27.8 C
Chennai
Tuesday, Jan 27, 2026
black circle under eyes home remedies
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…

செல்போன், கணினியை அதிக நேரம் பார்ப்பதால் கருவளையம் வரக்கூடும். இந்த பிரச்சனைக்கு வீட்டிலேயே எளிய முறையில் தீர்வு காண முடியும்.

கருவளையத்தைப் போக்க வீட்டிலேயே செய்யக்கூடிய வழிமுறைகள்…
கருவளையம் வந்தால், முதலில் அதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். மருத்துவர்கள் கண்களை இழுத்துப் பரிசோதிப்பது போல கண்ணாடி முன் நின்று பரிசோதிக்க வேண்டும். கருவளையத்தின் மேல் விரல் வைத்து இழுக்கும்போது, தோல் பகுதி வெள்ளையாக இருந்தால் ஊட்டச்சத்து குறைவு (குறிப்பாக இரும்புச்சத்து) காரணமாக ஏற்பட்ட கருவளையமாக இருக்கலாம். இதுவே கருப்பாக இருந்தால், பிக்மென்ட் அல்லது மரபணுவினால் ஏற்பட்டுள்ள கருவளையமாக இருக்கக்கூடும்.

சிவப்பு தாமரை இதழ்களை அரைத்து, அதன் விழுதில் ஒரு 25 கிராம், விளக்கெண்ணெய் 25 கிராம், தேன் 10 கிராம் எடுத்து எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் இதில் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரை மணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து, பிறகு கழுவி விடலாம்.

திக்கான கிரீன் டீ டிகாக்ஷன் 10 மில்லி எடுத்து, அதில் 5 கிராம் சுருள் பாசி (ஸ்பைருலினா) தூள், 10 சொட்டு லாவண்டர் ஆயில், 10 சொட்டு லெமன்கிராஸ் ஆயில் கலந்து இரண்டு மணி நேரம் திறந்தாற்போல வைக்க வேண்டும். பிறகு, இதை எடுத்து ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் குளிக்கும் முன்பும், இரவு தூங்கும் முன்பும் சிறிது எடுத்து கண்களைச் சுற்றி பேக் போல தடவி, அரைமணி நேரம் கண்களை மூடி ஓய்வெடுத்து… பிறகு, கழுவிவிடலாம்.

கண்ணுக்கு கீழ் வரும் பை: சிலருக்கு கண்ணுக்கு கீழ் சதைப் பை தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு, பாதாம் ஆயில் 2 சொட்டு, விளக்கெண்ணெய் 2 சொட்டு இரண்டையும் கலந்து, கண்ணின் வெளி நுனிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வைத்து அழுத்தி, வெளிப்பக்கமா இழுத்துப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கை விரலால் எண்ணெய்க் கலவையைத் தொட்டு, இழுக்கும் திசையில் வெளிப்பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். ஒவ்வொரு கண்ணுக்கும் 10 – 15 முறை இப்படி மசாஜ் செய்த பின், இரண்டு கண்களையும் மூடி, ஐஸ் தண்ணீரில் நனைத்த திக்கான பஞ்சை அதன் மேல் வைத்து ஐந்து நிமிடம் கழித்து எடுத்துவிட வேண்டும். தினமும் இருமுறை இதைத் தொடர்ந்து செய்துவந்தால், நாளடைவில் கண் பை குறையும்.

black circle under eyes home remedies

Related posts

வறட்சியான சருமத்தை பராமரிக்கும் முறை

nathan

வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம் பேசியல்

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எந்த சருமமாக இருந்தாலும் பயன்தரும் எளிய அழகு குறிப்புகள் !!

nathan

உங்களுக்கு தெரியுமா தேவையற்ற முடிகளை ஷேவ் செய்வதால் ஏற்படும் விளைவுகள்…!!

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…அழகை அதிகரிக்க நினைக்கும் ஆண்கள் அன்றாடம் செய்யும் தவறுகள்!!!

nathan

அழகு கிரீம்கள் நிரந்தர நிறத்தை தருமா?

nathan

சிவப்பழகு சாதனங்கள்

nathan

சிகப்பழகு பெற சூப்பர் டிப்ஸ்… ஒரு பேரிச்சம்பழம் போதும்..

nathan

லெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமா?

nathan