24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
Permanent treatment for pimples is only few weeks
முகப் பராமரிப்பு

உங்களுக்கான தீர்வு முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை சில வாரங்கள் மட்டுமே

தற்பொழுது தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

முகப்பருக்களுக்கு நிரந்தர சிகிச்சை சில வாரங்கள் மட்டுமே
முன்பெல்லாம் முகப்பருவுக்கு சிகிச்சை செய்து கொள்வது என்பது தேவையற்ற ஒன்றாகக் கருதப்பட்டது. சரியான மருந்து, மாத்திரைகள் இல்லாததும் அதற்கு ஒரு காரணம். ஆனால் “இந்த வயதில் வருவது தானே” என்ற எண்ணம் தான் முக்கியக் காரணம். ஆனால் இன்று நிலைமையோ தலைகீழ். மாசு மருவற்ற தோலை மையப்படுத்தி ஊடகங்களில் வரும் கவர்ச்சியான விளம்பரங்கள். தங்கள் முகத்தைப் பொலிவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற இன்றைய தலைமுறையினரின் ஆசை.

முகப்பருக்களுக்கு சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தழும்புகள் ஏற்பட்டு விடக் கூடாது என்று பெற்றோரையும் ஒப்புக்கொள்ள வைத்துவிட்டன. ஆனால் எங்கு செல்வது? என்ன சிகிச்சை செய்து கொள்வது என்று தெளிவாக தெரியாத காரணத்தால் விளம்பரங்களில் பார்த்த களிம்புகள், நண்பர்கள் உபயோகிக்கும் களிம்புகள் மருந்துக் கடையில் சென்று தானாக வைத்தியம் செய்தல் என்று பல வகையிலும் தவறான தேவையற்ற சிகிச்சைகளில் சிக்கி வருகின்றனர். இதன் உச்சகட்டம் “ஸ்டீராய்டு” களிம்புகளை வாங்கி முகத்தில் பூசிக்கொள்வது தான்.

இந்தப் பழக்கம் தற்போது கல்லூரி மாணவ, மாணவிகள் மத்தியில் அதிகமாகப் பரவி வருவது தான் சோகம். முதல் சில நாட்கள் முகத்தைச் செயற்கையாகப்பொலிவு பெறச் செய்யும். இந்தக் களிம்புகள் போகப் போக முகத்தில் கட்டிகள், குழிகள், தழும்புகள் என்று முகத்தை நிரந்தரமாக சிதைக்கும் தன்மை கொண்டவை.

முகப்பரு ஏற்படுத்தும் மன உளைச்சல் மற்றும் தன்னம்பிக்கைக் குறைவு ஆகியவற்றை மறுக்க முடியாது. அதே நேரம், முகப்பருக்களுக்கு நிரந்தர தீர்வு தரும் ஐஸோட்ரெடினாயின் மாத்திரைகள் மற்றும் சில புதிய மாத்திரை மருந்துகளின் வருகையினால் முகப்பருக்களை நிரந்தரமாக குணப்படுத்தி, தழும்புகளை ஏற்படுவதைத் தடுக்கலாம். ஆனால் இந்த புதிய மருந்து மாத்திரைகள் சரியாகப் பயன்படுத்த ஒரு தோல் டாக்டரால் மட்டுமே முடியும். ஆகையால், முகப்பருக்களுக்கு முறையாகத் தேர்ச்சி பெற்ற தோல் டாக்டரை அணுகுவதே ஒரே தீர்வு.

பருத் தழும்பு:

பருக்கள் ஏற்பட்ட போது சரியான சிகிச்சை பெறாமல் பருத்தழும்புகளால் சீரழிக்கப்பட்ட முகங்களுக்கும் நவீன தோல் சிகிச்சை முறைகளான லேசர் முகப்பொலிவு சிகிச்சை ஆகியவை மூலம் இழந்த முக அழகைப் பெருமளவு திரும்பப் பெற முடியும். இதற்கும் தோல் டாக்டரே தீர்வு.

தற்பொழுது 20 வார தொடர் சிகிச்சையை முறைப்படி எடுத்துக் கொண்டால், பருக்களை நிரந்தரமாக குணப்படுத்த முடியும். எனவே தழும்புகள் ஏற்படும் முன்பே சிகிச்சை செய்து பருத்தழும்புகள் ஏற்படுவதை முற்றிலும் தவிர்க்கலாம்.

Permanent treatment for pimples is only few weeks

Related posts

beauty tips? முக அழகிற்கு ஆரஞ்சு தோல் எவ்வாறு பயன்படுகிறது தெரியுமா…?

nathan

உங்களுக்கு பிரகாசமான முகம் வேண்டுமா? ‘ஆல்கஹால் ஃபேசியல்’ முயன்று பாருங்கள்!!!

nathan

வாழைப்பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை முயன்று பாருங்கள்!…

sangika

பளிச்சென்ற முகத்திற்கு

nathan

வாரம் முழுவதும் சரியா தூங்காம கருவளையம் வந்துடுச்சா? அதைப் போக்க சில டிப்ஸ்…

nathan

கற்றாளையைப் பயன்படுத்தி சருமத்தின் பொலிவை பேண முடியும்.

sangika

முகத்தை பளபளப்பாக்குவதற்கு ஒரு துளி தயிர் போதும் தெரியுமா?

nathan

மூக்கில் வரும் கரும்புள்ளியை போக்கும் ஃபேஸ் பேக்

nathan

தினமும் நைட் படுக்கும் முன், இந்த க்ரீம்மைத் தடவினால், சீக்கிரம் வெள்ளையாகலாம்!

nathan