40792379
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா அட்ட கருப்பா இருந்தாலும் அசத்தலான கலராக மாற்றிடும் புதினா…

நம்முடைய முகத்திற்கு அழகு சேர்ப்பதில் கண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படி இருக்கையில் கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால் என்னவாகும்.

கண்டிப்பாக உங்கள் கண்களைப் போலவே உங்கள் முகமும் களையிழந்து போய்விடும் அல்லவா.இந்த கருவளையம் நிறைய காரணங்களால் ஏற்படுகிறது.

காரணங்கள்
மன அழுத்தம்

சுற்றுப் புற மாசுக்கள்

அதிகமாக மது அருந்துதல் மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம்

ஹார்மோன் பிரச்சினை

வயதாகுதல்

இப்படி நிறைய காரணங்களால் உண்டாகும் கருவளையத்தை நீங்கள் மேக்கப் போட்டு மறைக்க மட்டுமே முடியும். ஆனால் இது உங்களுக்கு ஒரு நிரந்தர தீர்வு கொடுக்காது. எனவே உங்கள் கருவளையத்தை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்றால் இயற்கை முறையை பின்பற்றுவது சிறந்தது.

கருவளையத்தை மறைக்கும் க்ரீம்கள் இந்த கருவளையத்தை மறைக்க நிறைய க்ரீம்கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லா வகை சரும வகைக்கும் சிறந்ததாக இருப்பதில்லை. எனவே எல்லாருக்கும் ஏற்ற விலை மலிவான ஒரு முறை என்றால் அது புதினா இலையைக் கொண்டு கருவளையத்தை போக்குவது.

புதினா இலை புதினா இலை இயற்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டது. இதனால் கண்களுக்கு கீழே உள்ள கருவளையப் பகுதிகளில் இதை அப்ளே செய்யும் போது கருவளையத்தை எளிதாக போக்குகிறது. மேலும் இதிலுள்ள விட்டமின் சி சருமத்தின் நீட்சித் தன்மையை மேம்படுத்துகிறது.சரி வாங்க இதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இப்பொழுது பார்க்கலாம்

புதினா இலை, தக்காளி மற்றும் லெமன் தக்காளி மற்றும் எலும்பிச்சை யில் உள்ள ப்ளீச்சிங் தன்மை சருமத்தில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.

பயன்படுத்தும் முறை 1/2 தக்காளி பழம் மற்றும் கொஞ்சம் புதினா இலைகளை அரைத்து அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். சிறுதளவு உப்பும் சேர்த்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து காய விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் உங்கள் கருவளையம் நீங்கி கண்கள் அழகு பெறும்.

புதினா மற்றும் உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு சருமத்திற்கு நிறத்தை தருவதோடு ப்ளீச்சிங் வேலையையும் செய்கிறது.

பயன்படுத்தும் முறை உருளைக்கிழங்கு மற்றும் ஒரு கைப்பிடியளவு புதினா இலையை எடுத்து கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை தோலுரித்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்பொழுது இரண்டையும் நன்றாக அரைக்கவும். இப்பொழுது ஒரு காட்டன் பஞ்சில் இந்த பேஸ்ட்டை நனைத்து பிரிட்ஜில் வைத்து விடுங்கள். இப்பொழுது இந்த காட்டன் பஞ்சை கண்களில் வைத்து 15-20 நிமிடங்கள் காத்திருக்கவும். பிறகு சாதாரண நீரில் கழுவவும்.

புதினா இலைகள் மற்றும் லெமன் ஜூஸ் இது ஒரு எளிதான முறையும் கூட.

பயன்படுத்தும் முறை ஒரு கைப்பிடியளவு புதினா இலைகளை எடுத்து நன்றாக அரைக்கவும். அதனுடன் சில துளிகள் லெமன் ஜூஸ் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்பொழுது இந்த பேஸ்ட்டை கண்களுக்கு கீழே அப்ளே செய்து 20 நிமிடங்கள் உலர விடுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவி துடைத்து விடுங்கள்.

புதினா மற்றும் ரோஸ் வாட்டர் ஒரு கைப்பிடியளவு புதினா மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து அரைத்து கொள்ளுங்கள். இந்த கலவையை பிரிட்ஜில் கொஞ்ச நேரம் வைக்கவும். காலையில் இந்த கலவையை எடுத்து வடிகட்டி ஒரு பஞ்சில் நனைத்து கண்களில் வைத்துக் கொள்ளுங்கள். 15 நிமிடங்களுக்கு பிறகு சாதாரண நீரில் கழுவவும். இதை தொடர்ச்சியாக செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

புதினா இலை, கடலை மாவு மற்றும் மஞ்சள் இந்த முறை சருமத்தில் தேங்கியுள்ள அழுக்குகளை நீக்கி சருமத்தை பளிச்சென்று ஆக்குகிறது. இப்பொழுது புதினா இலைகளை சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.

பயன்படுத்தும் முறை 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை கண்களுக்கு கீழே அப்ளே செய்து 15 நிமிடங்கள் வையுங்கள். பிறகு சாதாரண நீரில் கழுவவும்.

மேற்கண்ட முறைகள் மூலம் உங்கள் கருவளையத்தை போக்கி பளிச்சென்ற கண்களை பெறலாம். ட்ரை பண்ணி பாருங்க.

40792379

Related posts

சரும பொலிவுக்கு களிமண் பேஸ்பேக்

nathan

சூப்பர் டிப்ஸ்! வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு இயற்கை அழகு குறிப்புகள்…!!

nathan

தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்

nathan

இதோ ஒரே இரவில் கண்களைச் சுற்றி அசிங்கமாக இருக்கும் கருவளையங்களைப் போக்கும் வழிகள்! சூப்பர் டிப்ஸ்……..

nathan

உங்களுக்கு இயற்கையான முறையில் முகம் பட்டு போல மின்னவேண்டுமா…?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

இதோ எளிய நிவாரணம்! முகத்தில் திடீரென்று தோன்றும் பருக்களை விரட்ட இந்த ஒரு உணவு பொருள் போதும்!

nathan

முகத்தில் உள்ள முடியை நீக்கும் அழகு குறிப்புகள்

nathan

கருமையாக மாறிய சருமத்தின் நிறத்தை சரிசெய்ய சூப்பர் டிப்ஸ்…..

nathan

முகச் சுருக்கத்தை போக்கி, என்றும் இளமையாக இருக்க வேண்டும் என ஆசையா?

nathan