26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
2 1538822771
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா பெண்களை கவர்ந்து இழுக்கும் அழகை பெற இவற்றை செய்தாலே போதும்..

முகம் அழகாக வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு இயல்பான ஆசை தான். ஆனால், இதற்காக நாம் ஏராளமான முக பூச்சுகள், கிரீம்கள், போன்றவற்றை பயன்படுத்துவோம். இது எத்தகைய பாதிப்பை உங்களின் முகத்தில் ஏற்படுத்தும் என்பதை நீங்கள் அறிந்திராமலே பயன்படுத்தி வருகின்றிர்கள். இது போன்ற அழகு சார்ந்த பொருட்களில் எண்ணற்ற வேதி பொருட்கள் கலந்திருப்பார்கள்.

எனவே, இவை முகத்தின் முழு நலனையும் பாதித்த விடும். இதற்கு மாற்று என்னவென்று கேட்டால், அவற்றை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். முகத்தை அழகு பெற இந்த பதிவில் கூறும் குறிப்புகளை செய்தால் போதும் நண்பர்களே.

ஆண்களே அதிகம்..!

அழகு என்பது எந்த ஒரு பாலினத்தையும் சார்ந்தது இல்லை. இது பொதுவாகவே எல்லோருக்கும் இருக்க கூடிய முக்கிய உணர்வு தான். பெண்களை விட ஆண்களுக்கே அழகு பெற வேண்டும் என்ற எண்ணம் சற்றே அதிகம் இருப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது.

வெட்கம் தேவையில்லை…!

அழகை மெருகேற்றுவதில் எந்த வித தவறும் இல்லை. பெரும்பாலான ஆண்கள் முகத்தை அழகு செய்ய அதிகம் தயங்குவதாகவும், வெட்கம் கொள்வதாவும் தெரிவிக்கின்றனர். இது உண்மையில் தேவையற்ற ஒன்றாகும். அழகை எந்த விதத்திலும் மூடி மறைக்க வேண்டியதில்லை. இயல்பாகவே உங்களுக்கு பிடித்ததை செய்து வாருங்கள்.

ஆண்களின் பிரச்சினைகள்..? ஆண்கள் பெண்களை காட்டிலும் அதிகம் வெளியில் செல்வதுண்டு. மேலும், அதிக வேளை பளுவாலும் தங்களை பற்றி பெரிதாக எந்த ஒரு அக்கறையும் காட்டுவதில்லை. இதனால் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக

முக பருக்கள் கருவளையம் எண்ணெய் பசை சருமம் முடி உதிர்வு வெள்ளை முடி பிரச்சினை வறட்சியான சருமம்… இவைகள் தான் ஆண்களின் பேரழகை கெடுக்க கூடியவையாகும்.

பருக்களை அழிக்க… முகத்தின் அழகை கெடுப்பதில் முக்கிய இடத்தில் இருப்பது இந்த பருக்கள் தான். முகத்தில் அதிகமாக எண்ணெய் சுரப்பிகள் சுரந்து பருக்களாக உருவாகிறது. இதனை தடுக்க இந்த குறிப்பு உதவும்.

தேவையானவை :- முல்தானி மட்டி 1 டீஸ்பூன் பாதாம் பவ்டர் 1 டீஸ்பூன் ரோஸ் நீர்

செய்முறை :- முதலில் பாதாமை காய வைத்து கொண்டு அவற்றை பொடி ஆக்கி கொள்ளவும். அடுத்து, இவற்றுடன் முல்தானி மட்டி சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த இரு பொடிகளுடன் சிறிது ரோஸ் நீர் சேர்த்து முகத்தில் பூசவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஆண்களின் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்து போகும்.

நரை முடிகளை போக்க… ஆண்களின் மிக பெரிய பிரச்சினையே இந்த நரைகள் தான். நரை ஒன்று இருந்தால் கூட அவை ஆண்களை உறுத்தி கொண்டே இருக்கும். இதனை போக்கவும், இனி நரை முடிகள் வராமல் தடுக்கவும் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

தேவையனவை :- 1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டர்

செய்முறை :- தேங்காய் எண்ணெய்யை கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் காயவிட்டு, பின்பு நெல்லிக்காய் பவ்டரை சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை ஆறவிட்ட பிறகு, 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி முடிகளை நரைகளில் இருந்து காப்பாற்றும். மேலும் இதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் முடியின் வேரை உறுதிப்படுத்தி இளநரைகள் வராமல் காக்கும்.

கருவளையங்கள் போக முகத்தில் உள்ள கருவளையங்கள் நீங்க இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.

தேவையானவை :- பாதாம் பொடி 1 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் பச்ச பால் 2 ஸ்பூன்

செய்முறை :- முதலில் பாதாம் பொடியை பாலுடன் நன்கு கலந்து கொள்ள வேண்டும். அடுத்து இந்த கலவையுடன் தேன் சேர்த்து கொள்ளவும். பிறகு இவற்றை முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். இவ்வாறு வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும்.

நீண்ட இளமைக்கு உங்களின் முகம் மிகவும் இளமையாக இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்த பொருட்களை பயன்படுத்தினாலே போதும். அதற்கு இந்த குறிப்பே போதும்.

தேவையானவை :- வெள்ளரிக்காய் கிரீன் டீ உருளை கிழங்கு

செய்முறை :- முதலில் உருளை கிழங்கு மற்றும் வெள்ளரிக்காயை தனி தனியாக நன்கு அரிது கொள்ளவும். பின் சாற்றை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கிரீன் டீ, மற்றும் இந்த 2 சாறுகளையும் ஒன்றாக சேர்த்து முகத்தில் பூசி ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே விட்டால் இளமையான முகத்தை பெறலாம். இந்த குறிப்பை வாரத்திற்கு 2 முறை செய்து வாருங்கள். இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் அழகிற்கும் உதவுங்கள்.

2 1538822771

Related posts

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கான கோடைக்கால ஃபேஸ் பேக்குகள்

nathan

உங்க 30 வயதில் ஏற்படும் சரும பாதிப்பை சரிசெய்ய எளிய சில டிப்ஸ்!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…பளிச்சென்ற முகத்தைப் பெற வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?

nathan

கொத்தமல்லி இலை முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது.

nathan

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க மஞ்சளை எப்படி பயன்படுத்துவது?

nathan

உங்களுக்கு தெரியுமா பூசணியை வைத்து இப்படியெல்லாம் கூட இளமையான அழகை பெறலாமா…?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகள்!!!

nathan

இரண்டே மாதங்களில் தோல் சுருக்கங்கள் நீங்கி, மேனி பளபளப்பாகிவிட சூப்பர் டிப்ஸ்!….

sangika

முட்டைகோஸ் பேஷியல்

nathan