இனிப்பு மற்றும் புளிப்பு சுவையை கொண்ட செர்ரி பழம் உடலுக்கு நலம் தரும் ஊட்டச்சத்துக்கள், விட்டமின்கள் மற்றும் தாதுச் சத்துக்களை கொண்டுள்ளது.
மேலும் செர்ரி பழத்தில் பொட்டாசியம், இரும்பு, தாமிரம், துத்தநாகம், மாங்கனீசு போன்ற அத்தியாவசிய தாது உப்புக்கள் நிறைந்துள்ளன.
அந்த வகையில் செர்ரி பழங்களை சரும அழகிற்கு எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
சருமம் மென்மையாக
முதலில் முகத்தை நன்றாக கழுவிய பின்னர் செர்ரி பழத்தை நன்கு அரைத்த பின் முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் சருமம் மென்மையாகவும் பளிச்சென்றும் மாறும்.
எண்ணெய் பசை சருமம்
எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் காய்ந்த செர்ரி பழங்களை அரைத்த பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெய் பசை குறையும்.
அரிப்பு பிரச்சனை
சருமத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை தடுக்க செர்ரி பழங்களை நன்றாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.
கருமை மற்றும் சுருக்கம் மறைய
அரைத்த செர்ரி பழத்துடன் சிறிதளவு தேன் கலந்து அந்த கலவையை முகத்தில் தடவி பின் 30 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரினால் கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மற்றும் சுருக்கம் மறையும்.
வறட்சியான சருமம்
அரைத்த செர்ரி பழங்களுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் வறட்சியான சருமத்தை நீக்கி எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும்.
பளிச்சிடும் சருமம்
முட்டையின் வெள்ளைக் கரு, தேன் மற்றும் செர்ரி பழங்களை ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் வெது வெதுப்பான நீரினால் கழுவினால் சருமம் பளிச்சென்று மாறும்.