26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1539154967
சரும பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா வெண்டைக்காயை இப்படி தேய்ச்சிங்கன்னா எவ்ளோ கருப்பான ஆளும் சும்மா தங்கமா ஜொலிப்பீங்க…

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஞாபக சக்தி அதிகரிக்கும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் நம் எல்லோருக்கும் தெரியாத ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது.

அது என்னவென்றால், நம்முடைய முகும் மற்றும் தலைமுடிக்கு அதை பயன்படுத்தி ஆரோக்கியமான சருமத்தையும் தலைமுடியையும் பெறலாம் என்பது தான். சரி வாங்க! அதை எப்படி பயன்படுத்தலாம்னு பாா்க்கலாம்.

வெண்டைக்காய்
வெண்டைக்காயில் உள்ள வைட்டமின் சி உங்களுடைய சருமத்தில் உள்ள சேதங்களையும் அழுக்குகளையும் முற்றிலுமாக நீக்கிவிடும். அதோடு உங்களுடைய சருமத்தின் நிறத்தையும் அதிகரிக்கச் செய்து கலராக்கும்.

வெண்டைக்காய் உங்களுடைய சருமத்தை மாசு மருவற்றதாக சுத்தமாக வைத்திருக்க உதவும். இவ்வளவு நன்மைகள் கொண்ட வெண்டைக்காயை வைத்து எப்படி பேஸ்பேக் செய்யலாம் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்கள்
அதேபோல் வெண்டைக்காயில் ஆன்டி பாக்டீரியல் தன்மை மிக அதிகமாகவே இருக்கிறது. அதனால் இது முகப்பருக்களை சருமத்தில் உண்டாக்கும் பாக்டீரியாக்களோடு போராடி, பருக்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். அதுமட்டுமின்றி, வெண்டைக்காயில் உள்ள வழுவழுப்புத் தன்மை உங்களுடைய சருமத்துக்குத் தேவையான மாய்ச்சரைஸரையும் கொடுக்கும். மேலும் அதிலுள்ள ஆன்டி ஆக்சிடணட்டுகள் சருமத்தை தூய்மையாக்கி, உங்களுக்கு புத்துணர்ச்சியான இளமை ததும்பும் சருமத்தைக் குறைக்கும்.

வெண்டைக்காய் பேஸ்பேக்
தேவையான பொருள்கள்

வெண்டைக்காய் – 5

தயிர் – 1 ஸ்பூன்

செய்முறை

நாலைந்து வெண்டைக்காயை எடுத்து நன்கு சுத்தமாகக் கழுவிக் கொள்ளுங்கள். பின்பு அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ள வேண்டும். காயின் காம்பை மட்டும் நீக்கினால் போதும்.

வெட்டி வைத்த வெண்டைக்காயை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு தண்ணீர் எதுவும் அரைக்கும்போது சேர்க்கத் தேவையில்லை. இந்த அரைத்த கலயை ஒரு சுத்தமான பௌலிற்கு மாற்றிக் கொள்ளுங்கள்.

இந்த அரைத்த வெண்டைக்காய் கலவையுடன் அரை ஸ்பூன் அளவுக்கு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவையிரண்டையும் நன்கு கலந்து கொள்ளுங்கள்.

இப்போது வெண்டைக்காய் பேஸ்பேக் தயார்.

பயன்படுத்தும் முறை

அரைத்து வைத்த பேஸ்பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும். தேவைப்பட்டால் கை, கால்களிலும் அப்ளை செய்யலாம். அரை மணி நேரம் அப்படியே உலரவிட்டு, பின் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும்.

தயிர் ஏன் சேர்க்க வேண்டும்?
இந்த பேஸ்பேக் அதிக பொருள்கள் எல்லாம் பயன்படுத்தவில்லை. வெண்டைக்காயும் தயிரும் மட்டும்தான். ஏன் தயிர் சேர்க்கிறோம் என்று தெரியுமா?

தயிரில் மிக அதிக அளவில் வைட்டமின் பி மற்றும் கால்சியம் நிறைந்திருக்கிறது. அதனால் இது சூரியக் கதிர்வீச்சுக்களால் உண்டாகும் சன் டேனை சரிசெய்வதோடு, சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும்.

வெண்டைக்காய் பேஸ்பேக் 2
தேவையான பொருள்கள்

வெண்டைக்காய் – 5

தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை

முதல் முறையில் கூறியது போலவே வெண்டைக்காயை நன்கு கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். ஒரு பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரையிலும் வேகவிட்டு, பின் அந்த நீரை தனியே வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

வேகவைத்த வெண்டைக்காய் துண்டுகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு, அதனுடன் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை நன்கு மைய அரைத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு பௌலில் மாற்றி, முகத்தில் அப்ளை செய்யுங்கள். அப்படியே அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின் சாதாரண நார்மல் நீரில் முகத்தைக் கழுவி விடலாம். குறிப்பாக, முகபப்ருக்களும் கரும் புள்ளிகளும் அதிகமாக இருப்பவர்கள் இந்த இரண்டாவது முறையைப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

ஏன் தேங்காய் எண்ணெய் சேர்க்கிறோம்?
தேங்காய் எண்ணெய் நம்முடைய சருமத்துக்குத் தேவையான ஈரப்பதத்தைக் கொடுக்கும்.

சருமங்களில் உண்டாகிற சுருக்கங்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது. அதேபோல் சருமத்தில் உள்ளே அடைத்துக் கொண்டிருக்கும் அழுக்குகளையும் கூட தேங்காய் எண்ணெய் வெளியேற்றி விடும்.2 1539154967

Related posts

பதினைந்தே நாட்களில் பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற வேண்டுமா?சூப்பர் டிப்ஸ்

nathan

தேங்காய் எண்ணெயில் ஃபேஸ் வாஷ் அழுக்குகள் வெளியேறி, மிருதுவான சருமமாக பொலிவுடன் இருக்கும்

nathan

உடல் நாற்றம்… எப்படித் தவிர்க்கலாம்?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ப்யூட்டி பார்லருக்கே போகாமல் அழகை எப்படி அதிகரிக்கலாம் ?

nathan

இயற்கையாக மேல் உதட்டில் உள்ள முடியை நீக்க 10 எளிய வழிகள்

nathan

முக பொலிவை மேருகூட்ட இதை தினமும் செய்து வாருங்கள்……

sangika

கரும்புள்ளியை விரைவில் மறையச் செய்யும் 5 தேயிலை மர எண்ணெய் குறிப்புகள் !!

nathan

உங்களுக்கு தெரியுமா கோடையில் உடல் வறட்சியடையாமல் தடுப்பது எப்படி?

nathan

வறண்ட சருமத்தை பாதுகாக்கும் ஆரஞ்சு

nathan