31.1 C
Chennai
Monday, Feb 17, 2025
maxresdefault 3
அழகு குறிப்புகள்சரும பராமரிப்பு

குறைந்த செலவில் புத்துணர்வுடன், அழகாக இருக்க முடியும் ஃபேஸ் பேக் எளிய ஆரோக்கிய முகப் பராமரிப்பு.

கிரீன் ஃபேஸ் பேக்

maxresdefault 3

பலன்கள்: எண்ணெய்ப் பசை நீங்கி, முகம் பளபளக்கும். பருக்கள் நீங்கும். முகம் பளபளப்புடன் காணப்படும்.

லைட் அண்ட் லிக்விடு பேக்

ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் கற்றாழை (Aloe vera) ஆகியவற்றைச் சேர்த்து மிக்ஸியில் அடித்துக்கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி, 20 நிமிடங்கள் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

பலன்கள்: இந்த மாஸ்க்கை முகத்தில் பூசுவதால், வறண்ட தன்மை நீங்கி முகத்துக்குப் பொலிவு கிடைக்கும். இது சருமத்தில் காணப்படும் அதிகப்படியான வறண்ட தன்மையை உறிஞ்சுவதோடு அழுக்கையும் அகற்றும்.

கோக்கனட் மில்க் பேக்

இரண்டு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால், ஒரு டேபிள்ஸ்பூன் பச்சைப் பயறு மற்றும் ஒரு பழுத்த வாழைப்பழம் ஆகியவற்றைச் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துகொள்ளவும். பிறகு இந்தக் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும்.

பலன்கள்: நேச்சுரல் மாய்ஸ்ச்சரைசர் தரும் பேக் இது. மிருதுவாக, மென்மையாகச் சருமம் மாறும். சூரியக் கதிர்களால் பாதித்த சருமத்துக்கு மிகவும் நல்லது.

வொயிட் மாஸ்க்

ஒரு டேபிள்ஸ்பூன் தயிரை, ஒரு டீஸ்பூன் மைதா மாவுடன் நன்கு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரில் முகத்தைக் கழுவலாம்.

பலன்கள்: இந்த வகை ஃபேஸ்பேக் வறண்ட மற்றும் எண்ணெய் சருமத்தினருக்கு ஏற்றது. சருமம் மிருதுவாகும். பளிச்சென்று சருமம் மாறும். இன்ஸ்டன்ட் பொலிவு பெற இந்த ஃபேஸ் பேக் பெஸ்ட் சாய்ஸ்.

மைல்டு ரெட் பேக்

ஒரு டீஸ்பூன் சர்க்கரை, ஒரு டேபிள்ஸ்பூன் தேன், ஒரு பெரிய பழுத்த தக்காளி பழம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

பலன்கள்: முகம் பளிச்சென மாறும். சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றும். எண்ணெய் பசையை நீக்கும். சிறந்த டோனராகச் செயல்படும். இயற்கையாகவே பளபளப்பான சருமம் பெற உதவும்.

ஃப்ரூட்ஸ் மாஸ்க்

ஒரு கப் பழுத்த பப்பாளி, ஒரு கப் பழுத்த வாழைப்பழம், ஒரு டேபிள்ஸ்பூன் பால் பவுடர் ஆகியவற்றைத் தண்ணீருடன் சேர்த்து அரைக்கவும். இந்த விழுதை முகத்தில் தடவ வேண்டும்.  20 நிமிடங்கள் கழித்துத் தண்ணீரால் முகத்தைக் கழுவலாம்.

பலன்கள்: சருமம் புத்துணர்வாகும். ஈரப்பதத்துடன், மென்மையாகவும் இளமையாகவும் காணப்படும். இந்த வகை ஃபேஸ் பேக்கை அடிக்கடி முகத்தில் பூசி வந்தால் தோலில் காணப்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

ஹாஃப் வொயிட் பேக்

ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு எலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்துக் கழுவலாம்.

பலன்கள்: முகம் பளிச்சென மாறும். இந்த பேக்கை வாரத்தில் நான்கு முறை தொடர்ந்து பூசினால் முகத்தில் காணப்படும் கரும்புள்ளிகள் மறையும்.

Related posts

ஆரஞ்சு ஃப்ரூட் பேக் முகத்தை பளபளப்பாக்கும்!….

nathan

இந்தியாவில் கணவன் குறித்த உண்மையை அறிந்து அதிர்ச்சியடைந்த மனைவி!

nathan

இதை நீங்களே பாருங்க.! மாப்பிள்ளைக்கு அந்த உறுப்பு ரொம்ப பெரியதாம்…!! ஒதுங்கிய மணப்பெண்…!!

nathan

இறந்த செல்களை உடனடியாக அகற்றி விட சூப்பர் டிப்ஸ்!…

sangika

முந்திரி பருப்பு தீமைகள் ! இந்த பிரச்சனை இருக்குறவங்க முந்திரி சாப்பிட்டால் நிலைமை ரொம்ப மோசமாயிடுமாம்..

nathan

உதட்டின் மேல்பகுதி கருமையாக இருக்கிறதா

nathan

அழகான சருமம் வேண்டுமா? இந்த பழங்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க…

nathan

உங்களுக்கு தெரியுமா? முகப் பொலிவை அதிகரிக்கும் ட்ராகன்!

nathan

ஆரோக்கியமான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமா? இந்த ஃபேஸ் பேக்குக

nathan