வயது ஆக ஆக நமது சருமத்தின் தோற்றம் நிச்சயம் மாற தொடங்கும். ஆனால், பலருக்கு வயதாகாமலே இது போன்ற மாற்றங்கள் வர தொடங்கும். இந்த மாற்றத்தை இளம் வயதிலே சந்தித்திருக்கும் ஆண்களுக்கு பல இயற்கை முறைகள் உள்ளன.
நாம் இன்று பயன்படுத்தும் கண்ட கிரீம்கள் உண்மையில் நமது முகத்தை அழகு செய்வதில்லை. மாறாக அது போன்ற ஒரு பிம்பத்தை நமக்கு தருகிறது. முகத்தில் உள்ள சுருக்கங்களை எளிதாக போக்குவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை இனி தெரிந்து கொள்வோம்.
இப்போவேவா சுருக்கம்..? சுருக்கங்கள் முகத்திலும் தோளிலும் ஏற்படுவது இயல்பு தான். என்றாலும், பலருக்கு இது மிக மோசமான அனுபவத்தையே தருகிறது. ஏனென்றால் முகத்தில் சுருக்கங்கள் மிக குறைந்த வயதிலே வந்து விடுகிறது. இதற்கு பல காரணிகள் உள்ளன. ஊட்டசத்து குறைபாடு, சுற்றுசூழல் மாற்றம், வேதி பொருட்கள் பயன்பாடு போன்றவற்றை சொல்லலாம்.
முட்டை வைத்தியம் முட்டையின் வெள்ளை கருவின் மகிமை நம்மில் பலருக்கும் தெரியும். நமது முகம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் உதவுகிறது. முக சுருக்கங்களை போக்குவதற்கான வழி… வெள்ளை கரு 1 யோகர்ட் 1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை 1 ஸ்பூன்
செய்முறை :- முதலில் முட்டையின் வெள்ளை கருவை நன்கு அடித்து கொள்ளவும். அடுத்து இதனுடன் சர்க்கரை மற்றும் யோகர்ட் சேர்த்து மீண்டும் அடித்து கொள்ளவும். இந்த கூழ்மையை முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் எளிதில் இளமையான அழகை பெறலாம்.
கற்றாழை போதுமே..! முக சுருக்கங்களை உடனடியாக நீக்குவதற்கு ஒரு அருமையான குறிப்பு உள்ளது. அதற்கு தேவையானவை… கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் பழுத்த தக்காளி 1 பழுத்த வாழை பழம் பாதி
செய்முறை :- தக்காளி அரிந்து கொண்டு, அதன் விதையை நீக்கி கொள்ளவும். பிறகு கற்றாழை ஜெல், வாழைப்பழம், தக்காளி ஆகியவற்றை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவவும். 30 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் கழுவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தாலே முக சுருக்கங்கள் மறைந்து போகும்.
சுருக்கங்களை எளிதில் போக்க முகத்தில் உள்ள சுருக்கங்களை போக்குவதற்கு பல வகையான பொருட்கள் வேண்டியதில்லை. மாறாக இந்த இரண்டு பொருட்களே போதும். தேவையானவை :- தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா 1 ஸ்பூன்
செய்முறை :- முதலில் பேக்கிங் சோடாவில் இந்த தேங்காய் எண்ணெய்யை ஊற்றி கலந்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்டை முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்யவும். பிறகு வெது வெதுப்பான நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் சுருக்கங்கள் நீங்கி விடும்.
வாழைப்பழ முறை பல்வேறு நலன்களை கொண்ட இந்த வாழைப்பழத்தை நாம் முகத்தின் சுருக்கங்களை போக்குவதற்காகவும் பயன்படுத்தலாம். இதற்கு தேவையானவை… பழுத்த வாழைப்பழம் பாதி ஆலீவ் எண்ணெய் 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன்
செய்முறை :- வாழைப்பழத்தை நன்கு மசித்து கொள்ளவும். பிறகு இதனுடன் தேன் மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவி இதமாக மசாஜ் தரவும். இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முக சுருக்கங்கள் மறைந்து போகும்.