வசலின் மற்ற க்ரீம்களைப் போல் இல்லாமல் கையில் எடுக்கும்போது, எண்ணெய் வடிவில் இருப்பது நமக்கு வரப்பிரசாதம். நம்முடைய அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களில் பல்வேறு வகைகளில் வசலினை நாம் பயன்படுத்துகிறோம்.
சருமச் சுருக்கத்தைப் போக்க, மாய்ச்சரைஸருக்குப் பதிலாகவும், மேக்கப்பை நீக்குவதற்கு என பல்வேறு வகைகளில் பயன்படுகிறது. அப்படி நம்முடைய சருமத்துக்கு எதற்கெல்லாம் வசலினைப் பயன்படுத்தலாம் என்று இங்கே விரிவாகப் பார்ப்போம்.
பெட்ரோலியம் ஜெல்லி
இந்த வாசலின் என்பது பெட்ரோலியம் ஜெல்லி என்பது உலக அளவில் எல்லோருக்கும் தெரிந்தது. இது உலக அளவில் மிகவும் பிரபலமான ஒரு பொருள். இது வீட்டில் சில விஷயங்களுக்கும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இது எப்படி இத்தனை விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அதில் அப்படி என்ன இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். வாசலினில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கின்றன. மேலும் நம்முடைய சருமத்துக்குத் தேவையான மினரல்களும் அதில் அடங்கியிருக்கின்றன.
பயன்படுத்தும் முறை
ஒவ்வொருவரும் அழகு சாதனப் பொருள்களையோ இதுபோன்ற க்ரீம்களையோ அவரவர் விருப்பத்துக்குத் தகுந்தபடி பயன்படுத்துவார்கள். அது முற்றிலும் தவறு. நாம் பயன்படுத்தும பொருளில் என்ன வகையான மினரல்கள் இருக்கின்றன என்று தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி, அதற்குரிய விஷயங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அப்படி இந்த வாசலினை நம்முடைய சருமத்தில் எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்?
சுருக்கங்கள் நீக்க
சருமத்தில் குறிப்பாக நெற்றி, கன்னம் மற்றும் கண்களுக்கு அடியில் உண்டாகும் சருமச் சுருக்கங்களைப் போக்குவதற்கு வாசலினைப் பயன்படுத்தலாம். இதிலுள்ள ஆண்டி ஆக்சிடணட் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவை சருமத்தில் ஏற்படும் சுருகு்கத்தை நீக்குகிறது. சிறிதளவு வாசலினை கையில் எடுத்து சுருக்கங்கள் உள்ள இடங்களில் இரவு நேரங்களில் அப்ளை செய்துவிட்டு படுக்கலாம். வாரத்துக்கு மூன்று நாட்கள் இதை செய்யலாம்.
கண்ணிமைகள்
சிலருக்கு கண்ணிமையில் உள்ள முடீகள் மிகவும் பலவீனமாக இருக்கும். முடியே இருக்காது. கொட்டிக் கொண்டே இருக்கும். இதற்கு மிகச்சிறந்த தீர்வாக வாசலின் இருக்கும். கண்ணிமைகளில் உள்ள வேர்க்கால்களை உறுதியடையச் செய்யும். ஒரு சிறிய காட்டன் அல்லது மஸ்காரா அப்ளை செய்யும் பிரஷ்ஷில் சிறிதளவு வாசலினை எடுத்து கண்ணிமை முடிகளின் வேர்கு்கால் பகுதிகளில் தினமும் இரவில் அப்ளை செய் வாருங்கள். மிக வேகமாகவே கண்ணிமைகளில் முடி உறுதியாகும். உதிராமல் வளர ஆரம்பிக்கும்.
விரல்கள் மென்மையாக
வாசலினில் உள்ள வேதிப்பொருள்கள் இயற்கையாகவே உங்களுடைய விரல்களுக்கு மென்மையைக் கொடுக்கும். நகங்களைப் பாதுகாத்து உறுதியாக்கும்.
சில நாட்கள் பயன்படுத்தியதுமே உங்களுடைய நகங்கள் உறுதியடைந்திருப்பதை உங்களால் உணர முடியும். கைகளுக்கு தடவும் மாய்ச்சரைஸர் க்ரீம் களுக்கு பதிலாக குறைந்த செலவில் நீங்கள் வாசலினையே பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேக்கப் ரிமூவர்
மேக்கப்பை கலைப்பதற்கு சோப்புத் தண்ணீரோ அல்லது கெமிக்கல்கள் கலந்த மேக்கப் ரிமூவல் க்ரீம்களையோ இனி பயன்படுத்த வேண்டாம். ஒரு காட்டன் பந்திலோ அல்லது கைகளிலோ வாசலின் க்ரீமை எடுத்து முகத்தில் அப்ளை செய்து, சில நிமிடங்கள் கழித்து மென்மையான துணி கொண்டு துடைத்தாலே போதும் முகத்திலுள்ள அத்தனை மேக்கப்பும் நீங்கிவிடும். சருமமும் மென்மையாகும். மீண்டும் கழுவ வுண்டிய அவசியம் இல்லை.
தழும்புகள் நீங்க
நம்முடைய உடம்பில் பல்வேறு காரணங்களா்ல உண்டாகும் காயங்களால் தழும்புகள் இருக்கும். அது என்ன செய்தாலும் மறைவதில்லை. குறிப்பாக, பெண்களுக்கு பிரசவத் தழும்புகள் மறைவதில்லை. அப்பேர்ப்பட்ட பிரசவத் தழும்புகளையும் இந்த வாசலின் மறையச் செய்துவிடும். இதிலுள்ள வைட்டமின் ஈ மற்றும் பேட்டி ஆசிடுகள் தழும்புகளை மறையச் செய்கின்றன. தினமும் இரவு படுக்கச் செல்லும் முன் வயிற்றுப்பகுதியில் அல்லது தழும்பு உள்ள இடத்தில் வாசலினைத் தடவிவிட்டு, காலையில் வெதுவெதுப்பான நீரில் அந்த பகுதியைத் துடைத்துவிடுங்கள்
தலைமுடிக்கு
சருமத்துக்கு மட்டுமல்ல. தலைமுடியின் ஆரோக்கியத்துக்கும் கூட வாசலின் பயன்படுகிறது. கண்ட கண்டிஷ்னரையும் போட்டு தலைமுடி உதிர்தல் அதிகமாகிவிடுகிறது. உங்களுக்கு தேவையான அளவு வாசலினை எடுத்து வேர்க்கால்களைத் தவிர்த்து முடியில் நுனி வரை தேய்த்துக் கொள்ளுங்கள். பின் அரை மணி நேரம் கழித்து உங்களுடைய வழக்கமான ஷாம்புவைப் பயன்படுத்தி தலைமுடியினை அலசலாம்.
பாதங்களுக்கு
பாதங்கள் நீரோட்டத்துடன் வெடிப்பின்றி பளபளப்பாக இருப்பதற்கும் பாாதங்களில் உள்ள பித்த வெடிப்பைப் போக்குவதற்கும் வாசலின் உதவுகிறது.
சிறிதளவு வாசலினை எடுத்து குதிகால் பாதங்களில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்துவிடுங்கள். உண்டாகும் மாற்றத்தை நீங்களே காண்பீர்கள். இதை வாரத்துக்கு மூன்று முறை செய்தால் போதுமானது.