29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
625.500.560.350.160.300.053.800.900.160.90
முகப்பருஅழகு குறிப்புகள்

வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும் கரும்புள்ளி காணாமல்போகும்……

கோடைக் வெயிலின் தாக்கம் காரணமாகச் முகச்சருமம் அதிகளவு பாதிக்கப்படும்   இதனால், எப்போதும் களைப்பான தோற்றமாக இருக்கும். இதற்கு காரணம்  சருமத்தில் உள்ள மெலனின் அளவு அதிகரிப்பால் தான்.  இதைத் தவிர்க்க, பியூட்டிபார்லருக்குத்தான் செல்ல வேண்டும் என்றில்லை. வீட்டிலேயே தினமும் அரை மணி நேரம் செலவு செய்தால் போதும். எப்போதும் பிரெஷ்ஷாக இருக்கலாம்.
கரும்புள்ளி மறைய:
சிலருக்கு முகத்தில் பருக்கள் வந்த தடம், கரும்புள்ளியாக மாறியிருக்கும். இந்தக் கரும்புள்ளிகளை நீக்குவதில் தேன் மிகச்சிறந்த பணியாற்றுகிறது. மேலும், சருமத்தின் நிறத்தை அதிகரிக்கவும் தேன் பயன்படுகிறது. எனவே, தினமும் ஒருமுறை சுத்தமான தேனை முகத்தில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு, குளிர்ந்த நீரால் கழுவினால், கரும்புள்ளிகள் குறையும்.

ஜாதிகாய்த்தூளுடன் சந்தனத்தூளைச் சம அளவில் எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள்தூள் கலந்து முகத்தில் பேஸ் பேக் போட்டு, 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படித் தொடர்ந்து செய்தாலும் கரும்புள்ளி காணாமல்போகும்.

சில பெண்களுக்கு முகம் பளிச்சிட்டாலும் கண்கள் சோர்வடைந்து காணப்படும். இது அவர்களின் முக அழகைக் கெடுக்கும். எனவே, கண்களைப் புத்துணர்வுடன் வைத்திருக்க, ஒரு வெண்தாமரையின் இதழ்களை 10 மில்லி விளக்கெண்ணெய்யுடன் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். இதை, காற்றுப்புகாத டப்பாவில் சேமித்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதைக் கண்கள் மீது தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிர்ந்த தண்ணீரில் கழுவினால், புத்துணர்ச்சியும் குளிர்ச்சியும் கிடைக்கும். மேலும், விளக்கெண்ணெய்யைப் பயன்படுத்தி, வலதுபுறத்திலிருந்து இடதுபுறம், இடதுபுறத்திலிருந்து வலதுபுறம் என கண்களைச் சுற்றி மெதுவாக மசாஜ் செய்தாலும், கண்கள் கோலிக்குண்டாக மிளிர்ந்து கூடுதல் அழகைத் தரும்.

கிர்ணிப்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து கழுவிவிட்டால், முகம் பளிச்சென்று மாறிவிடும்.

வேகவைத்த உருளைக்கிழங்கு, துளி உப்பு, துளி கிளிசரின், 2 துளி வினிகர் ஆகியவற்றின் கலவையை முகத்தில் பூசிக்கொண்டால், பளிச்சென இருக்கும். 4 பாதாம்பருப்பு அரைத்த விழுதுடன், தேன் மற்றும் பால் ஒரு டீஸ்பூன் சேர்த்து பூசுங்கள். 5 நிமிடங்கள் கழித்து கழுவிவிடுங்கள். இது, முகத்துக்கு புரோட்டின் தன்மையை அளித்து ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

Related posts

இரண்டே வாரத்தில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க வேண்டுமா

nathan

ஒளிரும் சருமத்திற்கு இயற்கை ஃபேஸ் பேக்

nathan

சருமத்தை பொலிவாக்க கடைபிடிக்க வேண்டியவை

nathan

பரு தழும்புகள் முகத்தில் மறைய வேண்டுமா

nathan

உங்களுக்கு தெரியுமா ரோஜா பூவின் 7 அழகு நன்மைகள்!

nathan

குளிர்காலங்களில் குளிர்ந்த நீரில் குளிக்க அச்சப்படுகிறவர்களுக்கு ஆரோக்கியமான குளியல் சித்தமருத்துவ முறைப்படி!…

sangika

டிசம்பர் மாதம் எப்படி இருக்கும்? இவர்களுக்கு ராஜயோகம்தான்!

nathan

கண்சொர்வு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள சில டிப்ஸ் இங்கே பார்க்கலாம் வாங்க..

sangika

முகம் கழுவும் போது செய்ய வேண்டியவை

nathan