28.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
01958
தலைமுடி சிகிச்சை

நீங்கள் தலைக்கு எண்ணெய்க்கு பதிலா ஹேர் ஜெல் யூஸ் பண்றீங்களா?அப்போ கட்டாயம் இத படிங்க!

நாம் எங்கே கிளம்பினாலும் நாம் போடும் மேக்கப் லிருந்து கூந்தல் வரைக்கும் களையாமல் இருப்பதையே விரும்புவோம். ஆனால் பெரும்பாலும் இது நடப்பதில்லை. இதனால் என்ன செய்கிறோம் எப்பொழுதும் சில மேக்கப் பொருட்களை நம் கைப்பையில் எடுத்துச் செல்கிறோம். இதே மாதிரி நிறைய பெண்கள் தங்கள் கூந்தல் அலங்காரம் களையாமல் இருக்க ஹேர் ஜெல், ஹேர் ஸ்டைலிங் கருவிகளை எப்பொழுதும் உடன் வைத்து இருப்பார்கள்.

இதை அடிக்கடி கூந்தல் களையாமல் இருக்கவும் பயன்படுத்துவார்கள். இந்த ஹேர் ஜெல்லின் நன்மைகள் பற்றி நம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் இதனால் நிறைய தீமைகளும் ஏற்படுகிறது. அதைப் பற்றி உங்களுக்கு தெரியுமா. சரி வாங்க பார்க்கலாம்.

ஹேர் ஜெல் எதற்கு பயன்படுகிறது? ஹேர் ஜெல் ஒரு ஹேர் ஸ்டைலிங் பொருளாகும். இது முடியை கடினமாக்கி உங்களுக்கு ஹேர் ஸ்டைல் களையாமல் இருக்க உதவுகிறது. இதில் ஒரு ப்ளாஸ்டிக் பொருளான பிவிபி என்ற பாலிமர் சீலர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹேர் ஜெல் நீரில் கரைந்து முடியை முடியை ஒன்றுடன் ஒன்று இணைத்து அதை கடினமாக்குகிறது. இந்த ஹேர் ஜெல்லை நீருடன் சேர்த்து அப்ளே செய்யும் போது அதிலுள்ள பாலிமர் நீரை உறிஞ்சி கொண்டு இந்த வேலையை செய்கிறது. கூந்தலை அழகுபடுத்துவதில் இந்த ஹேர் ஜெல் பெரிய பங்கு வகிக்கிறது. எனவே தான் அதன் பக்கவிளைவுகளையும் நாம் அறிந்து வைத்திருப்பது முக்கியமானது.

பக்க விளைவுகள் வறண்ட மற்றும் ஈரப்பதமின்மை உங்களுக்கு தெரியாது இந்த ஹேர் ஜெல்லில் ஆல்கஹால் மற்றும் அரிக்கும் கெமிக்கல் பொருட்கள் சேர்ந்துள்ளன. இவை கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கூந்தலை வறட்சி ஆக்கி விடும். இதனால் கூந்தல் பிளவுபட்டு உடைந்து உதிர ஆரம்பித்து விடும். அதிகமாக பயன்படுத்தும் போது தலையில் அரிப்பு, வறண்ட சிக்கலான கூந்தலை கூட ஏற்படுத்தி விடும்.

பொடுகு இந்த ஹேர் ஜெல்லை அதிகமாக பயன்படுத்தும் போது பொடுகு தொல்லை ஏற்படுகிறது. தலையில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியாக்கி அரிப்பு, தோல் உரிதலை உண்டாக்கி பொடுகு தொல்லை யை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் தலையில் எண்ணெய் பசை(சீபம்) சுரப்பது பாதிப்படைதல், தோல் உரிதல், வலுவிழந்த வேர்க்கால்கள், ஆரோக்கியமற்ற கூந்தல் போன்றவை விளைகிறது.

கூந்தல் நிறமாற்றம் இதைத் தவிர கூந்தலை நிற மாற்றவும் செய்து விடுகிறது. கூந்தலுக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காததால் கூந்தலின் pH அளவு மாறி கூந்தல் நிறமாற்றம் அடைந்து விடுகிறது. சீக்கிரம் கூந்தலின் நிறம் மங்கி விடும்.

கூந்தல் உதிர்வு இந்த ஹேர் ஜெல்லால் ஏற்படும் வறட்சி, கூந்தல் பிளவு, வலுவிழந்த வேர்க்கால்கள், பொடுகு இப்படி எல்லா பிரச்சினைகளும் சேர்ந்து கூந்தல் உதிர்வை ஏற்படுத்தி விடும். இதனால் உங்களுக்கு அதிகப்படியான கூந்தல் உதிர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

முடிவு எனவே அடுத்த தடவை நீங்கள் ஹேர் ஜெல்லை பயன்படுத்தும் போது அதன் நன்மை தீமைகளை அறிந்து பயன்படுத்துங்கள். அதுவே உங்களுக்கு நல்லது. மேலும் அடிக்கடி ஹேர் ஜெல்லை பயன்படுத்துவதை தவிர்த்து ஆரோக்கியமான கூந்தலை பெறுங்கள்.

01958

Related posts

வலிமையான மற்றும் அடர்த்தியான தலைமுடி வேண்டுமா? இதோ அற்புதமான எளிய தீர்வு

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…தலை ரொம்ப அரிக்குதா? உடனே அரிப்பை போக்கும் ஒரு துளி சாறு!

nathan

தலை முடி உதிராமல் நன்கு வளர

nathan

முயன்று பாருங்கள் கருமையான தலைமுடி பெற கருப்பு மிளகு பயன்படுத்துங்கள்…

nathan

நீளமாக கூந்தல் வளர உதவும் இயற்கை ஷாம்பு பூந்திக் கொட்டை !!சூப்பர் டிப்ஸ்

nathan

ஒரு கைப்பிடி வேப்பிலை உங்க பொடுகை நிரந்தரமா போக்கிடும்!! எப்படி தெரியுமா முயன்று பாருங்கள்?

nathan

வெயில் காலத்தில் தலையை பராமரிக்கும் விதம் !அழகின் ரகசியம்!!

nathan

ஷாம்புவுடன் உப்பு சேர்த்து குளித்தால், மிகப்பெரிய தலைமுடி பிரச்சனை நீங்கும் என தெரியுமா?

nathan

தலைமுடியை வலிமையாக்கும் வீட்டு வைத்தியம்

nathan