26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
1524336507
அறுசுவைஅசைவ வகைகள்

மீன் மிளகு மசாலா செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

துண்டு மீன் – அரை கிலோ
வெங்காயம் – 2௦௦ கிராம்
பச்சை மிளகாய் – நான்கு
இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகு தூள் – நான்கு டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – ஐந்து
கொத்தமல்லி இலை – ஒரு கப்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
உப்பு – தேவைகேற்ப
எண்ணெய் – தேவைகேற்ப
கறிவேப்பிலை – சிறிதளவு

1524336507
செய்முறை :

* வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* மீனை நன்றாக கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

* கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கறிவேப்பில்லை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்த பின் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள் தூள், போதுமான அளவு உப்பு சேர்த்து கிளறவும்.

* அனைத்தும் ஒரளவு வதங்கியதும் மீன் சேர்த்து, உடையாமல் வேகும் வரை அவ்வப்போது கிளறி, புரட்டி விடவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து மூடி வைத்து வேக விடவும்.

* மீன் வெந்ததும், மிளகு துளை சேர்த்து கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி இலையை சேர்த்து கிளறி இறக்கவும்.

* மீன் மிளகு மசாலா ரெடி.

Related posts

“நாசிக்கோரி”

nathan

KFC ஸ்டைல் ப்ரைடு சிக்கன் – KFC Style Fried Chicken

nathan

முட்டை தோசை

nathan

கார உருளைக் கிழங்கு போளி செய்வது எப்படி

nathan

சூப்பரான காரைக்குடி நண்டு மசாலா

nathan

வெல்ல அதிரசம்

nathan

சுவையான… முட்டை தொக்கு

nathan

சுவையான வறுத்தரைச்ச சிக்கன் குழம்பு

nathan

செட்டிநாடு மட்டன் கிரேவி செய்வது எப்படி?

nathan