தில் ஒளிரும் தோலை பெறவது எப்படி – மற்றும் நாளுக்கு நாள் அதற்கான வழிமுறைகள

nathan