cvr 1539778646
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர கூடிய சுருட்டை முடியை ஆண்கள் பெறுவது எப்படி..?

முடியை பராமரிப்பது சற்றே கடினமான விஷயம் தான், என்றாலும் அதனை நாம் சிறந்த முறையில் பாதுகாத்தால் மட்டுமே அழகான முடியை பெற முடியும். இல்லையேல், உங்களின் முடியின் பொலிவு கெட்டு போய்விடும். சிலருக்கு மிக கருமையான முடி இருக்கும். சிலருக்கு மிக அடர்ந்தியான முடி இருக்கும்.

ஆனால், ஒரு சிலருக்கே இந்த சுருட்டை என்கிற கர்லி ஹேர் இருக்கும். உளவியல் ரீதியாக இந்த வகை முடியை பல பெண்கள் விரும்புவதாக ஒரு புள்ளி விவரம் சொல்கிறது. அப்படி என்னதான் இந்த சுருட்டையில் இருக்குனு யோசிச்சிட்டே இந்த பதிவை படிக்க தொடங்குங்க நண்பர்களே.

சுருட்டை என்கிற கர்லி ஹேர்..!
ஆண்களில் சிலருக்கே இந்த சுருட்டை முடி வளர வாய்ப்பு உள்ளது. இது பரம்பரை ரீதியாக பெரும்பாலும் வளர கூடிய முடி வகையாம். பெண்கள் பலரும் இந்த முடி ரகத்திற்கு மிக பெரிய ரசிகையாக இருப்பதாக அழகியல் நிபுணர்கள் சொல்கின்றனர்.

சுருட்டையை பெற முடியுமா..?
உண்மையில் இந்த சுருட்டை முடியை பெறுவது மிக சுலமபமான விஷயமாகும். முடியின் அழகை இந்த கர்லி ஹேர் அதிகரித்து விடும். அத்துடன் மென்மையான மற்றும் மிருதுவான முடியையும் இது தரும். சுருட்டை முடியை பெற இனி கூற கூடிய டிப்ஸ்களை கடைபிடித்தாலே போதும்.

ஹேர் ஜெல்…
ஆண்களின் முடி கர்லியாக வர வேண்டும் என்றால் அதற்கு சிறந்த தீர்வை தருகிறது இந்த ஹேர் ஜெல். சிறிது ஹேர் ஜெல்லை எடுத்து கொண்டு கைகளில் தடவி முடியில் நன்கு மசாஜ் செய்யவும். பிறகு, ஒரு பென்சிலை எடுத்து கொண்டு சிறிது சிறிதாக முடியை பிரித்து சுருள் போன்று செய்தால் கர்ல்ஸ் வந்து விடும்.

மோரோக்கன் எண்ணெய்
கடைகளில் விற்கும் இந்த எண்ணெய் உங்களுக்கு சுருள் முடியை தரும். இது மிகவும் அதிகமான ஈரப்பதத்தை தர கூடியது. எனவே, தலை முடியின் வறட்சி தன்மை குறைந்து விடும். மேலும், இந்த எண்ணெய்யை தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டு, காலை நேரத்தில் தலையை சீவினால் முடி சுருள் சுருளாக இருக்கும்.

கையே ஆயுதம்..!
முடியை கர்லியாக பெற இந்த முறை எளிதாக உதவும். இதற்கு முதலில் இரண்டாக பிரித்து கொண்டு, ஒரு பக்கத்தை கையால் சுருள் போல் செய்ய வேண்டும். அடுத்து இதே போன்று மறு பக்கத்தில் செய்யவும். பிறகு இரு பக்கத்தையும் ஒன்றாக்கி கொண்டால் கர்லி ஹேர் கிடைத்து விடும். தேவைக்கு தலையில் கிளிப்பை பயன்படுத்தி முடியை பிரித்து கொள்ளலாம்

கர்லி ஷாம்பூ…
இந்த ஷாம்பூவை தலைக்கு தேய்த்து குளிக்க வேண்டும். அந்த நேரத்தில் முடியை சுருள் சுருளாக செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் தலையை அலசவும். அதன் பின் தலையை நன்கு காய வைத்து சீவினால் சுருட்டை முடியை பெற்று விடலாம்.

நுரையை கொண்டு கேர்ள் செய்யலாமே..!
நாம் சுருட்டை முடியை பெற இந்த நுரைகள் கூட நமக்கு உதவும். Foam curler என அழைக்கபடும் ஒரு வித முக்கிய நுரை பொருளை முடிக்கு தடவி சுருளாக செய்யலாம். இது முடியை சுருளாகவும், மென்மையாகவும் மாற்றும்

சுருட்டைகான பயன்கள்..?
முடி பார்ப்பதற்கு சுருட்டையாக இருந்தால் பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக பெண்கள் இதனை பெரிதும் விரும்புவார்கள். சுருட்டை முடி இருந்தால் நீங்கள் தனித்துவம் பெற்றவராக இருப்பீர். மேலும், இந்த வகை முடி மிகவும் சிறப்பான ஹேர் ஸ்டைலாகும். சுருள் முடியை ஆணோ பெண்ணோ வைத்திருந்தால் அதற்கென்று தனி சிறப்பு போதுமே இருக்கும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முடி ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.cvr 1539778646

Related posts

எவ்வளவு முயற்சித்தும் உங்களால் பொடுகை போக்க முடியவில்லையா? அப்ப இத ட்ரை பண்ணி பாருங்க…

nathan

உங்களுக்கு இதெல்லாம் செஞ்சா வழுக்கைத் தலையிலும் முடி வளரும் தெரியுமா!

nathan

கூந்தல் வளர்ச்சியை ஷாம்பு அதிகப்படுத்துமா?

nathan

முடியைக் காப்பாற்ற முக்கிய யோசனைகள்!

nathan

உங்களுக்கு தெரியுமா தலையில் உள்ள எண்ணெய் பசையைப் போக்கும் தக்காளி…

nathan

உங்க தலைமுடி அளவுக்கதிகமா உதிர்ந்து சொட்டையாகுதா? முடி செழித்து வளர 17 ஆயுர்வேத டிப்ஸ்!

nathan

பேன் தொல்லைக்கு மின்னணு சீப்பு

nathan

முடி உதிர்தல், பொடுகு செய்ய வேண்டியவைகள்

nathan

கூந்தல் பிரச்சனைகளைப் போக்கும் கரிசலாங்கண்ணி எண்ணெய்!

nathan