24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
053.800.668.160.90 2
முகப் பராமரிப்பு

அழகான கொழுக்கொழு கன்னங்களை பெற சூப்பர் டிப்ஸ்….

ஒருசிலருக்கு கன்னங்கள் மிகவும் ஒட்டிப்போய் அவர்களின் அழகை கெடுப்பதை போன்று தோற்றமளிக்கும். இன்னும் சிலருக்கு கன்னத்தில் பருக்கள் அதிகமாக இருக்கும்.

இது போன்ற பாதிப்புகளை தடுத்து, அற்புத பலனை பெறுவதற்கு, இயற்கையில் உள்ள சில வழிகளை பின்பற்றி வந்தாலே போதும்.

கன்னங்களின் அழகை அதிகரிக்க என்ன செய்யலாம்?
  • தினமும் அதிகாலையில் எழுந்து இயற்கையாக சுத்தமான காற்றை சுவாசித்தாலே, முகத்தில் ஒருவித புத்துணர்ச்சி மற்றும் பொலிவுகள் மின்னும்.
  • மிதமான சுடுநீரில் சிறிதளவு உப்பு கலந்து 10 நிமிடங்கள் வாய்க்குள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்வதால் கன்னம் அழகாகும்.
  • சந்தனம், மஞ்சள் ஆகிய இரண்டையும் பொடி செய்து, முகம், கை, கால்களில் தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
  • வறண்ட சருமம் உள்ளவர்கள், பால் மற்றும் வெண்ணெய் கலந்து முகம், கை, கால்களில் தடவி வந்தால், சருமத்தின் ஈரப்பதம் அதிகரிக்கும்.
  • எண்ணெய் தன்மை உள்ள சருமத்தினர், வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சை பழச்சாறு, தக்காளிச்சாறு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றுடன் சிறிதளவு தேன் கலந்து உடல் முழுவதும் தடவி வரலாம்.
  • முகப்பரு பிரச்சனை உள்ளவர்கள், வேப்பமரப் பட்டை, மஞ்சள், வெண்ணெய் ஆகிய அனைத்தையும் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பரு மற்றும் தழும்புகள் மறையும்.
  • துளசி சாற்றை தினமும் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பரு தொல்லைகள் ஏற்படாது.
  • முகம் மற்றும் தேவையில்லாத இடத்தில் ரோமம் இருந்தால், அதற்கு சிறிது மஞ்சளைக் குழைத்து முகத்தில் தடவி, ஒரு மணி நேரம் கழித்து கழுவி வர, ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும்.625.0.560.350.160.300.053.800.668.160.90

Related posts

உங்க உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

Homemade Face Mask-Pack For Brightening/Whitening And Glowing Skin

nathan

பளிச் தோற்றத்திற்கு மாம்பழக் கூழ் பேஷியல்

nathan

மூன்றே நாட்களில் கருப்பான முகத்தை வெள்ளையாக்க 8 வழிகள்!

nathan

முகத்தில் பருக்கள் வராமல் இருக்க இந்த குறிப்பு நன்கு உதவும்…..

sangika

எந்த வித சருமத்திலும் முக அழகை பராமரிப்பது எப்படி ?

nathan

இந்த தழும்புகளை எப்படி சரிசெய்யலாம்? வெறும் உப்பு தண்ணியே போதும்!…..

nathan

சென்சிட்டிவ் சருமத்திற்கு ஃபேசியல்

nathan

முகத்தை ப்ளீச்சிங் செய்வதால் உண்மையில் என்ன மாற்றம் நிகழ்கிறது தெரியுமா?

nathan