24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
women churidar. L styvpf
அழகு குறிப்புகள்

இதோ பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்!

பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.

பெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்

இந்தியாவில் பெண்களை பாரம்பரிய உடைகள் அணியாமல் காண்பது என்பது அரிது. குறிப்பாக பெண்கள் விரும்பி அணியும் ஆடைகளில் ஒன்றான சல்வார் சூட் என்பதை அணியாத பெண்களே கிடையாது எனலாம். சல்வார் சூட் பெண்கள் அணிவதற்கு ஏதுவான, வெகுவான, கச்சிதமான ஆடை வகையாகும்.

இதனை அனைத்து விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் அணிந்து செல்லலாம். எனவே சல்வார் சூட்தான் அணிகின்றோம் என்பவருக்கு பலவிதமான சல்வார் சூட்கள் கிடைக்கின்றன என்பதும் அறிதல் வேண்டும். சல்வார் சூட்கள் என்பதில் 13 முதல் 18 வகையிலானவை உள்ளன. அவற்றில் சிலவற்றை பாருங்கள்.

தோத்தி சல்வார்:- பெண்கள் தோத்தி அணிவதா என்ற கேள்வி, எழும் முன்னறே பல பெண்கள் இதனை தங்கள் விருப்ப ஆடையாக அணிய தொடங்கிவிட்டனர். கீழ் பகுதி பேண்ட் அமைப்பு என்பது பஞ்ச் கச்ச வேஷ்டி அமைப்பு போன்று பிரில் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதன் வேட்டி அமைப்புக்கு ஏற்றவகையில் வண்ணமயமான மேற்புற சட்டை நீளமான குர்தியாக உள்ளது. கை நீண்ட அமைப்புடன், குர்தியின் கீழ் பகுதி சுருக்கங்கள் வைத்து அழகுடன் தைக்கப்பட்டுள்ளன. இது தவிர பிளைன் குர்தியும் தோத்தி சல்வார்க்கு இணையாக கிடைக்கின்றன.

பெட்டல் பேண்ட்:- கண்களுக்கு விருந்தாகும் துலீப் பூக்களை அடிப்படையாக கொண்டது. அகலமாக தொடங்கி கீழ் வர வர துலீப் பூ போன்று குவிந்த வகையில் தைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்புற துணியமைப்பு தைக்கப்படாதவாறு பிரிந்த வகையில் இதழ்கள் போன்ற அமைப்புடன் சுழலவிடப்பட்டுள்ளன. இதழ் வடிவமைப்பு என்பது ஓரப்பகுதி, முன்பகுதி மற்றும் நடுப்பகுதியில் வரும் வகையில் தைக்கப்பட்டு தரப்படுகிறது. இதில் நமது விருப்பம் எதுவோ அதனை வாங்கி கொள்ளலாம். இதற்கு இணையான மேல் சட்டையாக குர்தி (அ) அனார்கலி ஒன்றை அணிந்திடலாம்.

பாட்டியாலா:- பஞ்சாப் பெண்களின் விருப்பமான சல்வார் வகை பாட்டியாலா. அதிக மடிப்புகளுடன் அகலமான வடிவமைப்புடன் இந்த வகை சல்வார் நல்ல காற்றோட்டமான ஆடை வகை. எனவே கோடைகாலத்தில் அணிய ஏற்றதாக உள்ளது.

ஆப்கான் சல்வார்:- இதனை அலாதீன் சல்வார் என்றும் கூறுவர். பாட்டியாலா போன்ற அமைப்புடன் இருப்பினும் இதன் கணுக்கால் பகுதி இறுக்கி பிடித்தபடி மாறுபட்ட பார்டர் உள்ளவாறு தைக்கப்பட்டிருக்கும். மிக அகலமான கால்பட்டை கொண்ட சல்வார்களும் கிடைக்கின்றன. இந்த சல்வாருக்கு அழகே கணுக்கால் பகுதி வண்ணபட்டைதான்.

பலாஸோ:- விதவிதமான பலாஸோ பேண்ட்கள் வருகின்றன. கணுக்கால் பகுதிவரை அகலமான குழல் வடிவில் இந்த பேண்ட் பல பெண்களின் விருப்பமான சல்வாராக உள்ளது. இதனை சுலபமாக அணிய முடியும் என்பதுடன் எந்த விதமான மேல் சட்டைக்கு ஏற்ற இணைப்பாக உள்ளது. குறிப்பாக நீள குர்தி மற்றும் அனார்கலி மேலாடைக்கு ஏற்றதாக உள்ளது.

ஷகாராஸ்:- இது பாகிஸ்தானிய வகை சல்வார், இது பேண்ட் போன்ற அமைப்புடன் அதிக பிரில் கொண்ட பாவாடை அமைப்புடன் உள்ளது. அதாவது இரு கால் பகுதியில் வண்ணபட்டை வைத்து தைக்கப்பட்டிருக்கும். அதிக வண்ணமயமான ஆடை என்பதுடன் சிறப்புமிகு விழாக்களுக்கு அணிய ஏற்ற வகையாகவும் உள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும் போது பாவாடை போன்று தோன்றும் அருகில் வந்தால்தான் அத சல்வார் என்பது தெரியும்.

women churidar. L styvpf

Related posts

கருவளையத்தை போக்கும் குறிப்புகள்: ….

sangika

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க…

sangika

கணவருடன் நெருக்கமாக கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்த காஜல் அகர்வால்

nathan

மீண்டும் சூடுபடுத்தி மட்டும் சாப்பிடாதீங்க! விஷமாகும் 5 உணவுகள்

nathan

அழகு உங்கள் கையில்

nathan

தழும்புகளில் உபயோகப்படுத்த வேண்டியவை மற்றும் கூடாதவை!..

sangika

வரம்பு மீறும் சர்ச்சை நடிகை! குடித்த படியே பீர் குளியல் போட்ட நடிகை….

nathan

உச்சத்திற்கு செல்லும் அதிர்ஷ்ட ராசி யார்?

nathan

அழகு குறிப்புகள்:சரும பாதிப்பை தடுக்க…

nathan