25.6 C
Chennai
Wednesday, Jan 22, 2025
maxresdefault 1
தலைமுடி சிகிச்சை

உங்க நரை முடியை கருமையாக வேண்டுமா?.அப்ப இத படிங்க!

முன்பெல்லாம் 30 வயதில் நரை முடி வரும் தற்போது 20 வயதுகளிலேயே முடி நரைத்துவிடுகிறது.

maxresdefault 1நரைமுடி வர காரணம்:

நீங்கள் உபயோகப்படுத்தும் கெமிக்கல் நிறைந்த ஷாம்பு, கலரிங், நீர், மன அழுத்தம் என பல காரணங்களை சொல்லலாம்.

கீழே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகளை பயன்படுத்தினால் நரை முடி நாளடைவில் கருமையாக மாறும் என்பது உறுதி. தொடர்ந்து உபயோகிக்கும்போது முடி மேலும் நரைக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

அவுரி + மருதாணி :

அவுரி பொடி என்பது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இயற்கையாக இது கருமை நிறத்தை தரும். இதனை தேவையான அளவில் எடுத்து, சம அளவு மருதாணிபொடியுடன் அல்லது மருதாணி இலையுடன் அரைத்து தலையில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்தால் முடி கருமை நிறத்தில் மாறும்.

தேயிலை மாஸ்க் :
தேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரை மணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் த்டவி அரை மணி நேரம் ஊற வைத்து பின் குளித்தால் நரை முடி கறுமையாக மாறும்.

பிராமி + கருவேப்பிலை :

ஒரு கொத்து கருவேப்பிலை + 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பொடி+ 2 டீ ஸ்பூன் பிராமி பொடி ஆகியவற்றை கலந்து அரைத்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் முடியின் வேர்களில் படும்படி தடவுங்கள். பின்பு 1 மணி நேரம் கழித்து தலைக்கு சீகைக்காய் உபயோகித்து குளிக்கவும்.

தேங்காய் எண்ணெய் + எலுமிச்சை சாறு :

தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தலையில் நன்கு தடவுங்கள். இது தலையில் ராசாயன விளைவுகளை ஏற்படுத்தி, முடியை கருமையாக்குகிறது. வாரம் இருமுறை செய்தால் கூந்தல் கருமை நிறத்தில் கண்டிப்பாக மாறும்.

நெல்லிக்காய் எண்ணெய் :
ஒரு இரும்பு வாணிலியில்1 கப் நெல்லிக்காய் பொடியை வறுங்கள்.
அது சாம்பலாகும் வரை வறுத்து அதில் 500 மி.லி. தேங்காய் எண்ணெயை விடவும்.
அடுப்பை குறைந்த தீயிலேயே வைத்திருங்கள்.
20 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைக்கவும்.
இந்த எண்ணையை குளிர வைத்து ஒரு நாள் முழுவதும் அப்படியே வைத்திருங்கள்.
பின்னர் அதனை வடிகட்டி அந்த எண்ணெயை வாரம் ஒருமுறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் நரை முடி நாளடைவில் கருமையாகிவிடும்.

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க…நரைமுடியினை கருமையாக்க கஷ்டப்படுகிறீர்களா?

nathan

ஆண்களே… உங்கள் முகத்திற்கேற்ற சிறப்பான ஹேர் ஸ்டைல் எதுனு தெரிஞ்சிக்கணுமா..? அப்ப இத படிங்க!

nathan

கலரிங் செய்யப்பட்ட முடியில் பளபளப்புத்தன்மையை நீடிக்கச் செய்வது எப்படி?…

nathan

உங்களுக்கு முடி கொட்டும் பிரச்சனை உள்ளதா? நெல்லிக்காய் தைலம் முயற்சி செய்துபாருங்கள்..!!!

nathan

வலுவான முடி வளர்ச்சிக்கு ஹென்னா முடி எண்ணெய் எவ்வாறு பயன்படுத்துவது

nathan

எப்படி பயன்படுத்துவது.?! பொடுகைப் போக்கும் எலுமிச்சை..!

nathan

உங்களுக்கு சுருட்டை முடி இருந்து, முடி சிக்கல் விழும் பிரச்சினை இருந்தால் சிகைக்காய்…

nathan

nathan

பெண்களே…. உங்க நகம் உடையாம பளபளன்னு இருக்கணுமா அப்போ இந்த எண்ணெய் தடவுங்க

nathan