29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
1539078932
முகப் பராமரிப்பு

உங்களுக்கு முகமும் இப்படி சுருங்கி கருத்துப்போயிருக்கா? இதை முயன்று பாருங்கள்..

வயது முதிர்விற்கான ஆரம்ப அறிகுறியாக தோன்றுவது தோல் சுருக்கம். ஆனால் வயது முதிர்வு மட்டுமே சுருக்கம் மற்றும் கோடுகள் தோன்றுவதற்கான ஒரே காரணம் அல்ல.

சருமத்தை ஒழுங்கற்ற முறையில் பராமரிப்பது, மன அழுத்தம், சூரிய ஒளியால் உண்டாகும் சரும சேதம், நீர்ச்சத்து குறைபாடு, போன்றவையும் தோலில் சுருக்கம் உண்டாகக் கூடிய மற்ற காரணிகளாகும்.

எலுமிச்சை சருமத்தில் உள்ள கொலோஜென் உற்பத்தி தடைபடும்போது அல்லது எலாஸ்டின் ஃபைபர் மற்றும் கொலோஜென் சேதமடையும்போது சருமத்தில் சுருக்கம் தோன்றுகிறது. ஆனால் இதற்காக கவலைப்பட வேண்டாம். இன்றைய பதிவில் நாங்கள் உங்களுக்காக இந்த சரும சுருக்கத்தைப் போக்க சில எளிய முயற்சிகளைக் கூறவிருக்கிறோம். அதுவும் மிக எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு மூலப்பொருளான எலுமிச்சையை பயன்படுத்தி சரும சுருக்கத்தைப் போக்குவது எப்படி என்று நாம் இப்போது பார்க்கலாம்.

எலுமிச்சை புளிப்பு சுவை கொண்ட பழம் என்பதால் இதில் வைடமின் சி அதிகமாக இருக்கும். இது கொலோஜென் உற்பத்திக்கு உதவும். மேலும் சருமத்தின் எலாஸ்டிக் தன்மை மேம்படும். எலுமிச்சையை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தின் துளைகள் இறுக்கமடைகிறது. சருமம் பளிச்சென்று மாறுகிறது. நாம் இப்போது சருமத்தில் சுருக்கத்தைப் போக்க எலுமிச்சையை பயன்படுத்தும் முறைகளைப் பார்க்கலாம்.

எலுமிச்சை மற்றும் ஆலிவ் எண்ணெய் தேவையான பொருட்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்

செய்முறை ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாற்றை பிழிந்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் விரல்களால் எடுத்து நெற்றி மற்றும் கண்களுக்கு அடிப்பகுதியில் தடவவும். பத்து நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். ஆலிவ் எண்ணெய்க்கு மாற்றாக பாதாம் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

எலுமிச்சை மற்றும் தேன் தேவையான பொருட்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு’ ஒரு ஸ்பூன் தேன்

செய்முறை தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் தடவவும். பத்து நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை இதனை செய்வதால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் சர்க்கரை தேவையான பொருட்கள் எலுமிச்சை சாறு இரண்டு ஸ்பூன் தூள் செய்யப்பட்ட சர்க்கரை ஒரு ஸ்பூன்

செய்முறை இது ஒரு ஸ்க்ரப் போன்ற தீர்வைத் தரும். ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை மற்றும் சர்க்கரை தூளை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும். முகத்தை நன்றாகக் கழுவிய பின் இந்த கலவையை முகத்தில் தடவவும். உங்கள் விரல் நுனியால் இரண்டு அல்லது மூன்று நிமிடம் சுழல் வடிவத்தில் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு பதினைந்து நிமிடங்கள் அப்படியே விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவவும். ஒரு வாரத்தில் மூன்று முறை இதனைச் செய்யவும்.

எலுமிச்சை மற்றும் யோகர்ட் தேவையான பொருட்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் யோகர்ட்

செய்முறை ஒரு சிறிய கிண்ணத்தில் எலுமிச்சை சாறு மற்றும் யோகர்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி சில நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். பிறகு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவும். பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். ஒரு நாளில் மூன்று முறை இதனை செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.

எலுமிச்சை மற்றும் கிளிசரின் தேவையான பொருட்கள் 5 ஸ்பூன் எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன் கிளிசரின் ஒரு ஸ்பூன் பன்னீர்

செய்முறை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இரவில் உறங்கச் செல்வதற்கு முன் இந்த கலவையை முகத்தில் தெளித்துக் கொண்டு உறங்கச் செல்லவும். மறுநாள் காலை முகத்தைக் கழுவவும். இந்த கலவையை பிரிட்ஜில் வைத்து பாதுகாத்து தினமும் உங்கள் வசதிக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

எலுமிச்சை மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்

தேவையான பொருட்கள் 2 – 3 துளிகள் எலுமிச்சை எண்ணெய் ஒரு ஸ்பூன் வைடமின் ஈ எண்ணெய் ஒரு ஸ்பூன் பாதாம் எண்ணெய் செய்முறை

எலுமிச்சை எண்ணெய், வைட்டமின் ஈ எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய்யை ஒன்றாகக் கலந்து கொள்ளவும். கண்களுக்கு அடியில் மற்றும் முகத்தில் இந்த எண்ணெய்க் கலவையை தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இரண்டு நிமிட மசாஜ் ஒரு இதமான உணர்வைத் தரும். தினமும் இரவு உறங்கச் செல்வதற்கு முன்னர் இதனை செய்து வரலாம்.

1539078932

Related posts

கொரிய பெண்கள் ரொம்ப அழகாக இருக்க ‘இந்த’ விஷயங்கள தான் தெரியுமா?

nathan

முகத்திற்கு பாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், சருமம் நன்கு அழகாக பொலிவுடன் இருக்கும்!…

sangika

பெண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த ஒரு காய் போதும் உங்க முகத்த கலராக்க… எப்படினு தெரிஞ்சிக்கணுமா..?

nathan

உங்களுக்கு தெரியுமா பருக்களினால் ஏற்பட்ட வடுக்களை சரி செய்ய இந்த அரிய வகை மூலிகைகளே போதும்…!

nathan

முக அழகை கெடுக்கும் பிளாக் ஹெட்ஸ்- இதை மட்டும் பயன்படுத்துங்கள்

nathan

முகத்தில் உள்ள சுருக்கங்களை நீக்கி, இளமையாக மாற்றும் அன்னாச்சி டிப்ஸ்..! முயன்று பாருங்கள்

nathan

முகத்தை ஜொலிக்க வைக்க எளிய முறை!…

nathan

எண்ணெய் வழியும் பிரச்னையை தவிர்க்க, இதோ உங்களுக்கு சில அழகு குறிப்புகள்!…

nathan

ஃபேஷியல் செய்யும் முன்னும், பின்னும்…

nathan