27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
5 1539430303
முகப் பராமரிப்பு

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! முயன்று பாருங்கள்

ஒருவரை வயதானவராக காட்டி கொடுப்பதே இந்த சுருக்கங்கள் தான். சருமம் சுருக்கங்களை பெற்றால் வயதான தோற்றத்தை தரும். சிலர் பார்பதற்கு 40 வயதானவரை போல இருப்பார்கள். ஆனால், அவருக்கு 20 வயதே ஆகும். இந்த வயதான தோற்றத்தை மாற்றி இளமையான தோற்றத்தை தருவதற்கு பழங்கள் நன்கு உதவும்.

அந்த வகையில் இந்த அன்னாச்சி பழம் முதல் இடத்தில உள்ளது. முகத்தை பொலிவு பெற செய்யவும், இளமையாக வைத்து கொள்ளவும் இந்த அன்னாச்சி பழம் பெரிதும் உதவும். இதனை பற்றிய பிளா வகையான குறிப்புகளை இனி இதில் அறிவோம். எப்படி அன்னாச்சி இத்தனை நலன்களை செய்கிறது என்பதை இந்த பதிவில் நாம் அறிந்து கொள்வோம்.

முகச்சுருக்கம் ஏன்..?
உடலில் உள்ள செல்கள் இறக்க தொடங்கினால் சருமத்தின் தோல் சுருங்க தொடங்கும். இந்த சருமம் பார்ப்பதற்கு வயதானவரை போன்ற தோற்றத்தை தரும். இதற்கு காரணமாக இருப்பது நாம் செய்யும் செயல்கள், நாம் உண்ணும் உணவுகள் போன்றவை தான். அத்துடன் முகத்தில் நாம் பயன்படுத்தும் கண்ட கிரீம்களும் ஒரு வகையில் காரணமாக உள்ளது.

மகிமை கொண்ட அன்னாச்சி…!
ஒரு சில பழங்களே எல்லா வகையான சத்துக்களையும் கொண்டிருக்கும். அந்த வரிசையில் அன்னாச்சியும் ஒன்று. இதில் எண்ணற்ற நலன்கள் உள்ளது. குறிப்பாக ஊட்டச்சத்துக்களும், தாது பொருட்களும் நிறைந்துள்ளது.

வைட்டமின் எ வைட்டமின் சி போலேட் கால்சியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் பொட்டாசியம்

மினுமினுப்பான தோற்றத்திற்கு… முகம் மிகவும் மினுமினுக்க வேண்டும் என பல வகையான கிரீம்களை நாம் பயன்படுத்துகின்றோம். இது முகத்தை கெடுக்குமே தவிர மினுமினுப்பாக வைத்து கொள்ளாது. பொலிவான முகத்தை பெற…

தேவையானவை :- பப்பாளி சாறு 2 ஸ்பூன் அன்னாச்சி சாறு 2 ஸ்பூன் தேனி 1 ஸ்பூன்

செய்முறை :- முதலில் பப்பாளி மற்றும் அன்னாச்சியை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த சாற்றுடன் தேன் கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் முத்தை போல மினுமினுப்பாக மின்னுமாம்.

இளமையான முகத்திற்கு… ஆண்கள் தங்களது வேலை பளுவால் முகத்தின் அழகையும், ஆரோக்கியத்தையும் மறந்து விடுகின்றனர். முகத்தில் சுருக்கங்கள் வந்து வயதானவரை போல தோற்றம் அளித்தால் எளிதாக இந்த குறிப்பு அதற்கு உதவும்.

தேவையானவை :- கிரீன் டீ 1 ஸ்பூன் பப்பாளி சாறு 2 ஸ்பூன் அன்னாச்சி சாறு 2 ஸ்பூன் தேனி 1 ஸ்பூன்

செய்முறை :- இளமையான முகத்தை பெற முதலில் பப்பாளி மற்றும் அன்னாச்சியை அரைத்து கொள்ளவும். பிறகு, இந்த கலவையுடன் தேன் மற்றும் கிறேன் டீ சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவினால் முகம் கழுவவும்.

தேங்காய் எண்ணெய்… முகத்தை பொலிவாக வைத்து கொள்ள தேங்காய் எண்ணெய்யுடன் சேர்த்த அன்னாசியை பயன்படுத்தினாலே போதும். முதலில் அன்னாச்சியை நன்கு அரைத்து கொண்டு, பிறகு அதனுடன் தேங்காய் எண்ணையை சேர்த்து முகத்தில் தடவி 15 நிம்டம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக்கும். இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

5 1539430303

Related posts

ஒரு வாரத்தில் ஒளிரும் தோலை பெறவது எப்படி – மற்றும் நாளுக்கு நாள் அதற்கான வழிமுறைகள

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு மாஸ்க் பருக்களால் வந்த தழும்புகளை உடனே மறையச் செய்யும்!

nathan

முகத்தில் அசிங்கமாக இருக்கும் சொரசொரப்பைப் போக்க வேண்டுமா?

nathan

சருமத்தை பாதுகாக்கும் களிமண் தெரப்பி – அற்புதமான எளிய தீர்வு

nathan

அடர்த்தியான புருவம் வேண்டுமா? இதை எல்லாம் ட்ரை பண்ணுங்க

nathan

கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதற்கான காரணங்களும் அவற்றிற்கான தீர்வுகளும்…!

nathan

அரும்பு மீசையின் தொல்லை தாங்க முடியலையா? இதோ சூப்பர் டிப்ஸ்!

nathan

ஆலிவ் ஆயிலை இவ்வாறு முகத்தில் அப்ளை பண்ணுங்கள்… அதிக பலன் கிடைக்கும்…

sangika

முகத்தில் தழும்புகளா?

nathan