29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
O3 beauty
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

முகத்தில் ஏற்படும் குழிகளை மறைக்க O3 + ஃபேஷியல்

பார்லரில் செய்யப்படும் ஃபேஷியல் மூலமாக, முகத்தில் ஏற்படும் குழிகள் எப்படி சரி செய்யப்படுகின்றன என்பதையும், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு நாமாகவே எப்படி சரி செய்வது என்பதையும் காண்போம்.O3 beauty

முகத்தில் இருக்கும் குழிகளை நீக்க O3+  ஃபேஷியலே சிறந்தது. குழிகள் கம்மியாக இருந்தால் 3 முதல் 4 அமர்வு எடுக்க வேண்டும். அதிகமாக இருந்தால் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும். 3வது அமர்விற்குப் பிறகே முகத்தில் சற்று மாற்றம் ஏற்படத் துவங்கும். துளைகளின் அளவு சிறிது சிறிதாகவே மறையத் துவங்கும்.


பார்லரில் செய்யும் ஃபேஷியல்…

தேவையான பொருட்கள்

கிளன்சிங், ஸ்க்ரப், டிஷ்யூ பேப்பர் மாஸ்க், டோனர், மசாஜ் க்ரீம், ஃபீல் ஆஃப் மாஸ்க்.

1. சாதாரண நீரில் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

2. ஜெல் கிளன்சிங் போட்டு 2 நிமிடம் முகத்தை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும்.

3. ஜெல் ஸ்க்ரப் தடவி மென்மையாக ஸ்க்ரப் செய்து, வொயிட்ஹெட்ஸ், ப்ளாக்ஹெட்ஸ் அதிகமாய் இருந்தால் லேசாக ஸ்டீம் கொடுத்து நீக்கலாம்.   முகத்தில் துளைகள் அதிகம் இருப்பின் ஸ்டீம் தவிர்க்க வேண்டும்.

4. டிஷ்யூ மாஸ்க் போட்டு, போர்ஸ் ரிமூவ் டோனரை ஸ்ப்ரே செய்து 3 நிமிட இடைவெளியில் மாஸ்க்கை நீக்கி சுத்தம் செய்ய வேண்டும்.

5. சீரம் அப்ளை செய்ய வேண்டும்.

6. தொடர்ந்து ஹை ப்ரீக்வன்சி மெஷினால் மின் அலை கொடுக்க வேண்டும்.

7. எலாஸ்டிசிட்டி தன்மைக்காக ஜெல் மசாஜ் க்ரீம் பயன்படுத்தி 20 நிமிடம் முகத்திற்கு மசாஜ் செய்யப்பட வேண்டும்.

8. போர்ஸ் க்ளோசிங் ஜெல்லை ஃபீல் ஆஃப் மாஸ்க் பவுடருடன் இணைக்க வேண்டும்.

9. முகத்தை ஃபீல் ஆஃப் மாஸ்க் தடவி மாஸ்க் செய்ய வேண்டும்.

10. 20 நிமிட இடைவெளி கொடுத்து உலர்ந்த நிலையில் மாஸ்க்கை நீக்க வேண்டும்.

11. ஸ்கின் மாய்ஸ்சரைசிங்குக்காக டே க்ரீம் தடவி, இறுதியாக சன் க்ரீம் அப்ளை செய்ய வேண்டும்.

மேற்குறிப்பிட்ட  ஃபேஷியலை செய்துகொள்ள சற்று கூடுதல் செலவு எடுக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் கொண்டு நாமாக எப்படி  ஃபேஷியல் செய்வது என்பதையும் காண்போம். தோலிற்குத் தேவையான எலாஸ்டிசிட்டி தன்மையினை பாதாம், தயிர், விளக்கெண்ணை, நல்லெண்ணெய் போன்ற வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி கொண்டு வரலாம் என்பதை முன்பே பார்த்திருக்கிறோம். தோலில் எண்ணெய்த் தன்மை இருந்தாலே தோல் மிருதுவாகி, எலாஸ்டிசிட்டி தன்மை இயல்பாக வந்துவிடும்.

வீட்டிலே செய்யும் ஃபேஷியல்…

1. சாதாரண நீரால் முகத்தை சுத்தம் செய்யவும்..

2. அரை ஸ்பூன் லெமனோடு 2 ஸ்பூன் நீரை சேர்த்து, முகத்தை க்ளன்ஸ் செய்யவும்.

3. ஊறவைத்த கசகசாவை தடவி மெல்லிய மசாஜ் கொடுக்கவும்.

4. மிதமான குளிர்ந்த நீர் அல்லது அரிசி களைந்த நீரைப் பயன்படுத்தி சுத்தப்படுத்தவும்.

5. பப்பாளி பழத்துடன், மஞ்சள் பூசணியை மசித்து, முகத்தில் தடவி மசாஜ் கொடுக்கலாம்.

6. ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன், அரை ஸ்பூன் பாதாம் பவுடர் சேர்த்து பேக் போடலாம். சற்று உலர்ந்த நிலையில் மாஸ்க்கை நீக்கி சுத்தம் செய்யவும்.

Related posts

முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தில் உள்ள பிளாக்ஹெட்ஸை எப்படி இயற்கை முறையில் போக்குவது தெரியுமா?

nathan

உங்க மூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை மாயமாய் மறைய சூப்பர் டிப்ஸ்….

nathan

புருவம் அடர்த்தியாக வளர எளிய டிப்ஸ்

nathan

வழுக்கை வராமல் தடுக்க

nathan

இந்த வயசிலும் செம்ம குத்தாட்டம் போடும் கனிகா

nathan

உங்களுக்கு தெரியுமா பிறந்த குழந்தையை தூளியில் தூங்கவைப்பது நல்லதா கெட்டதா?

nathan

குதிக்கால் பராமரிப்புக்கு இயற்கை பராமரிப்பு

sangika

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகள்!!!

nathan