25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
cvpic5 1540987094
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா இந்த பழத்தை இப்படி முகத்தில் பயன்படுத்துங்க, பருக்கள் எல்லாம் காணாமல் போய் விடும்..!

முகத்தை வெண்மையாக மாற்ற பல வழிகள் இருந்தாலும் இயற்கை முறையே மிக சரியான முறையாக பலராலும் கருதப்படுகிறது. முகத்தை வெண்மையாக மாற்ற நாம் சாப்பிட கூடிய பழங்களே போதும்.

அதில் குறிப்பாக மாதுளை பழத்தை வைத்தே முக பருக்கள் முதல் முக கருமை வரை அனைத்து பிரச்சினையையும் தீர்த்து விடலாம். மாதுளை உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லதோ, அதே அளவிற்கு முகத்தின் அழகிற்கும் இது நல்லது. வாங்க, எப்படி பயன்படுத்தணும்னு பார்ப்போம்

மகத்துவம் பெற்ற மாதுளை..! மாதுளையில் பல்வேறு சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதய நோய்கள், மாதவிடாய் பிரச்சினை, ரத்த சோகை போன்ற எண்ணற்ற பிரச்சினைக்கு அருமையான தீர்வை இது தரும். இதனை நாம் சாப்பிட்டாலும் முகத்தில் பூசினாலும் அருமையான பலனை தரும்.

மாதுளையின் சத்துக்கள்… இந்த செக்க செவந்த பழமான மாதுளையில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவைதான் முகத்தை அழகாக மாற்றுகிறது. இதில் உள்ள சத்துக்கள் இதோ…

கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் வைட்டமின் சி வைட்டமின் கே பொட்டாசியம் சோடியம்

பருக்களை ஒழிக்க முகத்தில் உள்ள பருக்களை முற்றிலுமாக அழிக்க இந்த குறிப்பு உதவும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே போதும்

தேவையானவை :- யோகர்ட் 1 ஸ்பூன் கிரீன் டீ 1 ஸ்பூன் மாதுளை 1 ஸ்பூன் ‘ தேன் 1 ஸ்பூன்

செய்முறை :- மேற்சொன்ன பொருட்களை எல்லாம் எடுத்து கொண்டு, ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் பருக்கள் விரைவிலே மறைந்து விடும்.

வெண்மையான முகத்திற்கு முகத்தை வெண்மையாக மாற்ற இந்த முக பூச்சு எளிமையாக உதவும். இதற்கு தேவையானவை…

மாதுளை 3 ஸ்பூன் யோகர்ட் 2 ஸ்பூன் ஓட்ஸ் 3 ஸ்பூன் தேன் 3 ஸ்பூன்

செய்முறை :- முதலில் ஓட்ஸை மாதுளையுடன் சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு இந்த கலவையுடன் தேன் மற்றும் யோகர்ட் சேர்த்து மீண்டும் அரைத்து கொண்டு முகத்தில் பூசி கொள்ளவும். 20 நிமிடம் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவவும். இந்த குறிப்பு உங்களின் முகத்தில் உள்ள கருமையை நீக்கி வெண்மை பெற செய்யும்.

இளமையான முகத்திற்கு முகத்தை இளமையாக வைத்துக் கொள்ள இந்த மாதுளை குறிப்பு ஒன்றே போதும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தாலே நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

தேவையானவை :- மாதுளை 3 ஸ்பூன் பப்பாளி 2 துண்டு

செய்முறை :- முதலில் பப்பாளியை நன்றாக அரைத்து கொள்ளவும். அடுத்து, மாதுளை அரைத்து கொண்டு சாற்றை மட்டும் எடுத்து கொள்ளவும். பிறகு இவை இரண்டையும் கலந்து முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நீண்ட நாட்கள் இளமையாக இருக்கலாம்.

பொலிவான முகத்திற்கு முகம் மினுமினுவென மின்ன வேண்டுமென்றால் அதற்கு இந்த குறிப்பு மிகவும் உதவும்

தேவையானவை :- மாதுளை தோலின் பொடி 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு 1 ஸ்பூன் பன்னீர் 2 ஸ்பூன்

செய்முறை :- முதலில் மாதுளையின் தோலை நன்கு உலர வைத்து கொண்டு, பொடியாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த பொடியுடன் எலுமிச்சை சாறு, பன்னீர் சேர்த்து கலந்து கொண்டு முகத்தில் பூசவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். இதை வாரத்திற்கு 1 அல்லது 2 முறை செய்து வந்தால் முகம் மினுமினுப்பாகும். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக அழகிற்கும் உதவுங்கள்.
cvpic5 1540987094

Related posts

உங்களுக்கு தெரியுமா முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் பசையைப் போக்க சூப்பர் டிப்ஸ்!

nathan

முகத்திற்கு புத்துணர்ச்சி தரும் ஐஸ் மசாஜ்

nathan

தினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்!

nathan

இவ்வாறுஅரைத்து அம்மைத் தழும்புகளுக்கு பூசி, ஊறவைத்து கழுவ அம்மைத் தழும்புகள் மறையும்.

nathan

முகம் பளபளப்பாக…சூப்பர் டிப்ஸ்…

nathan

முகத்தில் உள்ள அழுக்குகளை முற்றிலும் வெளியேற்ற உதவும் 6 பொருட்கள்!

nathan

முகம் பொலிவடைய வேண்டுமா?

nathan

சருமத்தை பளபளப்பாக்க உதவும் சாக்லேட் மாஸ்க்…!! சூப்பர் டிப்ஸ்

nathan

ஒரே மாதத்தில் பருக்கள், கருவளையங்கள் மற்றும் சுருக்கங்களைப் போக்கும் அற்புத ஃபேஸ் பேக்!

nathan