நாம் சாப்பிடுகிற பெரும்பலான உணவுகள் நம் முக அழகை மேப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. முக அழகு என்பது இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இன்றைய காலகட்டத்தில் நம் முக அழகை நாம் பராமரிக்க தவறி விடுகின்றோம். வேலை பளுவால் ஒரு சக்கரத்தை போன்று நாம் ஓடி கொண்டிருக்கின்றோம். இதில் நம்மையும், நமது உடல் ஆரோக்கியத்தையும், முக அழகையும் நாம் தொலைத்து விடுகின்றோம்.
இதற்காக பெரியதாக நாம் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாறாக நம் வீட்டின் சமையல் அறையில் உள்ள சில முக்கிய பொருள்களே போதும். குறிப்பாக நாம் சமையலில் பயன்படுத்தும் மசாலாக்களே போதும். எந்தெந்த மசாலா பொருட்கள் என்பதை இனி தெரிந்து பயன் பெறுவோம் நண்பர்களே.
இந்தியர்களின் மசாலா பொருட்களும் அழகும்..!
தலைப்பே சற்று வித்தியாசமாக இருக்கிறதேன்னு யோசிக்கிறீர்களா..? உண்மைதாங்க… இந்தியர்கள், அவர்களின் சமையல் அறையில் பயன்படுத்தும் பல மசாலா பொருட்கள் பல்வேறு நன்மைகளை தர கூடியதாம். குறிப்பாக முக அழகு முதல் முடியின் அழகு வரை இவை உதவுமாம்.
மசாலாவின் அவசியம்..!
எப்படி உணவில் மசாலாவின் பங்கு முக்கியமோ அதே போன்று அவற்றின் பயன்பாடும் அதி அற்புதமானது என அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் ஆரோக்கியத்தை எந்த அளவு இந்த மசாலா பொருட்கள் மேம்படுத்துகிறதோ, அதே அளவிற்கு முக மற்றும் முடியின் பொலிவிற்கு நன்கு பயன்படும்.
இலவங்கப்பட்டை
இனிமையான வாசனை மற்றும் சுவையை தரும் இலவங்கத்தின் ஏராளமான நன்மைகளை நாம் அறிந்திராமலே இருக்கின்றோம். இவை முகத்தில் உள்ள பருக்களை குணப்படுத்தும் கூடிய அற்புத மருந்தாம். முகத்தின் ரத்த ஓட்டத்தை செம்மைப்படுத்தி பொலிவை அதிகரிக்கும்.
கொத்தமல்லி விதை
சமையலுக்கு எந்த அளவிற்கு இந்த கொத்தமல்லி உதவுகிறதோ, அதே போன்று இவை முகத்தின் அழகை பாதுகாக்கவும் பயன்படும். இதில் வைட்டமின் சி, வைட்டமின் எ, பாஸ்பரஸ், ஜின்க் போன்றவை அதிக அளவில் உள்ளது. இவை முக அழகிற்கு பெரிதும் உதவும். பொலிவு பெற இந்த அழகு குறிப்பு உங்களுக்கு உதவும்.
செய்முறை :-
ஒரு நாள் இரவு முழுவதும் நீரில் நன்கு ஊற வைத்த கொத்தமல்லியை எடுத்து கொண்டு , அவற்றை நன்றாக அரைத்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி வந்தால் முகத்தில் உள்ள அழுக்குகள் சுத்தம் செய்யப்படும். ஒரே இரவில் உங்கள் முகம் பொலிவு பெற்றுவிடும்.
மஞ்சள்
முகத்தை இளமையாக வைத்து கொள்ளும் அற்புத தன்மை இந்த மஞ்சளுக்கு உள்ளது. குளிக்கும்போது மஞ்சளை முகத்தில் தேய்த்து குளித்தால் பளபளவென மாறலாம். மேலும், தேனுடன் மஞ்சளையும் கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தால் முகம் இளமையாக இருக்கும்.
இஞ்சி
முகத்தில் உள்ள செல்களை புத்துணர்வூட்டும் தன்மை இந்த இஞ்சிக்கு உள்ளது. மேலும், இது முக நிறத்தையும் வெண்மை பெற செய்யும். இஞ்சியை நன்றாக அரைத்து கொண்டு சிறிது நேரம் முகத்தில் பூசி எடுத்து விட்டால் முகத்தின் நிறம் மாறி இருக்கும்.
கருப்பு மிளகு
முகத்தின் அழகை கெடுக்கும் முகப்பருக்களை விரட்டும் அற்புத திறன் இந்த மிளகிற்கு உள்ளது. மிளகை நன்றாக பொடி செய்து கொண்டு, அவற்றுடன் சிறிது தயிர் சேர்த்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில பூசினால் இவை மறைந்து போகும். அத்துடன், முக அழகையும் கூட்டும்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் முக ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.