27.8 C
Chennai
Saturday, Dec 13, 2025
tulsi face pack
முகப் பராமரிப்பு

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்? மருத்துவ குணம் நிறைந்த துளசியைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் தயாரித்து, சரும பிரச்சனைகள் நீங்கலாம் என தெரிந்து கொள்வோம்.

சரும பிரச்சனைகளை தீர்க்கும் துளசி பேஸ் பேக்
ஒரு கையளவு துளசி இலைகளை அரைத்து, அத்துடன் 1 முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும். இறுதியில் ரோஸ் வாட்டரில் நனைத்த பஞ்சுருண்டையால் முகத்தைத் துடைத்து எடுங்கள்.

சிறிது துளசி இலைகளை அரைத்து, அத்டன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் காணாமல் போய்விடும்.

சருமத்தை எப்போதும் ஈரப்பசையுடன் வைத்துக் கொள்ள 1 டீஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 2 சிட்டிகை துளசி பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

துளசி இலைகளை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளும் வெளியேற்றப்படும்.

tulsi face pack

Related posts

பெண்களே தெரிஞ்சிக்கங்க… மேக்கப் இல்லாமலேயே அழகாக காட்சியளிக்க வேண்டுமா? இதோ சில அற்புதமான வழிகள்!!!

nathan

கோடையில் வெளியில் சென்று வந்த பின் முகத்திற்கு செய்ய வேண்டியவை

nathan

முகத்தில் தழும்புகளா?

nathan

சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

nathan

கொத்தமல்லி இலை முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைகிறது.

nathan

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால்……

sangika

ஏன் ப்ரைமர் உபயோகப்படுத்தாமல் ஒப்பனை செய்யக்கூடாது என்பதற்கான காரணங்கள்….

nathan

குங்குமப்பூ முகத்தை பொலிவாக்குவதற்கு நாம் கடைபிடிக்கும் வழிகள் உண்மைதானா?

nathan

உங்க முகத்தில் எப்பவும் எண்ணெய் வழியுதா?

nathan